Published:Updated:

மொமென்டம் பங்கு... கையிலிருக்கும் பறவையா... புதரிலிருக்கும் பறவையா?! #SmartInvestorIn100Days நாள்-12

மொமென்டம் பங்குகள்
News
மொமென்டம் பங்குகள்

மொமென்டம் பங்குகள் என்றால், வேகமாக விலை மாறும் பங்கு என்று பொருள். இந்த வகை பங்குகளுக்கும் பார்முலா மற்றும் அளவீடுகள் என எல்லாம் உண்டு.

பங்குகளின் விலைகளில் எல்லா நேரமும் தொடர்ந்து உயர்வுகளோ, இறக்கங்களோ நடப்பதில்லை.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் 4,000-க்கும் மேற்பட்ட பங்குகளும் ஒரே மாதிரியானவை அல்ல.

அவற்றுக்குள், லார்ஜ் கேப், மிட் கேப் ஸ்மால் கேப் என்பது தவிர, மேலும் சில அடையாளப் பெயர்களும் உண்டு. சில பங்குகள் மொமென்டம் பங்குகள். சில பங்குகள், புளுசிப்ஸ். வேறு சில டிபென்சிவ். இன்னும் சில மல்டி பேகர் பங்குகள்.

இன்றைக்கு மொமென்டம் பங்குகள் குறித்தும், அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், தெரிந்துகொள்ளாமல் முதலீடு செய்துவிட்டால் என்னவாகும் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

மொமென்டம் ஸ்டாக் என்றால், வேகமாக விலை மாறும் பங்கு என்று பொருள். குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு பங்கின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் வந்தால் அது மொமென்டம் ஸ்டாக். இந்த வகை பங்குகளுக்கும் பார்முலா மற்றும் அளவீடுகள் என எல்லாம் உண்டு.

மொமென்டம் பங்குகள்
மொமென்டம் பங்குகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

Chartink.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மொமென்டம் ஸ்டாக்குக்கான அளவீடுகளையும் இன்வெஸ்டோபீடியாவில் கொடுக்கப்பட்டிருக்கும் மொமென்டம் ஸ்டாக்கை கணக்கிடும் வழிமுறைகளும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். மொமென்டம் என்றால் விலை மாற்றம் என்று மேலே சொன்னேன் அல்லவா? மாற்றம் என்றால், இரண்டு திசைகளிலும். அது விலை உயர்வு மற்றும் விலை இறக்கம் ஆகிய இரண்டையும் குறிக்கும். புல்லிஷ் மொமென்டம் அல்லது பியரிஷ் மொமென்டம்.

மொமென்டம் பங்குகள்
மொமென்டம் பங்குகள்

பங்குகளின் விலைகளில் எல்லா நேரமும் தொடர்ந்து உயர்வுகளோ, இறக்கங்களோ நடப்பதில்லை. ஏதாவது ஒரு வலுவான செய்தி அல்லது நிறுவன வியாபாரத்துக்கு புதிய வாய்ப்பு அல்லது ஆபத்து; வரவிருக்கும் அல்லது முடிந்துபோன முக்கிய நிகழ்வுகள் காரணமாக விலை தொடர்ந்து மாறும். சில சமயங்களில் ஏறும், சில சமயங்களில் இறங்கும். இரண்டும் ஒரே பங்கில் அடுத்தடுத்த நாள்களில்கூட நடக்கும். தொடர்ந்து விற்போருக்கும், தொடர்ந்து வாங்குவோருக்கும் இடையே நடக்கும் இழுபறிபோல.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இப்படிப்பட்ட பங்குகள் டிரேடர்களுக்கு, டிரேட் செய்ய வாய்ப்பு தரும் பங்குகள். டிரேட் லாபத்திலும் முடியலாம், நஷ்டமும் தரலாம். ஆனால், அந்த மொமென்டம் காணப்படும் வரை பங்கு விலையில் கணிசமான விலை மாற்றம் இருக்கும். குறிப்பிட்ட காலத்துக்குப் பின், அவ்வளவு வர்த்தகம் நடந்த அதே பங்கில் விற்றல் வாங்கல் குறைந்துவிடும். (ஆள் நடமாட்டம் இல்லாத சாலைபோல) தவிர, வாங்க நினைப்போருக்கும் விற்க நினைப்போருக்கும் இடையே பெரிய விலை வித்தியாசம் இருக்கும். அதனால் வர்த்தகம் நடக்காது (தற்போதைய ரியல் எஸ்டேட் விலைகள்போல!).

