Published:Updated:

டி.சி.எஸ். பங்குகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது என்ன? #SmartInvestorIn100Days நாள் - 38

நீண்டகால முதலீடு
News
நீண்டகால முதலீடு

2004-ம் ஆண்டு, TCS நிறுவனம் IPO வெளியிட்டது. இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமமான டாடா குரூப்பில் இருந்து வெளியிடப்படும் பங்குகள்; மிகச் சிறப்பாகச் செயல்படும் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனம்! அதனால் பங்குகளை வாங்க பலத்த போட்டி இருந்தது.

கவாஸ்கர், டெண்டுல்கர், தோனி, விராட்கோலி போன்றோரின் மிகப்பெரிய வெற்றி என்பது அவர்களது நிகர வெற்றியைத்தான் குறிக்கிறது. அதென்ன வெற்றியில், நிகரவெற்றி? அப்படி ஒரு வெற்றி இருக்கிறதா, என்ன என்று கேட்கலாம்.

கால்பந்து விளையாட்டுப் போட்டி நடக்கிறது. ஒரு அணி, ஒரு கோல்தான் போட்டது. அந்த அணி வெற்றி பெற்றிருக்குமா என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்... பதிலா சொல்வீர்கள்? வேறு ஒரு கேள்வி அல்லவா கேட்பீர்கள். எதிரணி போட்ட கோல்கள் எத்தனை என்று தெரியாமல் ஒரு கோல் போட்ட அணி ஜெயித்ததா இல்லையா என்று எப்படிச் சொல்வது என்றுதானே கேட்பீர்கள்.

BSE
BSE

எதிரணி கோல் ஏதும் போட்டிருக்காவிட்டால், இந்த அணிக்கு வெற்றி. எதிரணி 2 கோல்கள் போட்டிருந்தால் இந்த அணிக்குத் தோல்வி. ஆக, நிகரமாக எத்தனை கோல் கூடுதலாகப் போடப்பட்டது என்பதுதானே விஷயம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதேதான் கிரிக்கெட் சாதனையாளர்களுக்கும். அவர்களும் சில போட்டிகளில் ஸ்கோர் செய்திருக்க மாட்டார்கள். பல போட்டிகளில் டெண்டுல்கர் ஒரு ஓட்டம்கூட எடுக்காமல் `டக் அவுட்’ ஆகியிருக்கிறார். ஆனால், வேறு பல போட்டிகளில் சதம், அரை சதம் என்று விளாசியிருக்கிறார்.

பங்குச் சந்தை முதலீட்டிலும் அப்படி நேரும். வாங்கிய எல்லா நிறுவனப் பங்குகளும் சரியாக வரும் என்று சொல்ல முடியாது. சில, தவறும். அது பரவாயில்லை. நிகரமாக என்ன என்று பார்க்க வேண்டும். நிகரமாக `ப்ளஸ்’ என்றால் வெற்றிதான்.

37 ஆண்டுக்கால முதலீட்டில் ஜுன் ஜுன் வாலா நிகரமாக வெற்றி பெற்றிருக்கிறார். பிரமாதமான லாபம். DHFL போன்ற சில பங்குகள் காலை வாரிவிடலாம். அதைத் தவிர்ப்பது எளிதல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரும்பாலும் டிரேடர்கள் ’அன்றாடம் காய்ச்சிகள்’போல. அன்றாடங்காய்ச்சி என்றால், அன்றைய தேவைக்கு அன்றைக்கு சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள். முதலீட்டாளர்கள் அப்படியல்ல.

Bull market
Bull market

பங்குச்சந்தையில் ஈடுபட்டு, செல்வம் சேர்ப்பவர்கள், முதலீட்டாளர்கள்தான். அவர்கள்தான் `வெல்த்’ ’கிரியேட்’ செய்துகொள்கிறார்கள்.

வைத்து, வளர்த்து, அது போடும் முட்டைகளை உண்ணாமல், பொறுமையின்றி வாத்தையே அறுத்துச் சாப்பிடுபவர்கள்போல, சின்னச் சின்ன லாபங்களுக்கு, பல ஆண்டுகள் வைத்து அனுபவிக்க வேண்டிய பங்குகளை டிரேடர்கள் சின்ன மற்றும் உடனடி லாபங்களுக்கு விற்றுவிடுவார்கள்.

2004-ம் ஆண்டு, TCS நிறுவனம் IPO வெளியிட்டது. இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமமான டாடா குரூப்பில் இருந்து வெளியிடப்படும் பங்குகள்; மிகச் சிறப்பாகச் செயல்படும் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனம்! அதனால் பங்குகளை வாங்க பலத்த போட்டி இருந்தது. பங்கு ஒன்று 850 ரூபாய் என ’ஆஃபர்’ செய்யப்பட்டது. மொத்தம் 5.5 கோடி பங்குகள் ஆஃபர் செய்தார்கள். வந்து சேர்ந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை மட்டும் 13 லட்சம்.

