Published:Updated:

வரப்போகிற பட்ஜெட், பங்குச் சந்தையை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் தெரியுமா? #Smartinvestorin100days நாள்- 85

பட்ஜெட் பங்குச் சந்தை
பட்ஜெட் பங்குச் சந்தை

நிதியமைச்சர் வரவு செலவு கணக்கு படிக்கத் தொடங்குகையில், அந்த ஆண்டு அதுவரை நிலவிய பட்ஜெட் குறித்த ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை அனுசரித்து சந்தை ஏறியோ இறங்கியோ இருக்கும்.

"பட்ஜெட் வர இருக்கிறது. அதனால் பங்குச்சந்தை உயரும் அல்லது இறங்கும்" என்று சிலர் சொல்வார்கள். "பட்ஜெட்டில் இந்த ஆண்டு குறிப்பிட்ட அம்சங்கள் இருக்கப்போகின்றன. அதனால், இந்தத் துறைகளுக்கு அனுகூலம்" என்பது போலவும் பேச்சுக்கள் அடிபடும்.

நீண்ட கால முதலீட்டாளர்கள், `இதுவும் கடந்து போகும்' என்று இந்த நிகழ்வுகளுக்கு முன்பும் நிகழ்வுகளின் போதும் வெறும் பார்வையாளர்களாக இருப்பார்கள். பட்ஜெட் குறித்து வரும் யூகங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்க மாட்டார்கள். ஆனால், டிரேடர்கள் இதை ஒரு நல்ல வாய்ப்பாகப் பார்ப்பார்கள். குறியீட்டு எண்களிலோ, குறிப்பிட்ட பங்குகளிலோ பொசிஷன்கள் எடுப்பார்கள். `லாங்' அல்லது `ஷார்ட்' போவார்கள்.

`நிர்மலா சீதாராமனின் வரிச் சலுகை அறிவிப்பு!’ - 10 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தில் பங்குச்சந்தை

இன்னும் தீவிரமாக டிரேட் செய்கிறவர்கள் ஆப்ஷன்ஸ் பக்கம் போய்விடுவார்கள். 'குறைந்த செலவில் அதிக லாபம்' பார்க்கும் முயற்சி அவர்களுடையது.

பட்ஜெட் நாள் நெருங்க நெருங்க சந்தையின் போக்கு, மேலும் கீழும் எனத் தடுமாற்றமாக இருக்கும். அந்தத் தடுமாற்றத்தில், சிலர் அவர்கள் பொசிஷனை விட்டு வெளியேறி விடுவார்கள். காரணம், ஒன்று, போதுமான லாபம் கிடைத்துவிட்டது என்கிற திருப்தி. அல்லது தாங்கக்கூடிய அளவை காட்டிலும் நஷ்டம் அதிகரித்து விடுமோ என்கிற பயம்.

காளையின் பிடியில்
காளையின் பிடியில்

நிதியமைச்சர் வரவு செலவு கணக்கு படிக்கத் தொடங்குகையில், அந்த ஆண்டு அதுவரை நிலவிய பட்ஜெட் குறித்த ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை அனுசரித்து சந்தை ஏறியோ இறங்கியோ இருக்கும்.

ஆரம்பத்தில் தெரியவரும் சில தகவல்களை மட்டும் வைத்து, சில குறிப்பிட்ட துறைகளில் பங்கு விலைகள் ஏறும் அல்லது இறங்கும். இவற்றையெல்லாம் செய்வது, 'தீவிர டிரேடர்'கள்.

கிடைத்த மிகக் குறைவான தகவல்களை வைத்து பெரிய முடிவுகள் எடுப்பார்கள். காரணம் ஒன்று, அவர்கள் பொசிஷன் அளவு அப்படி. பெரிய அளவிலான ரிஸ்கில் இருப்பவர்கள் அவர்கள். இரண்டாவது காரணம், அவர்கள் ஆசை அவ்வளவு. பெரிய அளவில் பணம் செய்ய விரும்பி டிரேட் செய்கிறார்கள்.

