Published:Updated:

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடா... ஃபண்டு மேனேஜர் பற்றி தெரிஞ்சே ஆகணும்...ஏன்? #SmartInvestorIn100Days

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் எனச் சொல்லப்படும் பரஸ்பரநிதி நிறுவனங்களும் அவர்களிடம் வரும் பணத்தை பங்குகளில்தான் முதலீடு செய்கிறார்கள். பங்குகளில் எப்போதுமே ரிஸ்க் உண்டு. பிறகு, அதில் முதலீடு செய்யும் பரஸ்பரநிதி மட்டும் ரிஸ்கே இல்லாமல் எப்படி இருக்க முடியும்?

`மியூச்சுவல் ஃபண்டில் ரிஸ்க் இல்லை’, `எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்’. `கவனிக்கவே வேண்டாம்’ ஆகிய மூன்று வாக்கியங்களையும் சிலர் உண்மை என்று நம்புகிறார்கள். மூன்றுமே தவறான நம்பிக்கை.

மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் எனச் சொல்லப்படும் பரஸ்பரநிதி நிறுவனங்களும் அவர்களிடம் வரும் பணத்தை பங்குகளில்தான் முதலீடு செய்கிறார்கள். பங்குகளில் எப்போதுமே ரிஸ்க் உண்டு. பிறகு, அதில் முதலீடு செய்யும் பரஸ்பரநிதி மட்டும் ரிஸ்கே இல்லாமல் எப்படி இருக்க முடியும்? சாத்தியமில்லை. ஆனாலும் நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும், பரஸ்பரநிதிகள் மூலம் பங்குகளில் முதலீடு செய்வது, ரிஸ்கைக் குறைக்கும், லாப வாய்ப்பை அதிகரிக்கும். எப்படி என்கிறீர்களா?

முதலாவது வேறுபாடு, பரஸ்பரநிதிகளை நிர்வாகம் செய்பவர்களின் திறன், அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்களின் தரம் மற்றும் அவர்கள் முதலீடுகளில் கடைப்பிடிக்கும் வழிமுறைகள். இவையெல்லாம் ஒருசில தனிப்பட்ட முதலீட்டாளர்களிடம் இருக்கலாமே தவிர, பெரும்பாலானவர்களிடம் இருக்காது.

இரண்டாவது அவர்கள் பலருடைய பெரும் தொகைகளை முதலீடு செய்யும் வாய்ப்பு பெற்றிருப்பதால், பல்வேறு பங்குகளில் முதலீட்டைப் பரவலாகப் போட்டு, ரிஸ்க்கை குறைத்துக்கொள்கிறார்கள். எந்த பரஸ்பரநிதியும் ஒரு நிறுவனப்பங்கில் அதன் மொத்த முதலீட்டுத் தொகையில் 10 சதவிகிதத்திற்கு அதிகமாக முதலீடு செய்யக்கூடாது.

ஒருவர் தனிப்பட்ட முதலீட்டாளர் செய்வதுபோல, பரஸ்பரநிதியின் ஃபண்டு மேனேஜர்கள் பங்குகள் வாங்கும்போது, நிதியின் மொத்த போர்ட்போலியோவில் ஒரு சமநிலையை உருவாக்குவார். இதை `அசெட் அலக்கேஷன்’ மற்றும் `பேலன்சிங்’ என்று சொல்வார்கள். இந்த நல்ல வாய்ப்பும் பரஸ்பர நிதிகளில் இருக்கிறது.

மேலும், பங்குகளில் இருப்பது போலவே பரஸ்பர நிதிகளிலும் பல்வேறு வகையான திட்டங்கள் இருக்கின்றன. ஒருவர் அவரது குறிக்கோள் மற்றும் காலத்துக்கு ஏற்ப, அவருக்கு உகந்த பரஸ்பர நிதித் திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்ய முடியும்.#SmartInvestorIn100Days

Representational Image
Representational Image
மியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன? அதில் எப்படி முதலீடு செய்வது? #SmartInvestorIn100Days நாள்-91
பரஸ்பர நிதிகளில் தொடர் முதலீடு என்பது சாத்தியம். செய்வதும் சுலபம். தொடர் தவணைகளாக எஸ்.ஐ.பி மூலம் பணம் போடுவதென்றால் குறைந்தபட்சம் ஒரு தவணைக்கு ரூ.500 கூட போதும். `லம்ப் சம்’ என்றால் ரூ.1000 போதும்.

பங்குகளை `ஷேர்கள்' என்பது போல பரஸ்பரநிதியில், `யூனிட்கள்' என்பார்கள். தமிழில் `அலகு’ என்று சொல்லலாம்.

நிறுவனங்கள் பங்குகள் வெளியிடுவதை `பப்ளிக் இஷ்யு' என்றும் முதன்முதலில் வெளியிடுவதை `IPO' என்றும் சொல்வார்கள். அதுபோல ஃபண்ட் ஹவுஸ்கள் மியூச்சுவல் ஃபண்ட் வெளியிடுவதில், `நியு ஃபண்ட் ஆபர்' என்பார்கள். சுருக்கமாக `NFO'. சந்தை விலை பெரும்பாலும் அந்த பண்ட்டின் நிகர சொத்து மதிப்பான 'Net Asset Value-NAV' யை யொட்டியே இருக்கும்.

பரஸ்பர நிதிகளைப் பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தலாம். அதில் ஒன்று அந்தத் திட்டங்கள் எப்போது முடிவடையும் என்பது.

முதல் வகை `குளோஸ்டு எண்டடு பண்டுகள். அவற்றின் யூனிட்களை NFO வின் போது மட்டுமே வாங்க முடியும். அதன்பின் நிறுவனம் புதிய யூனிட்கள் வழங்காது. அதன் நிதியத்தின் அளவை மாற்றிக்கொள்ளாது. அதே போல எவரிடமிருந்தும் யூனிட்களை அது திரும்பப் பெற்றுக்கொள்ளாது. விலைக்கு வாங்காது. அதன் யூனிட்களை வைத்திருப்பவர்கள், பண்டு காலத்தின் இறுதி வரை காத்திருந்துதான் நிறுவனத்திடம் கொடுத்து பணம் பெறலாம். அல்லது சந்தையில் விற்றுக்கொள்ளலாம்.

சந்தை விலை பெரும்பாலும் அந்த பண்ட்டின் நிகர சொத்து மதிப்பான `Net Asset Value-NAV' யை ஒட்டியே இருக்கும்.

இரண்டாம் வகை ஃபண்டுகள், `ஓப்பன் எண்டட் ஃபண்டுகள்'. இந்த ஃபண்டுகளின் யூனிட்களை NFO-க்குப் பின்பும், அவ்வவ்போது இருக்கிற சந்தை மதிப்பில் நிறுவனமே வாங்கிக்கொள்ளும், பணம் கொடுக்கும். அதே போல, புதிதாகவோ, கூடுதலாகவோ அந்த பண்டின் யூனிட்கள் கேட்டால், நடப்பு விலையில் (Net Asset Value-NAV) விற்கும். அதனால் இந்த வகை பண்டுகளின் மொத்த அளவு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இந்த வகை யூனிட்களைச் சந்தையில் விற்க முடியாது.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

பின் செல்ல