Index
Index

மிக அதிக ’ஓவர் சப்ஸ்கிரிப்ஷன்’ என்பதால், விண்ணப்பித்தவர்களில் சிலருக்கு மட்டும் ’அலாட்மென்ட்’ கிடைத்தது. பட்டியல் இடப்பட்ட முதல் நாள் 1,076 ரூபாய்க்கு விலைபோனது. அலாட்மென்ட் கிடைத்த பலர், குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள், உடனே சந்தோஷமாக விற்றுவிட்டு லாபத்தைக் கையில் பிடித்தார்கள்.

ஆனால், நீண்டகால முதலீட்டளர்கள் அந்த உயர்ந்த விலையில் வாங்கினார்கள். மேலும், விலை குறைகிற போதெல்லாம் தொடர்ந்து வாங்கினார்கள். இப்போது 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. வாங்கிய பங்குகளுக்கு TCS நிறுவனம் 2006-ம் ஆண்டு ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்கியது.

10 பங்குகள் வைத்திருந்தவர்களின் பங்கு எண்ணிக்கை 20 ஆகிவிட்டது. மீண்டும் 2009-ம் ஆண்டு ஒன்றுக்கு ஒன்று போனஸ். அதனால் அவர்கள் வசம் இருந்த 20 பங்குகள் 40 ஆகின. மீண்டும், 2018-ம் ஆண்டு மற்றொரு ’ஒன் ஃபார் ஒன்’ போனஸ் கொடுத்தார்கள். இப்போது 40 பங்குகள் குட்டி போட்டு, 80 பங்குகள் ஆகிவிட்டன.

போனஸ் என்றால், விலையில்லாமல், கொடுப்பது. தற்போது பங்கு ஒன்று 2,165 ரூபாய் விலை நடக்கிறது. அலாட்மென்டில் கிடைத்தவர்களுக்கு அடக்க விலை 850 ரூபாய். பத்து பங்குகள் கிடைத்திருந்தால் 10*850= 8,500 ரூபாய். இப்போது நவம்பர் 2019-ல் மதிப்பு, போனஸ் பங்குகளையும் சேர்த்து அவற்றின் மதிப்பு, 80*2,165= 1,73,200 ரூபாய்.

Sensex
Sensex

அலாட்மென்ட் கிடைக்காமல் சந்தையில் வாங்கியவர்களுக்கு அடக்க விலை 1,076 ரூபாய். பத்து பங்குகள் வாங்கியிருந்தால் 1076*10= 10,760 ரூபாய். 80 பங்குகளின் தற்போதைய மதிப்பு 1,73,200 ரூபாய். போட்ட பணம் 15 ஆண்டுகளில் 16 மடங்கு.

இது முதல் பெருக்கம் மட்டுமே. இந்த முதல் பெருக்கத்துக்கு கேப்பிடல் கெயின்ஸ் வரி கிடையாது. இது தவிர, TCS நிறுவனம் அதன் பங்குகள் வைத்திருப்போருக்கு, ஆண்டுக்கு ஆண்டு மிகப் பிரமாதமாக டிவிடெண்ட் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து கொடுக்கிறது.

Trading
Trading

கடைசியாகக் கொடுத்திருப்பது, சதவிகித கணக்கில் 3000%. ஒரு ரூபாய் முகமதிப்புள்ள பங்கிற்கு 30 ரூபாய் டிவிடெண்ட். 80 பங்குகள் வைத்திருப்போர்க்கு, 80*30= 2,400 ரூபாய். இதற்கும் கடந்த ஆண்டு வரை முழுமையாக வருமான வரி இல்லை. இந்த ஆண்டு, மொத்த டிவிடெண்ட் 10 லட்சத்துக்கு மேல் போனால், 10% மட்டும் வரி.

இப்படியாக 15 ஆண்டுகளாக வருமானம் வந்து கொண்டிருக்கிறது.

10 பங்குகளை 10,760 ரூபாய்க்கு வாங்கியவருக்கு, இப்போது 80 பங்குகளுக்கான டிவிடெண்ட் 2,400 ரூபாய். 100 ரூபாய் முதலீட்டிற்கு 22 ரூபாய் வருமானம். அதுவும் வருமான வரியில்லா வருமானம்.

இதுதான் ’லாங் டர்ம் இன்வெஸ்ட்மென்ட்’ தரும் அல்ல, கொட்டிக் கொடுக்கும் பலன்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.