Published:Updated:

பங்குச்சந்தையில் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்றால் என்ன?#SmartInvestorIn100Days நாள்-41

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

இவற்றை எப்போது வாங்குகிறோம் என்று மிகவும் யோசிக்கத் தேவையில்லை. விலை குறைகிறபோது வாங்கலாம். குறையுமா, உயருமா என்று தெரியாத போதும் வாங்கலாம். எப்போதும் சிறிய அளவுகளில் வாங்கிக்கொண்டே இருக்கலாம்.

`ப்ளூ சிப்’ பங்குகளில் முதலீடு செய்வதில் ஒன்றல்ல, இரண்டு வசதிகள் இருக்கின்றன. முதலாவது இவற்றைத் தேடுவதும் கண்டுபிடிப்பதும் சிரமமானதல்ல. இரண்டாவது, இவற்றை வாங்க இதுதான் சரியான சமயம் என்று நேரம் காலம் பார்ப்பது, `டைம்’ செய்வதெல்லாம் வேண்டியதில்லை.

சொல்லப்போனால், பங்குகள், பங்குச்சந்தைகளின் போக்குகள் பற்றி அதிகம் தெரியாதவர்கள் முதலீடு செய்யப் பாதுகாப்பானவை, இந்த ப்ளூசிப் பங்குகள்தான்.

ஊர் இருக்கிறது. வீடுகள், வயல்கள், சாலைகள் எல்லாம் இருக்கின்றன. புயல் உருவாகி, அந்த ஊரில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மூன்று, நான்கு அடிக்குத் தண்ணீர் நிற்கிறது. சில நாள்களுக்கு இந்த நிலை நீடிக்க, பெரும் சிரமம் உருவாகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பின்பு மழை நின்று தண்ணீர் வடிந்து ஓரளவு பரவாயில்லை என்கிற நிலை வருகிறது. அவரவர் தோட்டம் வயல்களுக்கு ஓடிப்போய் பார்க்கிறார்கள். பல பயிர்கள் நாசம் ஆகியிருக்கின்றன. கோழிகள், ஆடுகள் எல்லாம் செத்துப்போயிருக்கின்றன. மீதம் இருந்தவை மரங்களும், மாடுகளும்தான்.

இதை எப்படிப் பார்ப்பது? செடிகொடிகள், பயிர்கள், கோழி , ஆட்டுக்குட்டிகள் அழிந்துவிட்டன என்றா? அல்லது அவ்வளவு மழையிலும் மரங்களும் மாடுகளும் தப்பித்துவிட்டன என்றா?

முதலீடு
முதலீடு

எப்படிவேண்டுமானாலும் பார்க்கலாம். அது போகட்டும். பொருளாதாரத்திலும் பல புயல்கள் உருவாகும். பலத்த காற்று வீசும். மழை கொட்டித் தீர்க்கும். ஹர்ஷத் மேத்தா ஊழல், `டாட் காம் பஸ்ட்’, `சப் பிரைம்’ பிரச்னை என்று சில ஆண்டுகளுக்கு ஒருமுறை, காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியே தீரும். ஆனால், எது எப்போது என்பதை முன்கூட்டி அறிந்துகொள்ள முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்படி நான்கு நாள் மழையில் சிறிய, நடுத்தரச் செடிகொடிகள், வீட்டுப் பிராணிகள் சிரமத்துக்குள்ளாகி காணாமல் போய்விடுகின்றனவோ, அப்படி பொருளாதார சுனாமியின் போது, பல சிறிய நடுத்தர அளவு நிறுவனங்கள் காணாமல் போய்விடும். மரங்கள், பசுக்கள், காளைகளைப் போல பெரிய நிறுவனங்களும் சிரமத்துக்குள்ளாகும். ஆனால், அவற்றைப் போலவே மழை நின்ற பின் அவற்றால் முன்போல வாழ ஆரம்பிக்க முடியும்.

`ப்ளூ சிப்’ பங்குகள் அப்படிப்பட்டவை. பல களம் கண்டவை. மீண்டவை. சிறிய நிறுவனங்களால் கடுமையான சூழ்நிலைகளைத் தாக்குப்பிடிக்க முடியாது. அந்தக் காலகட்டத்துடன் அவை காணாமல் போய்விடும்.

பி.எஸ்.இ
பி.எஸ்.இ

ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தை ஊழல் காரணமாக 1992-ம் ஆண்டு, பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி. பின்பு 2000-வது ஆண்டு, `டாட் காம் பபுள் பஸ்ட்’ என்ற வீழ்ச்சி. 2008-ம் ஆண்டு மீண்டும் ஒரு வீழ்ச்சி. இப்படிப்பட்ட நேரங்களில், அதுவரை கொடிகட்டிப் பறந்த நில நிறுவனங்களின் பங்குகளை வாங்க ஆள் இருக்காது. அந்தப் பங்குகளின் விலைகள், அதள பாதாளத்தில் இருக்கும். பின்னர், விலை குறைந்து குறைந்து, வாங்க ஆள் இல்லாமல் `டிரேடிங்’ நின்று போய், பின்னர் `டி லிஸ்ட்’ ஆகிவிடும்.

ஆனால், விலை குறைந்தாலும் `ப்ளூ சிப்’ நிறுவனப் பங்குகள் மீண்டும் விலை சரியாகி பின்னர், முன்பைக் காட்டிலும் விலை உயரும்.

இதன் காரணமாக, இவற்றை எப்போது வாங்குகிறோம் என்று மிகவும் யோசிக்கத் தேவையில்லை. விலை குறைகிறபோது வாங்கலாம். குறையுமா, உயருமா என்று தெரியாத போதும் வாங்கலாம். எப்போதும் சிறிய அளவுகளில் வாங்கிக்கொண்டே இருக்கலாம்.

ஆம், SIP முறையில் தொடர்ந்து சிறிய அளவுகளில் ப்ளூ சிப் நிறுவனப் பங்குகளை வாங்குவது, ஒரு பாதுகாப்பான வழி.

1.10.2007-ம் ஆண்டு TCS பங்கு விலை ரூ.1038.

17.10.2008-ல் ரூ.454 . (பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சி)

18.05.2009-ல் ரூ.731.

16.6.2009-ல் ரூ.389.

4.1.2010-ல் ரூ.751.

3.1.2011ல் ரூ.1159.

1.1.2013ல் ரூ.1263.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். நல்ல நிறுவனப் பங்குகள் விழுவதில் விதிவிலக்கல்ல. சந்தை இறக்கங்களின் போது இவற்றின் விலைகளும் விழும். ஆனால், சூழ்நிலை சரியானவுடன், எழ அந்த நிறுவனங்களிடம் தெம்பு இருக்கும். சிக்கல் காலம் முழுவதும் தாக்குப்பிடிக்கக்கூடிய சக்தி இருக்கும். அதனால் நிச்சயம் எழுந்துவிடும்.

Go with the leaders
Go with the leaders

அதனால்தான் `Go with the leaders' என்பார்கள்.

நல்ல பங்குகளைச் சிறிய அளவுகளில் தொடர்ந்து வாங்குவதில் பல நன்மைகள் உண்டு. தொடர்ந்து வாங்குவதற்கென்று வழி முறைகள் உண்டு. ஒன்றின் பெயர் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்'. ஆங்கிலத்தில், சுருக்கமாக, SIP.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.