Published:Updated:

வாங்கிய பங்கை எப்போது விற்கவேண்டும்? ஜுன்ஜுன்வாலா காட்டும் வழி!  #SmartInvestorIn100Days நாள் - 36

#SmartInvestorIn100Days
News
#SmartInvestorIn100Days

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, நீண்டகால முதலீடு செய்யும் வகையைச் சேர்ந்தவர். ஒரு பக்கா இன்வெஸ்டார். அவர்,`ஷார்ட் டெர்ம் டிரேடு’ போன்ற வேறு அணுகுமுறைகள் எதிலும் ஈடுபடுவதில்லை.

கண் குறைபாடு உள்ளவர்கள் சிலர் யானையைப் `பார்த்த’ கதையை சில அத்தியாயங்களுக்கு முன்பு பார்த்தோம். அவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் கைகளுக்கு எட்டியதை வைத்து, தடவிப் பார்த்து, உணர்ந்து, யானை இப்படித்தான் இருக்கிறதென்று முடிவு செய்துகொண்டார்கள். அதேபோலதான் பங்குச்சந்தையும். பலரும் நினைத்துக்கொண்டிருப்பது போல அது ஒரே மாதிரியானது அல்ல.

54 பிளேயிங் கார்ட்ஸ் வைத்துக்கொண்டு எத்தனையோ விதமான விளையாட்டுகளை, சீட்டுக்கட்டில் விளையாடுவது போல, ஒரே பங்குச்சந்தையில் ஏகப்பட்ட அணுகுமுறைகளைக் கையாள்கிறவர்கள் இருக்கிறார்கள்.
நீண்டகால முதலீடு
நீண்டகால முதலீடு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

லாபகரமாகத் தெரியும் IPO க்களுக்கு மட்டும் விண்ணப்பிப்பவர்கள், வாங்கி உடனுக்குடன் விற்கும் இன்ட்ரா டே டிரேடர்கள், டிரேட் செய்பவர்கள், பியூட்சர்ஸ் & ஆப்ஷன்ஸில் விளையாடுபவர்கள், முதலீடு செய்து பணம் சேர்ப்பவர்கள், முதலீடு செய்கிறவர்களுக்குத் தேவைப்படும் மார்ஜின் பணம் கொடுத்து சம்பாதிப்பவர்கள் என்று பங்குச் சந்தைகளுக்குள் பலவகையினர் இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நேற்றைய அத்தியாயத்தில் பார்த்த, 59 வயதாகிற ஜுன்ஜுன்வாலா, சார்டட் அக்கவுன்டென்சி படித்தவர். 1985-ம் ஆண்டு மிகக்குறைந்த தொகையான சுமார் 5,000 ரூபாயுடன் பங்குமுதலீட்டில் ஈடுபட்டு, தற்போது 2019-ம் ஆண்டு சுமார் 18,000 கோடி ரூபாய் மதிப்பிற்குப் பங்குகள் வைத்திருப்பவர்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, நீண்டகால முதலீடு செய்யும் வகையைச் சேர்ந்தவர். ஒரு பக்கா இன்வெஸ்டார். அவர்,`ஷார்ட் டெர்ம் டிரேடு’ போன்ற வேறு அணுகுமுறைகள் எதிலும் ஈடுபடுவதில்லை.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

அவரது நிறுவனத்தின் பெயர் ரேர் எண்டர்பிரைசஸ். அவர் பெயரின் முதல் இரண்டு ஆங்கில எழுத்துகளான RA மற்றும் அவர் மனைவியின் பெயரான ரேகாவிலிருந்து முதல் இரண்டு ஆங்கில எழுத்துகளான RE ஆகிய நான்கையும் சேர்த்து, (RARE) `ரேர் எண்டர்பிரைசஸ்' என்று பெயரில் நிறுவனம் வைத்து, முழுநேரமும் பங்கு முதலீட்டில் ஈடுபட்டு வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலே பார்த்த எல்லா அணுகுமுறைகளிலும் பணம் பண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள். அதனால் எல்லா முறைகளைப் பற்றியுமே பார்க்கலாம். முதலில், பலருக்கும் ஒத்துவரும் நிச்சய வழியான இன்வெஸ்ட்மென்ட் வழி முறை பற்றி. அதற்கு ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நல்ல எடுத்துக்காட்டு.

பங்குகளில் நீண்டகாலமாக முதலீடு செய்துவருபவர் இவர். வெற்றிகரமான முதலீட்டாளர். புதிதாக பங்கு முதலீட்டுக்கு வருகிறவர்கள் மற்றும் இன்னமும் நிச்சய லாபம் பார்க்காத முதலீட்டாளர்கள் பலரும் இவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான செய்திகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

முதலில் பார்க்க இருப்பது பங்கு முதலீட்டில் அவரது அணுகுமுறை குறித்து. இவர் கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாகப் பங்கு முதலீட்டில் இருக்கிறார். இன்னும் பல ஆண்டுகள் தொடர்வார் போலத் தெரிகிறது. இதை வைத்து என்ன புரிந்துகொள்ளலாம்?

