Published:Updated:

சிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக பிரீமியம்... ஏன்?! #SmartInvestorIn100Days நாள் - 23

பிரீமியம்
News
பிரீமியம்

சிகரெட் பிடிப்பவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் லைஃப் ரிஸ்க் இருப்பது தெரியும். அப்படி ரிஸ்க் உள்ளவருக்குக் காப்பீடு கொடுப்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனம் ரிஸ்க் ஆகப் பார்க்கிறது.

சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றில் பேசுவதற்காக இன்ஷூரன்ஸ் பற்றிய செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சுவாரஸ்யமான விஷயம் கண்ணில் பட்டது. அது, சிகரெட் பிடிப்பவர்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது கூடுதல் செலவாகும் என்பதுதான்.

டேர்ம் பாலிசி எடுக்கிறபோது கட்டாயம் மெடிக்கல் செக்கப் செய்வார்கள். அப்படிச் செய்யும்போது பாலிசி எடுப்பவர் சிகரெட் பிடிப்பவராக இருந்தால், அவருக்கு மற்றவர்களுக்குப் போடுவதைவிட 25% வரை பிரிமியத் தொகை கூடுதலாக போடுவார்களாம்!

சிகரெட்
சிகரெட்

25 வயதிலிருக்கும் இருவர், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பாலிசி எடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். பாலிசி காலம், பாலிசி தொகை எல்லாம் ஒரே போல இருக்கிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.10,000 பிரிமியம் கட்டவேண்டும் என்கிறார்கள். மற்றொருவருக்கு ஆண்டுக்கு ரூ.12,500 ரூபாய் கட்டச் சொல்கிறார்கள். காரணத்தை ஆராய்ந்தால் தெரியவருவது, இரண்டாமவர் சிகரெட் பிடிப்பவர் என்பதுதான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
சிகரெட் பிடிப்பவர்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் லைஃப் ரிஸ்க் இருப்பது தெரியும். அப்படி, ரிஸ்க் உள்ளவருக்குக் காப்பீடு கொடுப்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனம் ரிஸ்க் ஆகப் பார்க்கிறது!
மெடிக்கல் செக்கப் போகிற தினம் புகை பிடிக்காமல் இருந்துவிட்டால் போயிற்று என்று அலட்சியமாகப் போய்விடவேண்டாம். சிறுநீர் டெஸ்ட் நிக்கோடின் இருப்பதைக் காட்டிக்கொடுத்துவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புகைப் பிடிக்காதவர்களுக்கு சிகரெட் செலவு மீதம் என்பது போக, இப்படி பிரிமியத்தில் வேறு சலுகையா?

வங்கிகளில் கடன் வாங்குகிற போதும் சரியாக நடந்துகொள்கிறவர்களுக்கு இப்படி ஒரு சலுகை இருக்கிறதென்று தெரியுமா?

அவசரப்படாதீர்கள். புகைப் பிடிப்பவர்; பிடிக்காதவர் என்ற அடிப்படையில் வங்கிகள் கடன் கொடுக்கையில் வேறுபாடு பார்க்க மாட்டார்கள். ’டீ டோட்டலர்’ என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு அங்கே அதற்காகச் சலுகை எதிர்பார்க்காதீர்கள். ஆனாலும் சலுகை உண்டு. வேறு ஒன்றுக்காக. அது என்ன?

Insurance
Insurance

பர்சனல் லோன் அல்லது வேறு கடன்கள் வாங்கும்போது கடன் தொகைக்கு என்ன வட்டி என்று தெரிவிப்பார்கள். பல லோன்களுக்கும் ஒரு வங்கி ஒரே மாதிரிதான் வட்டி விகிதம் நிர்ணயம் செய்திருக்கும். ஆனாலும், சிலருக்குக் கடன் கொடுக்கிறபோது வட்டி விகிதத்தைக் கொஞ்சம் அதிகரித்துவிடுவார்கள்.

அதன் காரணம் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். குறைவாக இருக்கும் சிபில் ஸ்கோர்தான் அந்தக் கூடுதல் வட்டிக்குக் காரணம்.

வாகனக் கடன், கல்விக்கடன், வீடுகட்ட கடன், பர்சனல் கடன் போன்ற கடன்கள் வாங்கியபின் அவற்றை மாதாமாதம் குறிப்பிட்ட தேதிக்குள் முறையாகக் கட்டிவிட்டால் சிபில் ஸ்கோர் உயர்வாக இருக்கும். சில மாதங்கள் சரியான தேதிக்குள் கட்டத் தவறினால் ஸ்கோர் குறைந்துவிடும்.
சோம.வள்ளியப்பன்

வருமான வரி கணக்கு எண் அட்டையில் இருக்கும் பெயரில் எங்கே எவ்வளவு கடன் வாங்கினாலும், மாதாந்திர தவணையை நேரத்தில் கட்டினாலும், கட்டாவிட்டாலும் ஓரிடத்தில் பதிவாகிவிடும். அந்த ஓரிடம் தரும் மதிப்பெண்தான் சிபில் ஸ்கோர். அதைக் கடன் கொடுக்க விரும்பும் நிறுவனம் கட்டணம் கட்டிப் பார்க்கலாம், பார்ப்பார்கள்.

தனிநபர்களும் அவர்களது சிபில் ஸ்கோர் என்ன என்பதை, விரும்பினால் கட்டணம் கட்டி, நிலங்களுக்கு வில்லங்க சர்டிஃபிகேட் பார்ப்பதுபோல பார்க்கலாம்.

சிபில் ஸ்கோர் 750!
சிபில் ஸ்கோர் இதற்கு மேலிருந்தால், ரிஸ்க் பிரிமியமாகக் கூடுதல் வட்டிபோட மாட்டார்கள். ஸ்கோர் குறையக் குறைய வட்டி விகிதம் அதிகரிக்கும். மிகக்குறைவாக இருந்தால் கடனே தரமாட்டார்கள்.

சிபில் ஸ்கோர் மட்டுமல்ல. ஒருவரது கடனைத் திருப்பிக் கட்டும் திறனையும் மனோபாவத்தையும் தெரிந்துகொண்டு முடிவெடுக்க, அவர் கட்டவேண்டிய எல்லா EMI-களும் சேர்ந்து, அவரது மாத வருமானத்தில் எவ்வளவு சதவிகிதம் என்றும் பார்ப்பார்கள்.

கடன்களுக்கு கட்டும் தவணைகளின் கூட்டுத் தொகை, மொத்த வருமானத்தில் 50% க்கும் கீழ் இருந்தால் சரி. அதைவிட அதிகமாக EMI பணம் கட்டவேண்டியிருந்தால், அவருக்கு எப்படி கடன் கொடுப்பது, அவரால் எப்படி தொடர்ந்து கட்டமுடியும் என்ற ரீதியில் நிச்சயம் யோசிப்பார்கள்.

மூன்றாவதாக அவர் கிரெடிட் கார்டுகள் வைத்திருக்கிறாரா? அதற்கு கட்டவேண்டிய தொகைகளை நிலுவை தேதியிலிருந்து எத்தனை நாள்களுக்குள் கட்டுகிறார், தவறுகிறாரா? அபராத வட்டி கட்டும் நிலையில் எப்போதும் இருந்திருக்கிறாரா என்றெல்லாமும் பார்ப்பார்கள்.

ஒருவருக்கு கிரெடிட் கார்டில் கொடுக்கப்படும் லிமிட்டில் 30 சதவிகிதத்துக்கும் கீழ் இருப்பது அவரது ‘பலம்’ ஆக கருதப்படும். அடிக்கடி லிமிட்டைத் தொடுபவர் பண நிர்வாகத்தில் மூச்சுத் திணறுகிறார் என்பதாகப் புரிந்துகொள்ளப்படும்.

சிலர் ஒவ்வோர் இடமாக பல வங்கிகள், நிறுவனங்களில் கடனுக்கு முயற்சி செய்வார்கள். அந்த ஒவ்வோர் இடமும் அவரது சிபில் ஸ்கோரைச் சோதித்துப் பார்க்கும். அப்படிச் செய்துபார்க்கும் பட்சம், ஒரே கடனுக்கு அவர் பல இடங்களில் முயற்சி செய்வதும், அவருக்குக் கடன் கொடுக்க பலரும் தயங்குவதும் புரிந்துகொள்ளப்படும். இதுவும் அவருக்குப் பலகீனமாக அமைந்துவிடும்.

Insurance
Insurance

மேலும், இப்படியெல்லாம் நிதி விஷயத்தில் ’டிசிப்ளின்’ இல்லாமல் இருப்பவரின் வேலைக்கும் ஆபத்து வரலாம் என்றெல்லாம் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். இப்படிப்பட்டவருக்குக் கடன் கொடுத்துவிட்டு வசூலிக்க நேரமும் செலவும் ஆகலாம் என்பதாக அனுமானித்துக்கொண்டு, கடன் கொடுக்க மாட்டார்கள் அல்லது வட்டி விகிதத்தை உயர்த்திவிடுவார்கள்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.