மொமென்டம் பங்குகள்
மொமென்டம் பங்குகள்

முதலீடு செய்கிறேன் என்று போய், ’மொமென்டத்தில்’ இருந்த பங்கை வாங்கிவிட்டு, விற்கத் தவறிவிட்டால், பின்னர் அந்த ஸ்டாக்குடன் உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். விற்க முடியாது. எப்படியும் விற்க வேண்டும் என்று முயன்றால் வர்த்தகத் திரையில் (Trading Screen) காட்டப்படுவதைவிடக் குறைந்த விலைக்குத்தான் வாங்க ஆள் இருப்பார்கள். அதுவும் விற்க நினைக்கும் முழு எண்ணிக்கைக்கும் அல்ல. சும்மா பெயருக்கு, ஐந்து, பத்து பங்குகளுக்கு அந்த விலை போட்டிருப்பார்கள். மேலும் குறைந்த விலைகளில் இன்னும் கொஞ்சம் பங்குகளை வாங்குவோர் இருப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆகவே, முதலீட்டுக்கு என்றால், அடிப்படைகள் பலமாக இருக்கிற நல்ல பங்குகளை வாங்குவதுதான் சரி. இடையில் விலை இறங்கினாலும் மீண்டும் உயர்ந்துவிடும் என்று காத்திருக்கலாம். டிரேடுக்கு உதவும் மொமென்டம் பங்குகளை வாங்கிவிட்டு, நீண்டகாலம் காத்திருப்பதெல்லாம் பணத்துக்குத்தான் கேடு.

ஜி.டி.எல் லிமிடெட் என்று ஒரு பங்கு. டெல்காம் ஆபரேட்டர்களுக்கு சாஃப்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கொடுக்கும் நிறுவனம். ஐ.டி.ஐ, பார்தி இன்ஃப்ராடெல் ஹனிவெல் ஆடம் ஆகிய நிறுவனங்கள் இதன் போட்டியாளர்கள். நடப்பு வாரத்தின் 7-ம் தேதி தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளிலும், ஜி.டி.எல் நிறுவனத்தின் வர்த்தக விவரத்தைக் கீழே கொடுத்திருக்கும் படத்தில் பாருங்கள். இந்தப் பங்குகளை வைத்திருப்பவர்களுக்குக் கண்ணில் ரத்தம்தான் வரும்.

மொமென்டம் பங்குகள்
மொமென்டம் பங்குகள்

ஒரு பங்கின் விலை வெறும் 1.86 ரூபாய் மற்றும் 1.90 ரூபாய். மும்பை பங்குச் சந்தையில் 4.62% விலைக்குறைவு. தேசிய பங்குச் சந்தையில் 2.56% குறைவு. இரண்டு பங்குச் சந்தைகளிலும் சேர்ந்து வர்த்தகமான பங்குகளின் எண்ணிக்கை வெறும் 55,000 மட்டுமே. வர்த்தகத்தின் இறுதியில் விற்பதற்கு 2,000 பங்குகள். வாங்குவதற்கு ஆளில்லை.

இதே பங்கு முன்பு மிக அதிகபட்சமாக என்ன விலை போயிருக்கும் என நினைக்கிறீர்கள்?

மயக்கம் போட்டுவிடாதீர்கள். 2,000-ம் ஆண்டில் மார்ச் மாதம் 10-ம் தேதி இந்த பங்கு அதிகபட்சமாக 3,059 ரூபாய்க்கு வர்த்தகமாகியிருக்கிறது.

மொமென்டம் பங்குகள்
மொமென்டம் பங்குகள்

பின்பு ஜூன் 2011 வரையிலும்கூட பரவாயில்லை. ஒரு பங்கு விலை 409 ரூபாய். அப்போதெல்லாம், அதாவது, 2010-ம் ஆண்டு வரை, டிவிடென்ட் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. ஜூலை 2011-ம் ஆண்டில் ஒரு பங்கு விலை 74 ரூபாய். ஆமாம், இரட்டை இலக்கம். 2018-ம் ஆண்டு மே மாதத்தில் மேலும் கடுமையாக விலை வீழ்ந்து, ஒற்றை இலக்கத்துக்கே வந்துவிட்டது. அப்போது விலை, 9.90 ரூபாய்.

