Published:Updated:

`ஷார்ட் கவரிங்' செய்யும்போது பங்குகளின் விலை உயருமா? #SmartInvestorIn100Days நாள்-77

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

ஒரு பங்கை `ஷார்ட்’ அடிக்க பியூச்சர்ஸ் மார்க்கெட் வழிகொடுக்கும். ஆனால், வாங்கும்போது கட்டவேண்டியதைப் போலவே ஷார்ட் அடிக்கவும், மார்ஜின் பணம் கட்ட வேண்டும்.

பியூச்சர்ஸ் மார்க்கெட்டில் வாங்கவோ விற்கவோ ஆர்டர் போடும்போது எந்த மாத கான்ட்ராக்ட் என்று சொல்லிப் போட வேண்டும். இப்போது நடப்பது ஜனவரி மாதம் அல்லவா. இப்போது கான்ட்ராக்ட் போடுவது என்றால், ஜனவரி, பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் ஏதாவது ஒன்றில் வாங்கலாம், விற்கலாம். ஆம், எப்போதுமே பியூச்சர்ஸில் நடப்பு மாதம் உட்பட மூன்று மாதங்களில் ஏதாவது ஒன்றில் வாங்கலாம்.

நடப்பு மாதத்தை, `நியர் மன்த்’ என்றும், அடுத்த (பிப்ரவரி) மாதத்தை, `நெக்ஸ்ட் மன்த்’ என்றும் மூன்றாவது (மார்ச்) மாதத்தை, ஃபார் (Far) மன்த்’ என்றும் குறிப்பிடுவார்கள்.

ஜனவரி கான்ட்ராக்டில் வாங்கினால், ஜனவரிக்குள் விற்றுவிட வேண்டும். பிப்ரவரி கான்ட்ராக்டில் வாங்கியதை, பிப்ரவரி மாத இறுதிவரை மட்டுமே வைத்திருக்க அனுமதி உண்டு. உடனே, வாங்கிய அதே ஜனவரி மாதமே, ஏன், அடுத்த நிமிடம்கூட விற்கலாம். ஆனால், பிப்ரவரிக்குள் விற்றுவிட வேண்டும். அதேபோல, மார்ச் என்று வாங்கினால், மார்ச் மாத இறுதிவரை அவகாசம் உண்டு.

மாத இறுதி என்பது இந்திய பங்குச் சந்தைகளின் பியூச்சர்ஸ் மார்க்கெட்டில், அந்த மாதத்தின் கடைசி வியாழக்கிழமை. வியாழன் விடுமுறை தினமாக இருந்தால், அதற்கு முந்தைய நாள், அந்த மாதத்தின் பியூச்சர்ஸுக்கு கடைசி வர்த்தக தினம்.

Representional Image
Representional Image

முன்பு பார்த்த ரிலையன்ஸ் பங்கை, விலை உயரும் என்று நினைத்து வாங்கியவர், ஜனவரி கான்ட்ராக்டில் வாங்கியிருந்தால், விலை உயர்ந்திருந்தாலும் உயராவிட்டாலும், 2020, ஜனவரி மாதத்தின் கடைசி வியாழனான, 30-ம் தேதிக்குள் விற்றாக வேண்டும். விற்றுவிட்டு, உடனே பிப்ரவரி அல்லது மார்ச் மாத கான்ட்ராக்ட்டில் மீண்டும் ஒரு லாட் வாங்கலாம்.

கேஷ் மார்க்கெட்டில், மொத்த பணமும் கொடுத்துவிட்டதால் வாங்கியதை, எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

ஆனால், விற்றதற்கு புரோக்ரேஜ் மற்றும் வரிகள் போன்ற செலவு உண்டு. வாங்குவதற்கும் அதேபோல முழுச் செலவு. கேஷ் மார்க்கெட்டில் அப்படியில்லை. மொத்த பணமும் கொடுத்துவிட்டதால் வாங்கியதை, எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

தவிர, நிறுவனம் டிவிடெண்டு மற்றும் ரைட்ஸ் பங்குகள் போன்றவை கொடுத்தால், அவையெல்லாம் கேஷ் மார்க்கெட்டில் வாங்கியவருக்கு கிடைப்பதுபோல, பியூச்சர்ஸ் மார்க்கெட்டில் வாங்கியவருக்கு கிடைக்காது. போனஸ் பங்குகள் உண்டு. ஒன்றுக்கு ஒன்று என்று போனஸ் கொடுத்தால், ஒரு லாட் இரண்டு லாட் ஆகிவிடும். ஆனால், அதற்கு ஏற்ப விலை குறைந்துவிடும் என்பதை முன்பே பார்த்திருக்கிறோம்.

Shares
Shares
பியூச்சர் மார்க்கெட்டில் MRF நிறுவனத்தின் லாட் சைஸ் என்ன தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-75

வாங்கியதை விற்பதுபோல, பியூச்சர்ஸ் மார்க்கெட்டில், கையில் இல்லாத பங்குகளைக்கூட விற்றுவைக்கலாம். விற்றதற்கு கேஷ் மார்க்கெட்போல, டெலிவரி கொடுக்க வேண்டாம். இங்கே `ஆக்‌ஷன்’ என்ற ஏலமெல்லாம் கிடையாது. போட்ட கான்ட்ராக்ட் மாத இறுதிக்குள் வாங்கிவிட்டால் போதும். அவ்வளவு நேரம் கொடுக்கப்படுகிறது.

ஒரு பங்கை `ஷார்ட்’ அடிக்க பியூச்சர்ஸ் மார்க்கெட் வழிகொடுக்கும். ஆனால், வாங்கும்போது கட்டவேண்டியதைப் போலவே ஷார்ட் அடிக்கவும், மார்ஜின் பணம் கட்ட வேண்டும்.

வேறு ஒருவர் ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு விலை குறையும் என்று கணித்தால், அவரால் கேஷ் மார்கெட்டில் ஷார்ட் அடிக்க முடியாது. ஆனால், அவர் பியூச்சர்ஸ் மார்க்கெட்டில் ஒரு லாட் விற்று வைக்கலாம். அதுவும் எந்த மாத கான்ட்ராக்ட் என்று குறிப்பிட்டுச் செய்ய வேண்டும். ஜனவரி கான்ட்ராக்ட் என்றால், ஜனவரி 30-ம் தேதிக்குள், விற்றதற்கு ஏற்ப ஒரு லாட் வாங்கி கணக்கை நேர் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் புரோக்கரே சந்தைவிலையில் வாங்கி நேர் செய்துவிடுவார். லாபமோ நஷ்டமோ நமது கணக்கில் சேர்க்கப்படும்.

Representational Image
Representational Image
காலாண்டு முடிவுகளால் பங்கின் விலை உயரும்போது என்ன செய்ய வேண்டும்? #SmartInvestorIn100Days நாள்-76

ஷார்ட்டுக்குப்பின் விலை உயர்ந்து, `கவர்’ செய்தால் (நேர் செய்வதைத்தான் `கவர்’, Cover செய்வது என்பார்கள்), நஷ்டம். ஷார்ட்டுக்குப் பின் விலை இறங்கி அதில் கவர் செய்தால் லாபம். இந்த லாபத்துக்கு ஆசைப்பட்டுத்தான் மக்கள் ஷார்ட் அடிக்கிறார்கள். பின்னர் அப்படி ஷார்ட் அடித்தவர்கள் எல்லாம், ஒருசேர அவசரமாக வாங்கினால், அதன் பெயர், `ஷார்ட் கவரிங்’ அப்போது விலை உயரும்; தற்காலிகமாகவேணும்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு