Published:Updated:

`ஜீ என்டர்டெயின்மென்ட்' பங்கில் இருக்கும் அந்த ஒரு சிக்கல்..!

தற்போதைக்கு முதலீடு செய்யத் தகுந்த பங்குகள் அல்ல என்ற பட்டியலில் அக்டோபர் 3-ம் தேதி நிலவரப்படி, நன்கு விலை உயர்ந்த பங்குகளான எஸ் பேங்க் மற்றும் ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குகள் இருப்பது ஆச்சர்யமாக இருக்கும்.

SmartInvestorIn100Days
SmartInvestorIn100Days

’முதலீடு செய்யத் தகுந்த பங்குகளின் லட்சணங்களை வைத்து, தற்போதைய நிலையில் எவை முதலீடு செய்ய ஏற்ற பங்கு இல்லை என்பதைப் பார்த்தால், இந்த ’ஸ்டாக் செலெக்‌ஷன்’ குறித்த புரிதல் அதிகரிக்குமே’ என்பது சிலரது மைண்ட் வாய்ஸ். என்ன சரிதானே! அதனால் இன்று ஸ்டாக் செலெக்‌ஷன் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

செய்திகளில் அதிகம் அடிபடுவதுடன், முதலீட்டாளர்களை அடிபட வைக்கும் பங்குகளுக்கா இன்று பஞ்சம்? எடுத்துக்காட்டுக்கு எதை எடுப்பது, எவற்றை விடுவது என்றே தெரியவில்லை. ஏனெனில் அப்படிப்பட்ட பங்குகள் நிறைய இருக்கின்றன. அந்தப் பட்டியலைப் பார்ப்பதற்கு முன், முதலீடு செய்ய இது தகுந்த பங்குதான் அல்லது முதலீடு செய்ய இது ஏற்ற பங்கு அல்ல என்று சொல்லப்படுவதை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் தெரியுமா? 'இப்போதைக்கு' என்கிற ஒரு வார்த்தையை வைத்துத்தான். ஆமாம், எல்லா நேரங்களிலும், ஒரு நிறுவனத்தின் பங்கு ஒரே மாதிரியான நிலையில் இருக்காது. கீழே கொடுக்கப்பட்டுள்ள, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பங்குகளின் பட்டியல், தற்போதைய நிலையை வைத்துக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

 ஐ.ஆர்.சி.டி.சி. பங்குகளுக்கு ஐந்துக்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங்?!
share Market
share Market

* ஜீ என்டர்டெயின்மென்ட்

* எஸ் பேங்க்

* கஃபே காபி டே (சிசிடி)

* டி.எச்.எப்.எல். (தீவான் ஹவுசிங்)

* பல பொதுத்துறை வங்கிகள்

பங்குச் சந்தையில் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் சிலருக்கு இந்தப் பட்டியல் வியப்பைத் தரலாம். காரணம், தற்போதைக்கு முதலீடு செய்யத் தகுந்த பங்குகள் அல்ல என்ற பட்டியலில் அக்டோபர் 3-ம் தேதி நிலவரப்படி, நன்கு விலை உயர்ந்த பங்குகளான எஸ் பேங்க் மற்றும் ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குகள் இருப்பது ஆச்சர்யமாக இருக்கலாம். இருந்தும் ஏன் அப்படிச் சொல்கிறோம் என்கிற வியப்பு வரலாம்.

தேசிய பங்குச் சந்தையில் 03.10.19 அன்று அதிகம் விலை உயர்ந்த பங்குகளின் பட்டியல் இதோ...

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

நேற்று அவை விலை உயர்ந்ததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். முதலீட்டாளருக்கு அது பற்றிக் கவலை இல்லை. வாங்கி உடனுக்குடன் விற்று லாபம் பார்க்க நினைக்கும் டிரேடருக்குத்தான் அந்தக் காரணங்கள் முக்கியமானவை. ஒரு டிரேடர் அந்தப் பங்குகளை இப்போது டிரேட் செய்யத் தகுந்த பங்குகள் என்று அடையாளம் காணலாம். அது வேறு. முதலீட்டுக்குத் தகுந்த பங்குகளின் எதிர்பார்க்கப்படும் அடையாளங்கள் வேறு. 

ட்விட்டர் சர்வே: பங்குச் சந்தை இறங்கினால் முதலீடு செய்வீர்களா?