இதுதான் ஜி,டி.எல் என்ற பங்கின் கதை. முன்பு பார்த்த விலைகளை மனதில் வைத்து இந்தப் பங்கை எந்த விலையில் வாங்கியிருந்தாலும் நஷ்டம்தான். ஒரு உச்ச நடிகையின் கால்ஷீட் கிடைக்காமல் தவிப்பவர்கள், பின்னர் கிடைத்துவிட்டதே, அதுவும் குறைந்த சம்பளத்துக்கு என்று ஆசைப்படுவதுபோலத்தான். மார்க்கெட் போன நடிகையின் கால்ஷீட்டால் லாபம் உண்டா? மொத்தப் பணமும் நஷ்டம்தான் ஆகும்.

சந்தையில் இருக்கும் பெரும் முதலீட்டாளர்கள், விபரம் அறிந்தவர்கள்தான் பெரும்பாலான பங்குகளின் விலைகளை அவர்கள் வாங்குதல் விற்றல் மூலம் தீர்மானிக்கிறார்கள். அப்படி ஒரு பங்கைப் பற்றி முடிவெடுத்து அவர்கள் விற்றாலோ வாங்கினாலோ, அதற்கு எதிராக ஏதும் செய்ய முடியாது. கொண்டு வந்து கொட்டுவார்கள். எவ்வளவுதான் வாங்க முடியும்? வாங்கித்தான் என்ன செய்ய? சில நிறுவனங்கள் மெல்ல இடியும் கட்டடம்போல. 'டிரண்டு இஸ் தி பெஸ்ட் பிரண்டு' என்பது பங்குச் சந்தை முதுமொழிகளில் ஒன்று. டிரெண்டு முக்கியம்.

சிறு முதலீட்டாளர்களுக்கு ஏன் ஒரு பங்கு விற்கப்படுகிறது என்கிற காரணம் தெரிவது அரிது. முன்பிருந்த விலையை மட்டும் மனதில் வைத்து இப்போது இவ்வளவு மலிவாகக் கிடைக்கிறதே என்று வாங்கி கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்.

'நீங்கள் சொல்வதுபோல இந்த பங்கு நிச்சயம் மோசமானதுதானா, பிறகு விலை ஏறினால்?' என்று கேட்கத் தோன்றுகிறதா?

மொமென்டம் பங்குகள்
மொமென்டம் பங்குகள்

ஏகதேசமாக ஏதாவது ஒன்று அப்படி ஏறக்கூடும். அந்த வாய்ப்பு கொஞ்சம் இருக்கவே செய்கிறது. இந்த இடத்தில் ஒரு கேள்வி மற்றும் ஒரு அட்வைஸ்.

கேள்வி : அப்படிப்பட்ட ஒரு பங்கை ஏன் விவரமறிந்த ஹெச்.என்.ஐ-க்கள், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் போன்றோர் வாங்கவில்லை? வாங்கினால் விலை இவ்வளவு இறங்காதே, சந்தைக்குத் தெரியாததா?

அட்வைஸ்: அப்படி லாபம் செய்யும் ஒரு வாய்ப்பு தவறினாலும் தவறட்டும். அது தவறவிடும் லாபம்தான். அதே சமயம் வாங்கிய விலை இறங்கிவிட்டால், அது கையிலிருக்கும் பணத்துக்கு அல்லவா நஷ்டம். அதை யோசித்துப் பாருங்கள்.

புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைக் காட்டிலும் கையிலிருக்கும் ஒன்று மேல். ஆங்கிலத்தில் 'A bird in hand is better than two in the bush' என்பார்கள். காரணம், கூட்டில் இருப்பதை எடுக்கிறேன் என்று கையிலிருப்பதை கீழே வைத்துவிட்டுப் போனால், அது பறந்துபோய்விடலாம். எது கையிலிருக்கும் பறவை, எது புதரில் இருக்கும் பறவை என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.