Published:Updated:

பங்குச் சந்தையில் `புட் ஆப்ஷன்', `கால் ஆப்ஷன்' என்றால் என்ன? #SmartInvestorIn100Days நாள்-80

’ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்' - ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!

ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் ஆகிய இரண்டிற்கும் ஒரே அளவு ’மார்க்கெட் லாட்’கள். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட் மார்க்கெட் லாட் 500 என்பது, ஃபியூச்சருக்கு மட்டுமல்ல.

Published:Updated:

பங்குச் சந்தையில் `புட் ஆப்ஷன்', `கால் ஆப்ஷன்' என்றால் என்ன? #SmartInvestorIn100Days நாள்-80

ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் ஆகிய இரண்டிற்கும் ஒரே அளவு ’மார்க்கெட் லாட்’கள். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட் மார்க்கெட் லாட் 500 என்பது, ஃபியூச்சருக்கு மட்டுமல்ல.

’ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்' - ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!

ஃபியூச்சர்ஸ் பற்றி சொல்ல இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அது குறித்து ஒரு தனி புத்தகமே எழுதலாம். அள்ள அள்ள பணம் – 3 – பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் என்று எழுதியிருக்கிறேன். இப்போதைக்கு இந்தத் தொடரில் ஃபியூச்சர்ஸை இத்துடன் விட்டு விட்டு ’ஆப்ஷனுக்கு'ப் போவோம்.

ஆப்ஷன் என்பதும் ஃபியூச்சர்ஸ் போலவே முழுக்க முழுக்க ஒரு ’டிரேடிங் புராடெக்ட்’. இதில் முதலீடெல்லாம் கிடையாது. அதனால் பங்குச் சந்தை பற்றி நன்றாகத் தெரியாதவர்கள் இதைச் செய்ய வேண்டாம்.

கேஷ் மார்க்கெட்டில் ஒருவர் வாங்கிய பங்கு விலை இறங்கினால், டெலிவரி எடுத்து வைத்திருக்கலாம். காத்திருப்புக்குப் பின் அது நன்றாக வந்தாலும் வளரும்.

ஃபியூச்சர்ஸில் வாங்கியது விலை இறங்கிவிட்டால், டெலிவரி கிடையாது. வாங்கிய ‘பொசிஷனை’ குறிப்பிட்ட காலம் வரைதான், ’விலை உயரட்டும்’ என்று காத்திருக்க முடியும். பின்பு, ’ஸ்கொயர் ஆஃப்’ செய்யத்தான் வேண்டும். நிச்சயம் விலை உயரும் என்று தெரிந்தால், கிட்டத்தட்ட அதே விலைக்கு வாங்கிவிட்டு, மீண்டும் காத்திருக்கலாம்.

இப்படி வாங்கியதை ’மாத இறுதி’ வந்ததால்,’ ஸ்கொயர் ஆஃப்’ செய்துவிட்டு, மீண்டும் அதே ’டெரிவேட்டிவ்’வை வாங்குவது, அல்லது விற்று வைத்ததை, ’மாத இறுதி’ காரணமாக வாங்கி நேர் செய்துவிட்டு, உடனே அடுத்த மாத கான்ட்ராக்டிலேயே மீண்டும் அதே ‘டெரிவேட்டிவ்’வை வாங்குவது அல்லது விற்பதன் பெயர், ’ரோல் ஓவர்’ (Roll over).

ஏற்றம், இறக்கம்
ஏற்றம், இறக்கம்
ugurhan

’ரோல் ஓவர்’ என்பதுடன் பழைய ‘பொசிஷ’னைத் தொடர்வது. இப்படியே தங்கள் ‘லாங்’கையோ, ‘ஷார்ட்‘டையோ தொடர்ந்து பல மாதங்களுக்கு ’ரோல் ஓவர்’ செய்வோர் உண்டு. லாபம் கிடைக்கும் வரை விடமாட்டார்கள். அல்லது பெரிய நஷ்டம் ஆனால்தான் விடுவார்கள்.

