Published:Updated:

நீண்டகால முதலீடு, டிவிடெண்ட் வருமானத்துக்கு ITC பங்குகள் பாதுகாப்பானவையா? #SmartInvestorIn100Days நாள் - 87

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

நீண்டகால முதலீட்டுக்கு, டிவிடெண்ட் வருமானத்துக்கு, போட்ட பணம் ஒரேயடியாக காணாமல் போய்விடாதிருக்க என்றெல்லாம் பார்த்தால், ITC நல்ல பங்குதான். எல்லாம் விலை உயர்கிறதே, இது அப்படி படபட என உயரவில்லையே எனக்கேட்டால், ஆம், இது இப்படித்தான்.

"நான் ஏழாயிரம் ITC நிறுவனப் பங்குகள் வாங்கிச் சேர்த்திருக்கிறேன். அதன் சராசரி விலை, பங்கு ஒன்றுக்கு 272 ரூபாய். இதன் விலை உயரவில்லையே. வைத்திருக்கலாமா? விற்றுவிடலாமா?" என்று வாசகர் சங்கர் கேட்டிருக்கிறார்.

27.1.2020 அன்று ITC பங்கு விலை 234 ரூபாய். ஏப்ரல் 15, 2019 அன்று 310 ரூபாய். இதுதான் இப்போதைக்கு 52 வார அதிகபட்ச விலை. மே 22-ம் தேதி அன்று பைனல் டிவிடெண்ட் 575 சதவிகிதம் கொடுத்திருக்கிறார்கள். முகமதிப்பு ஒரு ரூபாய் என்பதால் பங்கு ஒன்றுக்கு டிவிடெண்ட் 5 ரூபாய் 75 காசு. கடைசியாக மே மாதம் 2016-ல் இரண்டுக்கு ஒன்று வீதம் போனஸ் பங்குகள் வழங்கியிருக்கிறார்கள்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 20 ஆண்டுக்கால விலை சார்ட்டைப் பார்த்தால், அதன் விலை உயர்வு எவ்வளவு சீராக இருக்கிறது என்பது தெரியும்.

Chart
Chart
Money Control

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மனிதர்களில் இருப்பதைப்போலவே பங்குகளிலும் பலவகைகள் உண்டு, அதில் ஒரு வகையின் பெயர், `டிபென்சிவ் ஸ்டாக்ஸ்’. பாதுகாப்புத்துறையைச் சார்ந்த டிபென்ஸ் ஸ்டாக் அல்ல. இவை, `தற்காப்பான' எனும் பொருளில் வரும் டிபென்சிவ் ஸ்டாக்ஸ்.

ஃபுட்பால் விளையாட்டில் வீரர்களுக்கு குறிப்பிட்ட இடங்களும் ஆடவேண்டிய முறைகளும் உண்டு. ஒருவர் கோல் கீப்பர். அவர் வேலை `கோல் போஸ்ட்’டிற்குள் பந்து போய்விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது. சிலர், பார்வேர்ட் பிளேயர்கள். அவர்கள், ஓடி ஆடி எதிரியின் வலைக்குள் பந்தைத் தள்ளி, கோல் அடிக்க வேண்டும். மற்றும் சிலர் எதிரணி ஆட்டக்காரர்களின் கோல் அடிக்கும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும். ஆம். அவர்களே கோல் போட வேண்டிய அவசியமில்லை. ஆனால், தங்கள் அணி கோல் வாங்கிவிடாமல் தடுத்து ஆட வேண்டும். அவர்கள் எல்லாம் டிபென்டர்ஸ். அவர்கள் ஆடும் ஆட்டம், டிபென்ஸ்.

share Market
share Market

பார்வேர்ட் பிளேயர்களின் வேலை ரிஸ்க் எடுப்பது. வெற்றிபெற தேவையான கோல்கள் அடிப்பது. டிபென்சிவ் பிளேயர்களின் வேலை தோல்வியைத் தடுப்பது.

ஒருவரது போர்ட்போலியோவில் இருக்கும் பல்வேறு விதமான முதலீடுகளில், தங்கம், வங்கி வைப்புகள் போன்றவையும் உண்டு. அவையெல்லாம் டிபென்சிவ் ஆட்டக்காரர்கள்போல. பங்குகள், பார்வேட் பிளேயர்ஸ் போல. முதலீடுகளுக்கு போர்ட்போலியோவுக்கு குந்தகம் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள தங்கம், பிக்சட் டெபாசிட் போன்றவை. ஆனால், வெறும் தோல்வி தவிர்த்தல் போதாதே! வெற்றி பெற வேண்டுமே. அதற்காக ரிஸ்க் எடுக்கும் பங்குகள் போன்றவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படிப்பட்ட பங்குகளிலும், அவற்றின் உள்ளும் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒரு வகை, டிபென்சிவ் ஸ்டாக்ஸ். இந்த வகை பங்குகளில் போடப்படும் பணத்துக்குப் பெரிய ரிஸ்க் இல்லை. அதேசமயம் அவை ரிஸ்க் குறைவானவை என்பதால், விலை உயர்வுகளும் சாதாரணமாகவே இருக்கும்.

Share Market
Share Market

ITC அப்படிப்பட்ட ஒரு பங்கு. பங்குச் சந்தைகளில் பெரிய கலாட்டாக்கள் வரும்போதுகூட இவற்றின் விலைகள் பெரிதாக இறங்கிவிடாது. அதேபோல, பங்குச் சந்தைகளில் ஆகா ஓகோ என ஆரவாரம் இருக்கும்போதும் இவற்றின் விலை பெரிதாக உயர்ந்துவிடாது.

அதுதான் டிபென்சிவ் வகைப் பங்குகளின் பலமும், பலவீனமும். சந்தை விழும் நேரம் பலரும் அவர்கள் கைவசம் இருக்கும் மற்ற பங்குகளை விற்றுவிட்டு, டிபென்சிவ் பங்குகளுக்குள் முதலீடுகளைக் கொண்டுவந்துவிடுவார்கள். சந்தையில் விடியல் என்றால், இவற்றை விற்று மீண்டும் ரிஸ்க் உள்ள வேகமாக விலை உயரக்கூடிய பங்குகளில் முதலீடு செய்வார்கள்.

ITC பங்கு, இப்படித்தான் இருக்கும். காரணம் அது டிபென்சிவ் ஸ்டாக்.

நீண்டகால முதலீட்டுக்கு, டிவிடெண்ட் வருமானத்துக்கு, போட்ட பணம் ஒரேயடியாக காணாமல் போய்விடாதிருக்க என்றெல்லாம் பார்த்தால், ITC நல்ல பங்குதான். எல்லாம் விலை உயர்கிறதே, இது அப்படி படபட என உயரவில்லையே எனக்கேட்டால், ஆம், இது இப்படித்தான்,

உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வைத்து முடிவெடுங்கள்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.