டிரேடர் பத்து வர்த்தகம் செய்தால், பத்து கான்டிராக்ட் போட்டால் அதில் நான்கு, ஐந்து வர்த்தகங்களில் நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை; மற்றதில் பிடித்துவிடுவேன் என்று நினைப்பவர். ஆனால், முதலீட்டாளர் அப்படியில்லை. முதலீட்டாளர் என்பவர், பங்குகள் வாங்கியதும், அந்தப் பங்கின் விலை இறங்கினாலும் விற்கமாட்டார். வைத்திருப்பார். விலை மீண்டும் உயர்ந்துவிடும் என்பது அவரது எதிர்பார்ப்பு. ஆகவே ஒருவர் பங்குகளை தேர்வு செய்கிற போதே, தான் முதலீட்டுக்காக வாங்குகிறோமா அல்லது டிரேட் செய்ய வாங்குகிறோமா என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.

எவ்வாறு குறுகிய காலத்தில் திருப்பிக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கடன் வாங்கி, நீண்டகாலத்தில் பலன் தரக்கூடிய முதலீட்டில் போடுவது தவறோ? அதே போன்றதுதான் முதலீட்டிற்கு வாங்கிவிட்டு, டிரேட் செய்வதும். அதேபோல டிரேடிங் செய்ய வாங்கிவிட்டு முதலீட்டாளர் போல, நஷ்டத்தை, ஸ்டாப் லாஸூடன்  தடுத்துக் கொள்ளாமல், அதே பங்கோடு நீண்ட காலம் விலை உயர்வுக்காகக் காத்திருந்து நஷ்டப்படுவதும்.

’ஜீ என்டர்டெயின்மென்ட்' பங்கு, 2018-ம் ஆண்டில் 600 ரூபாய்க்கு வர்த்தகமான பங்கு. தற்போது அதன் விலை 240 ரூபாய். விலை மிகவும் குறைவு. நல்ல சந்தர்ப்பம். அந்தப் பங்கு குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் என்றெல்லாம் நினைத்து சிலர் வாங்குவார்கள். அவர்கள் லாட்டரி சீட்டு போல, ’நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அதன் விலை பயங்கரமாக ஏறிவிடும்’ என்று நம்புபவர்கள். இதற்குப் பெயர் ’ஸ்பெக்குலேஷன்’ என்பார்கள். 

’600 ரூபாய்க்கு விலை போன பங்கு ஏன் 240 ரூபாய்க்கும் கீழ் வந்தது? அதற்கு ஏதோ காரணங்கள் இருக்கும்தானே! இல்லாமலா அதிகம் விவரம் தெரிந்த முதலீட்டாளர்களும், முதலீட்டு நிறுவனங்களும் வாங்காமல், அந்த விலைகளில் இருப்பதையும் விற்கின்றன!’ என்பது போலவும் இதே விஷயத்தை யோசிக்க முடியும் அல்லவா?! ஒரு முதலீட்டாளர் கொண்டிருக்க வேண்டிய எண்ணம், ’என்னைக் காட்டிலும் சந்தைக்குக் கூடுதல் விவரங்கள் தெரியும்’ என்பதுதான்.

SmartInvestorIn100Days
SmartInvestorIn100Days

ஒரு நிறுவனம் சரியாக வருமா, வராதா என்று ஒரு சாதாரண முதலீட்டாளரால், வெளி ஆட்களால் சரியாகத் தெரிந்துகொள்ள முடியாது. தொடர்ந்து விலை வீழ்கிறது அல்லது உயர்கிறது என்பதை வைத்துத்தான் அனுமானிக்க முடியும். ஆனால், முதலீடு செய்ய அனுமானங்கள் மட்டும் போதாது. அனுமானங்கள் தவறாகப் போகலாம். அப்படியென்றால், நம்மால் வாங்கக் கூடிய பங்கையோ, தவிர்க்கவேண்டிய பங்கையோ கண்டறிய முடியாதா? தனி நபர்களால், சிறுமுதலீட்டாளர்களால் முடியாது.

பிறகு, எப்படிக் கண்டுபிடிப்பது என்கிறீர்களா?

விவரம் தெரிந்த, நம்பிக்கைக்கு உரிய நிறுவனங்களின் பரிந்துரைகளை, ஆய்வறிக்கைகளைப் படித்து, புரிந்துகொண்டுதான் முடிவெடுக்க வேண்டும். அதிலும் தவறுகள் வரலாம். ஆனால் நிச்சயம் தனி நபராகச் செய்வதைக் காட்டிலும் குறைவான தவறுகளாக இருக்கும்.

