Published:Updated:

பங்கு விலை போலவே கரன்சி விலையும் தொடர்ந்து மாறும்... ஏன் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள் - 94

கரன்சி வர்த்தகம்
News
கரன்சி வர்த்தகம்

2010 அக்டோபரில் கரன்சி வர்த்தகத்தில் ஆப்ஷன் வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்டது. 2018 பிப்ரவரியிலிருந்து கிராஸ் கரன்சி வர்த்தகமும் சேர்த்துக்கொள்ளப்பட்டது

பங்கு வர்த்தகத்தில் டெரிவேட்டிவ் பகுதியில் எப்படி அசல் பங்குகளையே வாங்கி விற்காமலேயே அவற்றின் விலை ஏற்ற இறக்கங்களில் லாபம் நஷ்டம் பார்க்கலாமோ, அப்படித்தான் கரன்சி டெரிவேட்டிவிலும்! வாங்கலாம் விற்கலாம். ஆனால் எவரும் டெலிவரி கொடுக்க வேண்டாம், டெலிவரி எடுக்க வேண்டாம். அதான் டெரிவேடிவ்ஸ்!

2008-ம் ஆண்டு (ஆகஸ்ட் 29) தேசிய பங்குச் சந்தையில் கரன்சி டெரிவேட்டிவ்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் அமெரிக்க டாலர்கள் மட்டுமே வர்த்தகத்திற்கு அனுமதிக்கப்பட்டுப் பின்பு, ஐரோப்பிய யூனியனின் யூரோ, ஜப்பானிய என் (Yen) மற்றும் பிரிட்டனின் பவுண்ட் ஆகிவையும் அனுமதிக்கப்பட்டன.

2010 அக்டோபரில் கரன்சி வர்த்தகத்தில் ஆப்ஷன் வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்டது. 2018 பிப்ரவரியிலிருந்து கிராஸ் கரன்சி வர்த்தகமும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இப்போது பலவும் சேர்ந்து கனஜோராய் வர்த்தகம் ஆகிக்கொண்டிருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
மார்க்கெட் லாட்கள்!
பியூச்சர்ஸ் மார்கெட்டில் பங்குகளுக்கு இருப்பது போல, கரன்சி வர்த்தகத்திற்கும் மார்க்கெட் லாட்கள் இருக்கின்றன.

அமெரிக்க டாலர், யூரோ மற்றும் பவுண்ட் ஆகியவற்றுக்கு 1000. ஜப்பானிய ’என்’ க்கு மட்டும் 1,00,000. விலை மாற்றங்கள் கால் பைசாவின் மடங்குகளாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு, பிப்ரவரி 4ம் தேதி அமெரிக்க டாலரின் முடிவு விலை, 71,241 ரூபாய்.

பங்குச் சந்தை வர்த்தகம் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9.15 முதல் மாலை 3.30 வரைதான். ஆனால் கரன்சி டெரிவேட்டிவ்ஸ், காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை உண்டு. பங்குகளில் மூன்று மாதங்களுக்கான `கான்ட்ராக்ட்’டுகள் மட்டுமே இருக்கும். ஆனால், கரன்சி டெரிவேட்டிவ்ஸில் 12 மாதங்களுக்கு உண்டு. பிப்ரவரி 2020-ல், ஜனவரி 2021-க்குக் கூட கான்ட்ராக்ட் போடலாம்.

கரன்சி விலை ஏற்றம்
கரன்சி விலை ஏற்றம்

2008-09-ம் ஆண்டில் ஒரு நாளில் தேசிய பங்குச்சந்தையில் மட்டும் நடந்த கரன்சி டெரிவேட்டிவ்ஸ் பணமதிப்பு, 1167 கோடி ரூபாய். 2019-20-ல் தினசரி வர்த்தகத்தின் மதிப்பு 38 ஆயிரம் கோடி ரூபாய். 2018-19ம் ஆண்டில் மட்டும் போடப்பட்ட மொத்த கான்ட்ராக்ட்டுகளின் எண்ணிக்கை 85 கோடி. அவ்வளவு வளர்ச்சி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆமாம், யார் இவ்வளவு வர்த்தகம் செய்கிறார்கள்? ஏன் இவ்வளவு செய்கிறார்கள் என்று கேட்கலாம்.

பங்குகள் விலை தினசரியே ஏறி இறங்குவது போல, இந்த கரன்சிகளின் மதிப்புகளும் பல்வேறு காரணங்களுக்காக மாறுகின்றன. உதாரணத்திற்கு, கடந்த சில நாள்களில் அமெரிக்க டாலர் மற்றும் யூரோ ஆகியவற்றின் மதிப்பு எவ்வளவு ஏற்ற இறக்கம் கண்டிருக்கிறது என்றும், சந்தையில் எவ்வளவு வர்த்தகம் ஆனது என்றும் கீழே இருக்கும் அட்டவணைகளில் பார்க்கலாம்.