ஆனால், இந்த ஆப்ஷனில் கேஷ் மார்க்கெட் போல டெலிவரி கிடையாது என்பது மட்டுமல்ல. ஃபியூச்சர்ஸ் போல ரோல் ஓவரும் கிடையாது. லாபமோ நஷ்டமோ, அந்தந்த கான்ட்ராக்டுடன் சரி. பதிவு செய்துவிட்டுப் போகவேண்டியதுதான்.

ஒற்றுமைகள்:

· இரண்டும் சேர்ந்து ஒரு பகுதியில் டிரேட் ஆகும்.

· இவை இரண்டிலும் டிரேட் செய்ய சில கூடுதல் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டுக்கொடுக்க வேண்டும்.

· இரண்டும், குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளுக்கும், ’நிஃப்டி 50’ மற்றும் ’பேங்க் நிஃப்டி’க்கும் மட்டுமே உண்டு.

பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்
பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்

· ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் ஆகிய இரண்டிற்கும் ஒரே அளவு ’மார்க்கெட் லாட்’கள். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட் மார்க்கெட் லாட் 500 என்பது, ஃபியூச்சருக்கு மட்டுமல்ல. ஆப்ஷன் வாங்கினாலும் அதே 500-ன் மடங்குகளாகத்தான் வாங்கலாம், விற்கலாம்.

· இரண்டுக்கும் அடுத்த மற்றும் அதற்கும் அடுத்த என்ற மூன்றுமாத கான்ட்ராக்டுகள்தான்.

வேற்றுமைகள்:

· ஆப்ஷனில் மார்ஜின் பணம் இல்லை. முழுப் பணமும் கொடுத்து வாங்க வேண்டும்.

· பங்குகளின் கேஷ் மார்க்கெட் விலைக்கும், அதே பங்குகளின் ஃபியூச்சர்ஸ் மார்க்கெட் விலைகளுக்கும் இடையே சிறு வித்தியாசம்தான் இருக்கும். ஆனால், அதே நிறுவனப் பங்குகளின் விலைகளைக் காட்டிலும், அவற்றின் ஆப்ஷன் விலைகள் மிகக் குறைவாக இருக்கும். அதனால், வாங்குவதற்கும் விற்பதற்கும் அதிக பணம் தேவையில்லை.

· ஆப்ஷனில் இரண்டு வகை ஆப்ஷன்கள் இருக்கின்றன. முதலாவது, ’கால் ஆப்ஷன்’ (Call Option). அடுத்தது, ‘புட் ஆப்ஷன்’ (Put Option).

· விலை உயரும் என்று வாங்குவது, ‘கால் ஆப்ஷன்’. விலை இறங்கும் என்று வாங்குவது 'புட் ஆப்ஷன்'.

· சந்தையில் பங்குகளுக்கு விலைகள் இருப்பது போல, ஒரே பங்கின் கால் ஆப்ஷனுக்குத் தனியாகவும், புட் ஆப்ஷன்களுக்குத் தனியாகவும் விலைகள் நடக்கும்.

‘கால் ஆப்ஷன்’ - 'புட் ஆப்ஷன்'
விலை உயரும் என்று வாங்குவது, ‘கால் ஆப்ஷன்’. விலை இறங்கும் என்று வாங்குவது 'புட் ஆப்ஷன்'.

· கேஷ் மார்க்கெட்டிலும் பியூச்சர்ஸ் மார்க்கெட்டிலும் சந்தையில் நடக்கும் விலையில் வாங்க வேண்டும், விற்கவேண்டும். வேறு வழியில்லை. ஆனால், ஆப்ஷன் பகுதியில் நாம் வாங்க விற்க நினைக்கும் ’டெரிவேட்டிவ்’ வின் விலையைச் சொல்லி வாங்கலாம்.

என்ன... கொஞ்சம் புரிந்த மாதிரியும் கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்கிறதா? ஆப்ஷன் கொஞ்சம் பெரிய விஷயம்தான். அடுத்த அத்தியாயத்தில் கூடுதல் விவரங்கள் வருகின்றன. அப்போது எல்லாம் புரிந்துவிடும்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.