நாம் முன்பு எடுத்துக்கொண்ட ஐந்து லட்சணங்களில், ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனப் பங்கு, எப்படி என்பதை இங்கே பார்க்கலாம். 

1. வளர்ச்சியில் இருக்கும் துறையில் இயங்கும் நிறுவனமா?– இண்டஸ்ட்ரி  எப்படி?

ஆமாம். வளர்ச்சியில் இருக்கும் நிறுவனம்தான்.

2. லாபம் ஈட்டும் நிறுவனம், தொடர்ந்து லாபம் ஈட்டுவதற்கு வாய்ப்பிருக்கும் நிறுவனமா? பிராஃபிட்டபிலிட்டி எப்படி?

ஆம். லாபம் நன்றாக இருக்கிறது. கீழே உள்ள படத்தில் EPS என்பதைப் பார்க்கவும். ஒரு ரூபாய் முகமதிப்புள்ள பங்கு ஆண்டு ஒன்றுக்கு 18.75 ரூபாய் சம்பாதித்திருக்கிறது.

SmartInvestorIn100Days
SmartInvestorIn100Days

3. ஈட்டும் லாபத்தை ஷேர் ஹோல்டர்களுடன் நன்கு பகிரும் நிறுவனமா? டிஸ்ட்ரிபியூஷன் எப்படி?

நல்ல பகிர்வுதான். ஒரு ரூபாய் முகமதிப்பு உள்ள பங்கு ஒன்றுக்கு 3.50 ரூபாய் டிவிடெண்ட் கொடுத்திருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு முதல் தொடர்ந்து டிவிடெண்ட் தொகையை அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறார்கள்.

SmartInvestorIn100Days
SmartInvestorIn100Days

4.நேர்மையாக, வெளிப்படையாக, புரபஷனலாக நடத்தப்படும் நிறுவனமா? கவர்னென்ஸ் எப்படி?

நிறுவனத்தின் நேர்மையைப் பற்றித் தவறாகச் சொல்லும் தகவல்கள் இல்லை. ஆனால், ஒரு குறைபாடு, இந்நிறுவனத்தின் புரமோட்டர்கள் வைத்திருக்கும் பங்குகள், மொத்தப் பங்குகளில் 37.2 சதவிகிதம்தான். அதையும் அவர்கள் அடமானம் வைத்துப் கடன் வாங்கியிருக்கிறார்கள். அடமானம் வைக்கும் புரமோட்டர்களின் பங்குகளின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து மார்ச் 2019-ம் ஆண்டில் 68 சதவிகிதம் ஆகிவிட்டது. இது ஒரு ஆபத்தான நிலை என்பது தவிர, நிலைமை கைமீறினால், நிர்வாகம் வேறு நபர்களிடம் போய்விடும் ஆபத்தும் இருக்கிறது.

ஐ.பி.ஓ வரும் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம்... முதலீடு செய்யலாமா?

இந்நிறுவனம் Essel குழுமத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம். இந்தக் குழுமத்தில் இருக்கும் பிற நிறுவனங்களான டிஷ் டி.வி, சிட்டி நெட் ஒர்க்ஸ், ஜீ லெர்ன்  மற்றும் ஜீ மீடியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் முறையே 94.47 %, 90%, 82.74% மற்றும் 93.4%  என்ற அளவுகளில் கடனுக்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆக, இந்தக் குழுமத்தின் நிர்வாகத்தினர் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

SmartInvestorIn100Days
SmartInvestorIn100Days

5. கணிசமான அளவில் தினசரி வர்த்தகமாகும் நிறுவனம் – லிக்விடிட்டி?

ஆம். கணிசமான அளவில் தினசரி வர்த்தகமாகும் நிறுவனம்தான்.

மேலே உள்ள எல்லாம் சரியாக இருக்க, ஒரே ஒரு விஷயம் சிக்கலாக இருக்கிறது. ஆகவே, இந்தப் பங்குகளை சமயம் பார்த்து டிரேடு வேண்டுமானால் செய்யலாம். நீண்டகால முதலீட்டிற்குத் தற்போதைய சூழ்நிலை இடம் தரவில்லை.

- முதல் போடலாம்