பட்ஜெட் முழுவதும் படித்து முடிக்கப்பட்டவுடன் சமயங்களில் பட்ஜெட் வரை தொடக்கத்தில் புரிந்துகொண்டது சரியில்லை என்று தெரிய வந்தால், அதன் காரணமாக விலை உயர்ந்த சில பங்குகளின் விலைகள் ஏறிய வேகத்தில் இறங்கும். விலை அடிக்கப்பட்ட சில பங்குகள் விலை உயரும்.

Vikatan

ஊடகங்களிலும் பட்ஜெட்டின் முழுத் தாக்கம் குறித்து உடனடியாக சரியான தகவல்கள் வெளி வராது. வர முடியாது. "படித்தார்தான். முழுவதும் படிக்கவில்லை. Fine print பார்த்தால்தான் முழுவதும் சரியாக தெரிய வரும்" என்பார்கள்.

உண்மைதான். முழுப் படத்தையும் பார்த்தவுடனே, அதனால் உருவாகக் கூடிய தாக்கங்களை உடனடியாகக் கணக்கிட்டு விட முடியாது.

பின்புதான் ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்டர்ஸ், FIIs (Federated Investors), பரஸ்பர நிதிகள் உட்பட்ட டொமஸ்டிக் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்டர்ஸ் மற்றும் HNI எனப்படும் பெரும் பணக்காரர்கள் முதலியோர் குறிப்பிட்ட பங்குகளை வாங்க ஆரம்பிப்பார்கள். அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் அந்த நிறுவனங்களுக்குச் சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் அப்படி வாங்குவார்கள்.

ஏற்ற இறக்கம்
ஏற்ற இறக்கம்

ஆம், அதுவும் கூட எதிர்பார்ப்புதான். அதன்பின், அந்த நிறுவனங்கள் நன்கு செயல்பட்டு, மற்ற சூழ்நிலைகள் சரியாக அமைந்து, நிறுவனங்களில் லாபம் அதிகரிக்க வேண்டும். அப்படியானால்தான், அவர்கள் வாங்கியது சரி என்று ஆகும்.

பட்ஜெட் போன்றே, `ரிசர்வ் வங்கி இன்று வட்டி விகிதம் அறிவிக்கிறது', `மூன்று மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாள்', `கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான OPEC இன்று கூடி , உற்பத்தி குறித்து முடிவு எடுக்கிறது', 'அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், இன்று வட்டி விகிதங்கள் மாற்றி அறிவிக்கலாம்' என்பது போன்ற நிகழ்வுகளையும் பங்குச்சந்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்.

பட்ஜெட் பங்குச்சந்தை
பட்ஜெட் பங்குச்சந்தை

அதனால், அவற்றால் தாக்கம் பெறக்கூடிய பங்குகளின் விலைகளில் சலசலப்புகள் இருக்கும். இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளுமேகூட இப்படிப்பட்ட நிகழ்வுகளில் மிக முக்கியமான மற்றும் பெரிய ஒன்று.

நிகழ்வுக்கு முன், யூகங்களின்படி நிகழ்வு நடந்து முடிவு தெரியும் நேரம் மற்றும் நிகழ்வுக்குப் பின்னான தாக்கங்கள் தெளிவான பின்பு... என்று, நிகழ்வுகளை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம். அதிக ஆசைப்பட்டு அல்லது பயந்து ரிஸ்க் எடுப்பவர்கள் அல்லது கொஞ்சம் கூட ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் முதல் காலகட்டத்தில் செயல்படுவார்கள்.

பங்குச்சந்தை அநியாயங்கள்... உஷார்! #SmartInvestorIn100Days நாள்-14

மிதமான ஆசை கொண்டு மிதமான ரிஸ்க் எடுப்பவர்கள், இரண்டாவது காலகட்டம் வரை பொறுத்து, அப்போது முடிவுகள் எடுப்பார்கள். நிதானமாகப் பணம் செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், மூன்றாவது காலகட்டம் வரை காத்திருந்து முடிவுகள் எடுப்பார்கள். நீங்கள் எப்படி?

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

பின் செல்ல