Published:Updated:

பங்குச்சந்தையில் ஆப்ஷன் என்பது என்ன... அதனால் அதிக லாபம் கிடைக்குமா? #SmartInvestorIn100Days நாள்-81

#SmartInvestorIn100Days

பங்குச் சந்தையில் ஆப்ஷன் என்பது பற்றி இன்றைய பகுதியில் பார்க்கலாம்.

பங்குச்சந்தையில் ஆப்ஷன் என்பது என்ன... அதனால் அதிக லாபம் கிடைக்குமா? #SmartInvestorIn100Days நாள்-81

பங்குச் சந்தையில் ஆப்ஷன் என்பது பற்றி இன்றைய பகுதியில் பார்க்கலாம்.

Published:Updated:
#SmartInvestorIn100Days

ஆப்ஷனை எளிமையாக விளக்குங்கள் என்று என்னிடம் கேட்டால், `அது வேறு ஒன்றும் இல்லைங்க. பெட் (Bet) கட்டுவதுபோலதான். பெட்டில் ஜெயித்தால் பணம் வரும். தோற்றால் கட்டிய பணம் போய்விடும் இல்லையா? கிட்டத்தட்ட அப்படிப்பட்டதுதான் ஆப்ஷன்’ என்பேன்.

Representational Image
Representational Image

ஜனவரி 10-ம் தேதி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிட் பங்கு விலை, கேஷ் மார்க்கெட்டில் 1,547 ரூபாயாக இருந்தது. இன்னும் சில நாள்கள் அல்லது வாரங்கள் அல்லது மாதங்களில் அதன் விலை நிச்சயமாக, இன்னும் 100 ரூபாய் கூடிவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் என்ன செய்யலாம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர்களிடம் இருக்கும் மொத்த பணத்துக்கும் அந்தப் பங்கை வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஒரு பங்கு விலை 1,547. அதனால், முழுப்பணமும் கொடுத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாங்கலாம்.

அல்லது கையில் இருக்கும் அதே தொகைக்கு, மார்ஜின் மட்டும் கட்டிவிட்டு, கூடுதல் எண்ணிக்கையிலான பங்குகளுக்கு பியூச்சர்ஸில் உரிமை பெறலாம்.

உதாரணத்துக்கு ஒருவரிடம் 1,40,000 ரூபாய் பணம் இருந்தால், அவர் கேஷ் மார்க்கெட்டில் 90 பங்குகள் வாங்கலாம்.

அந்தப் பணத்தை மார்ஜின் பணமாகக் கட்டி, அவர், பியூச்சர்ஸ் பகுதியில், ஒரு லாட், ரிலையன்ஸ் வாங்கலாம். அதாவது 500 பங்குகள்.

பங்குச்சந்தையில் ஆப்ஷன் என்பது என்ன... அதனால் அதிக லாபம் கிடைக்குமா? #SmartInvestorIn100Days நாள்-81

அதே 1,40,000 பணதுக்கு அவர் ஆப்ஷன்கள் வாங்கினால், 1660 `ஸ்டிரைக் பிரைஸ்’ (Strike Price) இல், ஒரு ஆப்ஷன் விலை 6 ரூபாய் 5 காசு வீதம், 46 லாட்கள் வாங்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

46 லாட்கள் என்றால், 23,000 பங்குகள்.

இதற்காகத்தான் `பாலகுமாரன்கள்’ ஆசைப்படுகிறார்கள். கொஞ்சப் பணத்தில் அதிக `பங்குகள் வர்த்தகம் செய்யும் வாய்ப்பு தருவதுதான், ஆப்ஷன்ஸ்.'

இந்த இடத்தில், அட! இதென்ன `ஸ்டிரைக் பிரைஸ்’ என்றும் 1660 என்றும் வருகிறேதே! என்று தோன்றலாம்.

Representational Image
Representational Image

`தற்சமயம், இந்தப் பங்கு, இந்த விலை விற்கிறது. இது இன்ன விலைவரை உயரும்’ என்று ஏதாவது ஒரு விலையை நாம் முடிவு செய்யலாம். அப்படி நாம் முடிவுசெய்யும் விலையின் பெயர்தான், `ஸ்டிரைக் பிரைஸ்’.

