Published:Updated:

இன்ஃபோசிஸ் பரிதாபங்கள்: இதை அன்றே செய்திருக்கலாம்?! #SmartInvestorIn100Days நாள் - 22

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

இந்த நிறுவனம் சரியாக நடக்கிறது என்று நம்பி, இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்திருந்த பலருக்கும் இப்படி நஷ்டம் ஆகிவிட்டதே. இதற்கு யார் பொறுப்பு?!

இன்றும் இன்ஃபோசிஸ் குறித்துதான் எழுதவேண்டியிருக்கிறது. பிறகு, இந்திய பங்குச் சந்தைகளில் இன்ஃபோசிஸ் பங்குகளின் மார்கெட் கேப்பிட்டலைஷேசன் ஒரே நாளில் 53 ஆயிரம் கோடி அல்லவா காணாமல்போய்விட்டது!

எல்லாம் ஒரே ஒரு இ-மெயில் செய்த வேலை!

நல்ல நிறுவனம், முதலீடு செய்யத் தகுந்த நிறுவனம் என்று பலரும் நம்பியதால்தான், சுமார் 400 மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் இன்ஃபோசிஸ் பங்கை வாங்கி வைத்திருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Share Market
Share Market
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி மட்டுமே இந்நிறுவனத்தின் மொத்தப் பங்குகளில் 6.7 சதவிகிதம் பங்குகளை வைத்திருக்கிறதாம். புரமோட்டர்கள் அனைவரும் சேர்ந்தே 14 சதவிகிதத்துக்கும் குறைவுதான். சுமார் 8 லட்சம் சிறு முதலீட்டாளர்கள் (ரீடெயில்) 5.14 சதவிகித பங்குகள் வைத்திருக்கிறார்கள்.

ஆக, சிறு முதலீட்டாளர்கள், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள்- FII, இந்திய நிறுவன முதலீட்டாளர்கள்- DII, மியூச்சுவல் ஃபண்டு- MF என்று எல்லோரும் இந்த நிறுவனப் பங்குகளை வைத்திருந்ததால், கணிசமான அளவு பணம் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த நிறுவனம் சரியாக நடக்கிறது என்று நம்பி, இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிவைத்திருந்த பலருக்கும் இப்படி நஷ்டம் ஆகிவிட்டதே! இதற்கு யார் பொறுப்பு?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரிக் மற்றும் ஃபைனான்ஸ் தலைமை அதிகாரி நிலஞ்சன் ராய் ஆகிய இருவரும் நிறுவனத்தின் லாபத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக கணக்குகளை மாற்றிக் காட்டுகிறார்கள் என்பதுதான் விசில்புளோயர்களின் முக்கிய குற்றச்சாட்டு. இதனால், இந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக்கிறது.

நிறுவனத்தின் ஆடிட் கமிட்டியிடம் இந்தப் புகார்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. ஆடிட் கமிட்டி, இண்டிபென்டெண்ட் இன்டர்னல் ஆடிட்டர் நிறுவனமான எர்ன்ஸ்ட் & எங் (EY) உடன் புகார் குறித்து கலந்தாலோசிக்கத் தொடங்கியிருக்கிறது. மேலும், விசாரணையை நடத்த, ஷர்டுல் அமர்சந்த் மங்கலதாஸ் & கோ என்ற லீகல் நிறுவனம் ஒன்றை கமிட்டி நியமித்திருக்கிறது என்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சேர்மன், நந்தன் நீல்கேனி பங்குச் சந்தைகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