யு.எஸ்.டாலர் வர்த்தகம்
யு.எஸ்.டாலர் வர்த்தகம்
யூரோ வர்த்தகம்
யூரோ வர்த்தகம்

மார்க்கெட் லாட் 1000 எனும் போது, ஒரு லாட் அமெரிக்க டாலர் வாங்கினால், 71,241 ரூபாய். ஒரு லாட் யூரோவின் மதிப்பு, ரூ.78,707.50. இவற்றுக்கும் முழுப் பணம் கொடுக்கவேண்டியதில்லை. மார்ஜின் பணம் கட்டினால் போதும்.

பங்குகள் என்றால் அவை இந்திய நிறுவனங்கள் சார்ந்தவை. ஆனால், கரன்சிகள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் பல்வேறு நாடுகளிலும் வாங்கி விற்கப்படும் ஒரு விஷயம். அதனால், உலக அளவில் நடக்கும் பலவும், இவற்றின் விலைகளில் எதிரொலிக்கும்.

ஏற்றுமதி இறக்குமதிகளில் ஈடுபட்டிருப்போர் மற்றும் இன்னும் பல தொடர்புடைய வியாபாரிகளும், அமெரிக்க டாலர் மற்றும் யூரோ போன்றவற்றை அவற்றின் விலைகள் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறபோது வாங்குவார்கள். அல்லது விற்று வைப்பார்கள்.

உதாரணத்திற்கு ஒருவருக்கு அவர் செய்த ஏற்றுமதிக்காக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என்றால், அதன் தற்போதைய மதிப்பு டாலர் விலை 71 என்கிற அளவில் 71 லட்ச ரூபாய். ஆனால், அந்த டாலர்கள் இப்போதே அவர் கணக்குக்கு வராது. வர இன்னும் ஐந்து மாதங்கள் ஆகிவிடும். ஜூலை மாதம் அவர் கைக்கு டாலர் வருகிறபோது டாலருக்கு இதே விலை இருக்குமா என்று சொல்லமுடியாது.

விலை மாற்றம்
விலை மாற்றம்

ஒருகால் இறங்கினாலும் இறங்கிவிடும் என்று அவர் சந்தேகித்தால், அவர் அவர் கையில் இல்லாத லட்சம் டாலர்களை இப்போதே தேசிய பங்குச் சந்தையில் கரன்சி டெரிவேட்டிவ்ஸில், லாட்டுக்கு 1000 வீதம் 100 லாட்டுகள் விற்றுவைக்கலாம். இதன் மூலம் இப்போது நடக்கும் விலை அவருக்கு உறுதியாகிவிடும். அவர் மார்ஜின் கட்டினால் போதும்.

இதன் பின்னர் டாலர் மதிப்பு இறங்கினாலும் அவருக்கு நட்டமில்லை. அவர் கைக்கு வருகிறபோது அவர் அதை அப்போது நடக்கும் விலைக்கே விற்று பணம் பெறலாம். அது குறைவாக இருக்கும்தான். ஆனால் அவர் ஏற்கெனவே கூடுதல் விலைக்கு விற்று வைத்திருந்ததை அதே சமயம் டெரிவேடிவ்ஸ் மார்க்கெட்டில் வாங்கி சரி செய்துகொண்டுவிடலாம். அதில் லாபம் கிடைக்கும். காரணம் அவர் விற்றது, முன்கூட்டியே கூடுதல் விலைக்கு. வாங்குவது குறைந்த விலைக்கு.

இப்படியாக அவர் பிறருக்குப் பின்னால் தர வேண்டிய டாலர்களையும் அது விலை குறைவாக இருக்கும் நேரம் சந்தையில் மார்ஜின் கட்டி வாங்கும் கான்ட்ராக்ட் போட்டுக்கொள்ளலாம். முன்பு செய்தது போலவே, இதிலும் பின்னால் செய்து லாபம் பார்க்கலாம்.

இப்படி செய்வதற்குப் பெயர் ஹெட்ஜிங்!

கரன்சி விலை
கரன்சி விலை

சமயங்களில் கணிப்பு தவறாகிப் போகலாம். இப்போதைய விலை கூடுதல் என்று யோசித்து விற்றுவைத்தபின், ஐந்து மாதங்கள் கழித்து விலை மேலும் அதிகரிக்கலாம். அப்போது வருத்தமாக இருக்கும். காரணம், அவசரப்படாமல் இருந்திருந்தால் கூடுதல் விலை கிடைத்திருக்குமே என்று.

ஆனாலும், முன்கூட்டியே விற்ற விலையாவது உறுதியாக கிடைத்ததே என்று நினைப்போரும் உண்டு. இப்படிப்பட்ட வியாபாரிகள் தவிர பங்குகளில் டிரேட் செய்வது போல, கரன்சிகளில் டிரேட் செய்வோரும் உண்டு.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.