உள்ளே வரும் போதே, தான் ஒரு `லாங் டெர்ம் இன்வெஸ்டார்’ என்கிற நினைப்பு மற்றும் அதற்குரிய மனநிலையுடன் வந்திருப்பார். முதலீட்டில் லாபம் செய்ய விரும்புகிறவர்களுக்குத் தேவைப்படும் முக்கிய அம்சம் இது.

பலருக்கும் இந்த மனநிலை இருப்பதில்லை. எவ்வளவோ நபர்கள் பல ஆண்டுகளாக பங்கு முதலீட்டில் இருப்பார்கள். ஆனால், பணம் பண்ணியிருக்கமாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான காரணமும் தெரியாது.

Investment
Investment

பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று, அவர்கள் பங்குச் சந்தையை முழுமையாக நம்பாததாக இருக்கும். பங்குச் சந்தையை நம்பாதது என்றால்? ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல, எப்போதும் சந்தேகத்துடனே அணுகுவார்கள்.

வாங்குவார்கள். சிறிது லாபம் வந்ததுமே, உடனே விற்காவிட்டால் மீண்டும் விலை குறைந்துவிடுமோ என்று பதறிக்கொண்டு விற்றுவிடுவார்கள். வேறு சமயம் வேறு பங்கு வாங்குவார்கள். கொஞ்சம் விலை இறங்கும். மேலும் இறங்கிவிடுமோ என்ற அச்சம் அவர்களை விற்கத்தூண்டும். உடனே விற்றுவிடுவார்கள்.

ஆக, அவர்கள் வாங்கியதும் அது விலை இறங்கினாலும் விற்பார்கள், விலை உயர்ந்தாலும் விற்பார்கள். இதைத்தான் நம்பிக்கை இல்லாமல் செயல்படுவது என்பது.

ஒன்றில் கிடைத்திருக்கக்கூடிய லாபம் குறைந்துவிடும். அடுத்ததில் நட்டம் ஏற்படும். இப்படியே தொடர்ந்து செய்ய, முதல் கரையும். வேறு பலன் ஒன்றும் இல்லை.

ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்ஃபோலியோவில் மிக அதிகமான மதிப்புக்கு இருக்கும் பங்கு டைட்டன் கம்பெனி. அந்தப் பங்கின் அக்டோபர் 24-ம் தேதி விலை, 1,374 ரூபாய். அதே பங்கு நவம்பர் 11-ம் தேதி விலை, 1,155 ரூபாய்.

பங்கு ஒன்றுக்கு 219 ரூபாய் விலை குறைவு. சதவிகிதக் கணக்கில், 15.94 குறைவு.

ஜுன்ஜுன்வாலா விற்றுவிட்டாரா? விற்றதாக தகவல் இல்லை. விற்பாரா? அநேகமாக விற்கமாட்டார். தேவைகளுக்கு வேண்டுமானால் விற்கலாம். விலை குறைகிறதே என்று அச்சப்பட்டு அல்ல.

மார்ச் 2019 கணக்குப்படி அவர் வைத்திருந்தது, 5 கோடி டைட்டன் கம்பெனி பங்குகள். ஒரு பங்கிற்கு 219 ரூபாய் குறைகிறது என்றால், 5 கோடி பங்குகளுக்கு? 1,095 கோடி ரூபாய்கள். 17, 18 நாள்களில். இதுபோக அவர் மனைவி 1.16 கோடி பங்குகள் அவர் பெயரில் வைத்திருந்தார். அவற்றுக்கு மேலும் 225 சொச்சம் கோடி ரூபாய்கள் விலை குறைவு.

அவர்கள் விற்கமாட்டார்கள். காரணம், அந்தப்பங்கில் அவர்கள் `லாங் டெர்ம் இன்வெஸ்டார்’ கள். முதன்முதலில் ஜுன்ஜுன்வாலா டைட்டன் கம்பெனி பங்குகள் வாங்கியது, 2002, 2003-ம் ஆண்டுவாக்கில் என்றும், அந்த கம்பெனி பங்குகள் 10 ரூபாய் முக மதிப்பில், ரூ.100-க்கும் குறைவாக இருந்தபோது அவர் வாங்கினார் என்றும், இன்றைக்கு அவர் வாங்கிய பங்குகளுக்கு அடக்கவிலை பங்கு ஒன்றுக்கு 3 ரூபாய் என்றும் மதிப்பிடுகிறார்கள்.

ஆம். அவர் 16, 17 ஆண்டுகளாக அந்தப் பங்கை வைத்திருக்கிறார். இடையில் அந்தப் பங்கின் விலை எத்தனையோ முறை இறங்கியது, ஏறியது.

கடந்த 2018 அக்டோபரில் கூட 800 ரூபாய்க்குப் போயிருக்கிறது.

பங்குச்சந்தையில் பணம் பண்ண ஒரு நிச்சய வழி, நல்ல பங்குகளாகத் தேர்ந்தெடுத்து வாங்கி, அதனுடனே பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பயணிப்பது.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.