salil parekh
salil parekh

இப்போது இதையெல்லாம் செய்யும் இவர், செப்டம்பர் மாதம் அப்படி ஒரு மெயில் வந்ததும், `இப்படி வந்திருக்கிறது. விசாரிக்கப்போகிறோம்’ என்று அவராக முன்வந்து வெளியுலகத்துக்கு தெரிவித்திருந்தாரானால் இவ்வளவு கலகமும் நடந்திருக்காது. இன்னும் சொல்லப்போனால், ’ஆகா! இதை வெளியே சொல்லும் அளவுக்கு நேர்மையான நிறுவனம் இது!’ என்று சேர்மன் மீதும் நிறுவனத்தின் மீதும் நம்பிக்கை அதிகரித்திருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படி ஒரு விசில்புளோயர் மெயில் வந்தபின்பும் அதைப்பற்றி வெளியில் சொல்லாமல், அடுத்த காலாண்டு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டு நகர்ந்துவிட்டார்கள். எனவே, இப்போது முதலீட்டாளர்களுக்கு அச்சம் வருவது இயல்புதான்.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்

இந்த நிலையில், அடுத்த நாளான நேற்று (புதன் கிழமை) மீண்டும் வர்த்தகம் தொடங்கியதும், இன்ஃபோசிஸ் பங்குகளின் விலைகள் மேலும் விழுமோ என்ற அச்சத்துடனே முதலீட்டாளர்கள் இருந்தார்கள். தொடக்கம் மோசமாகவே இருந்தாலும் பின்பு சமாளித்து, வர்த்தக நேரத்தின் பெரும்பகுதி நேரத்தில் இன்ஃபோசிஸ் பங்குவிலை முதல்நாளைக் காட்டிலும் உயர்ந்தே இருந்தது ஆறுதலான விஷயம்.

இப்போது கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி, `இந்த விசில்புளோயர் புகாருக்கு இந்த அளவில் விலைவீழ்ச்சி நின்றுவிடுமா?' என்பதுதான்.

நல்ல பங்கு, இந்த விலை பின்னால் கிடைக்காது என்று சிலர் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், புதன்கிழமை அன்று சிறிய ஏற்றம். இனி, புதிதாக ஷார்ட் அடிக்கப் பயப்படுவார்கள். மேலும், விலை ஏறியதும் ஏற்கெனவே ஷார்ட் அடித்தவர்கள் பயந்து கவர் செய்வார்கள். அதனாலும் கொஞ்சம் விலை ஏறலாம்.

ஆனால், இவையெல்லாம் நிரந்தரமா?

அமெரிக்காவில் `ரோசென் லா ஃப்ரிம்’ என்ற நிறுவனம் இருக்கிறது. இது, குளோபல் முதலீட்டாளர்களின் உரிமைகள்குறித்து விசாரிக்கும் நிறுவனம். இன்போசிஸ் `விசில்புளோயர்' புகார் குறித்தும் விசாரிக்கும்.

தற்போது இந்நிறுவனம், `கிளாஸ் ஆக்‌ஷன் லா சூட்’ போட ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறதாம். அதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு இந்தத் தவறான தகவலால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு நஷ்ட ஈடு கேட்குமாம். இஃன்போசிஸ் பங்குகளை அமெரிக்காவில் வாங்கி நஷ்டப்பட்டவர்கள் எங்கள் வலைதளத்திற்கு வாருங்கள். எங்களுடன் இணையுங்கள் என்று தெரிவித்திருக்கிறதாம்.

நம் தேசத்து கண்காணிப்பு ஆணையம், செபி அமைப்பும் இது குறித்து விசாரிக்கும் என்கிறார்கள். இவை குறித்தெல்லாம் மேலும் செய்திகள் வருகிறபோது, இந்தப் பங்கின் விலையில் தாக்கம் இருக்கும். இவற்றை விசாரிக்கப்போய், வேறு சிக்கல்கள் ஏதும் வராமல் இருக்க வேண்டும்.

சலீல் பரிக் மற்றும் நிலஞ்சன் ராயைப் பார்த்தால், இப்படித்தான் எனக்கு கேட்கத் தோன்றுகிறது.

``என்னப்பா... இப்படிப் பண்ணிட்டீங்களேப்பா...!" 🤦

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.