Published:Updated:

கையிலிருக்கும் பங்கை எப்போது விற்கவேண்டும், எப்போது விற்கக்கூடாது? #SmartInvestorIn100Days -நாள் 29

பங்குச்சந்தையில் இண்டிகேட்டர்களின் முக்கியத்துவம் என்ன? `சுவிங் ரிஜெக்ஷன்' மூலம் எப்படி உஷாராக இருக்கலாம்?

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

டாடா மோட்டார்ஸ் பங்கு, தீபாவளி அன்று நடந்த `முகூரத்' வர்த்தகத்தில் 16.7% விலை உயர்ந்தது. மிகக்குறைவாக இருந்த இதன் விலை, இவ்வளவு உயர்ந்துவிட்டதே, இதற்கு மேலும் உயரும் என்று பலரும் நினைத்திருக்கலாம். குறிப்பாக, டெக்னிக்கல் அனலிசிஸ் போன்றவற்றில் பரிச்சயம் இல்லாதவர்கள் நினைத்திருக்கலாம். கையில் இருந்ததை விற்றிருக்கலாம். ஆனால், நாம் முன்பு பார்த்த RSI-ல் இருக்கும் `சுவிங் ரிஜெக்‌ஷன்’ என்ற `இண்டிகேட்டர்’ தெரிந்தவர்கள், நிச்சயமாக மேலும் விலை உயரும் என்று அந்தக் கூடுதல் விலையிலும் விற்காமல், வாங்கியிருப்பார்கள். `இதற்கு மேலுமா உயரும்!’ என்று நினைப்பது `காமன்சென்ஸ்’. `இல்லை, இனியும் உயரும்’ என்று அந்த நேரத்தில் முடிவு செய்ய வைப்பது `டொமைன் நாலெட்ஜ்’

டெக்னிக்கல் அனலிசிஸ், ஒரு பங்கின் ஏற்ற இறக்கத்தை கணித்துச் சொல்லுமா? #SmartInvestorIn100Days நாள்-27

அதாவது இந்த விஷயம் குறித்த குறிப்பான நாலெட்ஜ். என்னதான் மோசமான செய்தியாக இருந்தாலும் ஒரு நிறுவனப் பங்கை தொடர்ந்து விற்றுக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் அந்தப் பங்கின் விலையில், குறைந்தபட்சம் ஒரு சில நாள்களுக்காவது சிறிய விலை உயர்வு வரும். காரணம் அது `ஓவர் சோல்ட்’ ஆகிவிடும். இதை RSI என்ற இண்டிகேட்டர் காட்டும்.

இவ்வாறு நடந்திருப்பதை யெஸ் பேங்க் பங்கின் RSI சார்ட்டில் பார்த்தால் தெரியும். படத்தின் மேல் பகுதியில் சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் காட்டப்பட்டிருப்பது பங்கின் விலை. படத்தின் கீழ்பகுதியில் லைன் (கோடுகளாக) காட்டப்பட்டிருப்பது யெஸ் பேங்க் பங்கின் RSI.

யெஸ் பேங்க் பங்கின்  RSI சார்ட்
யெஸ் பேங்க் பங்கின் RSI சார்ட்
நன்றி: amcharts

பலரும் யெஸ் பேங்க் பங்குகளைத் தொடர்ந்து விற்க, அதன் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் எண், RSI செப்டம்பர் 27-ம் தேதி 31 ஆக இருப்பதை, படத்தில் பார்க்க முடியும். அப்போது அந்தப் பங்கின் அன்றைய தின முடிவு விலை 48.75 ரூபாய். அதன்பின் RSI 30-க்கும் கீழ் போகிறது. அதன்பின், அந்தப் பங்கின் விலையில் உயர்வு வந்தது. RSI-யும் உயர்ந்தது.

இப்படி RSI, 30-க்கும் கீழ் இறங்கி, -30-ஐ நோக்கி உயர்ந்து, மீண்டும் 30-க்கு கீழ் இறங்கி, மீண்டும் 30-க்கும் மேல் உயர்கிறபோது அதன் வலு கூடுதல். அதைத்தான் `சுவிங் ரிஜெக்‌ஷன்' என்கிறார்கள்.

இதே நிகழ்வை, டாடா மோட்டார்ஸ் பங்கு விலையிலும் பார்க்கலாம். தொடர்ந்து விலை இறங்கிக்கொண்டே வந்த டாடா மோட்டார்ஸ் பங்கு விலையால் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி அதன் RSI, 21க்கு கீழே வந்துவிட்டது. அதன்பின், அந்தப் பங்கின் விலை உயர ஆரம்பித்தது. உயர்ந்து, உயர்ந்து அதன் RSI 30-க்கும் மேல் போய்விட்டது.

டாடா மோட்டார்ஸ்  RSI சார்ட்
டாடா மோட்டார்ஸ் RSI சார்ட்
நன்றி: amcharts
யெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா? இன்னும் விலை வீழுமா? #SmartInvestorIn100Days - நாள் 10

யெஸ் பேங்க் RSI-க்கும், டாடா மோட்டார்ஸ் RSI-க்கும் இடையே ஒரு வேறுபாடு இருப்பதை சார்ட்டில் பார்த்தால் தெரியும். டாடா மோட்டார்ஸ் RSI, 21 என்ற அளவுக்குக்கீழ் போய், பின்பு மேல் எழும்பி முப்பதுக்கு அருகில் வந்தது. ஆனால், உடனடியாக மீண்டும் கீழிறங்கியது. அதன்பின் மீண்டும் அது முப்பதைத் தாண்டியது. இப்படி ஆவதை, டெக்னிக்கல் அனலிசிஸில் `சுவிங் ரிஜெக்‌ஷன்’ என்பார்கள். இதுவும் ஒரு `இண்டிகேட்டர்’. சில பங்குகளில் இரண்டாவது முறை RSI, 30 எனும் கட்டத்தைத் தாண்டியதும் பங்கின் விலை வேகமாகவும் வலுவாகவும் மேலே போய்விடும்.

119 ரூபாய் என்ற அடிமாட்டு விலைக்கு வந்த டாடா மோட்டார்ஸ் பங்கு விலை, 130 என்கிற அளவில் உயர்ந்துவிட்டு, அதைத் தாண்டாமல் கீழ் இறங்கியது. அதன்பின் மீண்டும் விலை உயர்ந்தபோது, 130-ஐத் தாண்டி 135, 140 என்கிற அளவுகளோடு நிறுத்திக்கொள்ளவில்லை. ஒரே நாளில் 17% உயர்வு. மீண்டும் அடுத்த வர்த்தக நாளிலும் மற்றொரு 17% என்பதுபோல உயர்ந்து, விலை 170 ரூபாயைத் தொட்டது.

Share Market
Share Market

இப்படி RSI, 30-க்கும் கீழ் இறங்கி, -30-ஐ நோக்கி உயர்ந்து, மீண்டும் 30-க்கு கீழ் இறங்கி, மீண்டும் 30-க்கும் மேல் உயர்கிறபோது அதன் வலு கூடுதல். இந்த `சுவிங் ரிஜெக்‌ஷன்'தான் டாடா மோட்டார்ஸ் பங்கு விலையில் நடந்திருக்கிறது.

இது தெரிந்தவர்கள், வாங்கி லாபம் பார்த்திருப்பார்கள். பங்குச்சந்தையில் கணிசமாகப் பணம் செய்யும் வர்த்தகர்கள், இதுபோன்ற இண்டிகேட்டர்களைக் கவனிக்கிறார்கள்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.