அப்படிப்பட்ட பல ஸ்டிரைக் பிரைஸ்களும் சந்தையில் இருக்கும். ஒவ்வொரு ஸ்டிரைக் பிரைஸில் வாங்கவும் ஒரு விலை இருக்கும். அந்தக் குறிப்பிட்ட பங்கின் விலை மாற்றம் ஆக ஆக, ஆப்ஷன் ஸ்டிரைக் பிரைஸ் விலைகளும் மாறும்.

கீழே இருக்கும் படத்தில் காட்டப்பட்டிருப்பதுபோல, பல்வேறு விலைகளுக்கும் ஆப்ஷன் இருக்கும்.

பங்குச்சந்தையில் ஆப்ஷன் என்பது என்ன... அதனால் அதிக லாபம் கிடைக்குமா? #SmartInvestorIn100Days நாள்-81

கவனித்திருக்கலாம். கேஷ் மற்றும் பியூச்சர்ஸ் பகுதிகளில் பங்கு 1,547 ரூபாய்க்கு விற்கும்போது, `ஸ்டிரைக் பிரைஸ்’ என்பது அதைவிட சில நூறு ரூபாய்கள் குறைவாகவும், சில நூறு ரூபாய்கள் அதிகமாகவும் இருக்கின்றன. இவற்றில் எந்த `ஸ்டைரைக் பிரைஸூம் வாங்கலாம் என்றாலும், அதை விற்க எவரேனும் இருந்தால்தான் வாங்க முடியும். நடப்பு விலைக்கு அருகில் இருக்கும் விலைகளில் வாங்க விற்க நபர்கள் இருப்பார்கள். மிக வித்தியாசமான விலைகளுக்கு ஆள்கள் இல்லாமல் இருக்கலாம்.

நினைவிருக்கலாம், நாம் இப்போது பார்த்துக்கொண்டிருப்பது ஆப்ஷன்கள் குறித்து. இதில் இரண்டு வகை உண்டு என்றும், ஒன்று கால் ஆப்ஷன் என்றும் மற்றொன்று புட் ஆப்ஷன் என்றும் சொன்னது நினைவிருக்கலாம்.

share market
share market

மேலே பார்த்த விவரங்கள் எல்லாம், கால் ஆப்ஷன் குறித்து.

வாங்குவது போலவே கால் ஆப்ஷனை நாம் விற்கவும் செய்யலாம். உதாரணத்துக்கு அதே ரிலையன்ஸ் பங்கின் 1660 ரூபாய் ஸ்டைரைக் பிரைஸ் ஆப்ஷனை நாம் 6.05 ரூபாய்க்கு விற்கலாம். நாம் எதிர்பார்த்ததுபோல, ரிலையன்ஸ் பங்கு, விலை இறங்கும்போது, இந்த ஆறு ரூபாய் ஐந்து பைசா, கால் ஆப்ஷன் விலை குறைந்திருக்கும்.

உதாரணத்துக்கு, ஐந்து ரூபாய் ஐந்து பைசா ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அப்போது நமது கால் ஆப்ஷன் `செல் ஆர்டரை’, `ஸ்கொயர் ஆப்’ செய்துவிடலாம். அதாவது, நாம் அப்போது 23 லாட் ரிலையன்ஸ் 1,660 ரூபாய் `ஸ்டிரைக் பிரைஸ்’ கால் ஆப்ஷன்களைச் சந்தையில் வாங்கிவிடலாம்.

ஏற்கெனவே 23 லாட்களை 6.05-ல் விற்றிருப்பதால், லாட் ஒன்றுக்கு 500 ரூபாய் லாபம். காரணம், லாட் ஒன்றுக்கு 500 பங்குகள். 23 லாட்களுக்கு, 11,500 ரூபாய் லாபம்.

நாம் விற்றபின்பு பங்கு விலை உயர்ந்துவிட்டால், 7 ரூபாயாகிவிட்டால், லாட் ஒன்றுக்கு 95 காசு * 500 = 475 ரூபாய் நட்டம். 23 லாட்களுக்கு, 10,925 நட்டம்.

தவிர வாங்க, விற்க என்று இரண்டு பக்கமும் தரகு கட்டணம், வரிகள் உண்டு.

share Market
share Market

இவை எல்லாம் கால் ஆப்ஷன்கள் குறித்து. அப்படி என்றால் புட் ஆப்ஷன்கள் எதற்கு?

அதை பின்பு பார்க்கலாம்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism