Published:Updated:

பங்கின் முகமதிப்பு குறையும்போது மொத்த மதிப்பில் என்னென்ன மாற்றங்கள் நேரும்? #SmartInvestorIn100Days - 64

#SmartInvestorIn100Days

சுமார் 2,000 ரூபாய் விலை நடந்துகொண்டிருந்த HDFC Bank பங்குகளின் விலை திடீரென 1,000 ஆகிவிட்டதே என சிலர் நினைத்திருக்கலாம். அதற்கு காரணம், `ஸ்டாக் ஸ்பிலிட்’ தான்.

பங்கின் முகமதிப்பு குறையும்போது மொத்த மதிப்பில் என்னென்ன மாற்றங்கள் நேரும்? #SmartInvestorIn100Days - 64

சுமார் 2,000 ரூபாய் விலை நடந்துகொண்டிருந்த HDFC Bank பங்குகளின் விலை திடீரென 1,000 ஆகிவிட்டதே என சிலர் நினைத்திருக்கலாம். அதற்கு காரணம், `ஸ்டாக் ஸ்பிலிட்’ தான்.

Published:Updated:
#SmartInvestorIn100Days

இதுவரை கொஞ்சம் விரிவாகவே நிறுவனம் வழங்கும் பங்குகள் குறித்துப் பார்த்தோம். அதில் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. அதன் பெயர் `ஸ்டாக் ஸ்பிலிட்’ நிறுவனம் கொடுக்கும் டிவிடெண்ட் என்பது அந்நிறுவனப் பங்குகளின் முகமதிப்பு அடிப்படையில்தான். உதாரணத்துக்கு, TCS நிறுவனம் சமீபத்தில் வழங்கிய ஸ்பெஷல் டிவிடெண்ட் 4,000% என்பது அந்தப் பங்கின் முகமதிப்பைப்போல 4,000%. பங்கின் முகமதிப்பு 1 ரூபாய். 4,000 சதவிகிதம் என்பது 40 ரூபாய்.

ஒருவேளை, TCS நிறுவனப் பங்கின் முகமதிப்பு ஒரு ரூபாயாக இல்லாமல் 10 ரூபாயாக இருந்தால் 4,000 சதவிகிதம் என்பது 400 ரூபாயாகிவிடும். ஆக, டிவிடெண்டைப் பொறுத்தவரை முகமதிப்பு எவ்வளவு என்பதை வைத்துதான் தொகை அமையும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல நிறுவனத்தின் பங்குகள் எண்ணிக்கையும் முக மதிப்பை வைத்து மாறும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் முகமதிப்பு 10 ரூபாய். அந்நிறுவனத்தின் மொத்த ஈக்விட்டி கேப்பிடல் 6,339 கோடி ரூபாய். மொத்த பங்குகளின் எண்ணிக்கை 63,390 கோடி. இதே நிறுவனப் பங்குகள் 10 ரூபாய் முகமதிப்பாக இல்லாமல், 1 ரூபாய் முகமதிப்பாக இருந்தால், பங்குகளின் எண்ணிக்கை 6,33,900 ஆக இருக்கும்.

Shares
Shares

ஒரு லட்ச ரூபாய் பணம் 2,000 ரூபாய் தாள்களாக இருந்தால் 50 தாள்கள்தான் இருக்கும். அதே தொகை 100 ரூபாய் தாள்களாக இருந்தால் 1,000 தாள்களாகவும், 10 ரூபாய் தாள்களாக இருந்தால், 10,000 தாள்களாகவும் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறைந்த `டினாமினேஷன்’ என்றால் அதிக எண்ணிக்கையிலான தாள்கள் என்பதால், புழங்குவது எளிது. அதிகம் பேர் அந்தப் பணத்தைக் கொடுக்கலாம், வாங்கலாம் என்பது போலவே நிறுவனங்களின் ஈக்விட்டி கேப்பிடல் ஆன பங்குகளின் முகமதிப்பு குறைவாக இருந்தால், அதிக எண்ணிக்கையிலான பங்குகள் சந்தையில் புழங்கும். இது, வர்த்தகத்துக்கு ஒரு பாசிட்டிவான அம்சம்.

மேலும், முகமதிப்பு குறைவாக இருந்தால், பங்கின் விலையும் குறைவாக இருக்கும். உதாரணத்துக்கு MRF நிறுவனப் பங்கின் முகமதிப்பு 10 ரூபாய். ஒரு பங்கின் விலை 60,000 ரூபாய்க்கும் அருகில். இதுவே 1 ரூபாய் முகமதிப்பு பங்காக இருந்தால், விலை 6,000 ரூபாய்தான் இருக்கும். சிறுமுதலீட்டாளர்களும் வாங்கலாம். வைத்திருக்கலாம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு, 1 ரூபாய் முகமதிப்பாக இருந்தால் 160 ரூபாய்தான் விலை இருக்கும். 10 என்பதால் 1,600 ரூபாய்.

இந்தக் காரணங்களால் சில நிறுவனங்களின் நிர்வாகங்கள் முடிவெடுத்து, அவ்வப்போது அவர்களின் பங்குகளின் முகமதிப்புகளைக் குறைப்பார்கள். அப்படிச் செய்வதன் பெயர் `ஸ்டாக் ஸ்பிலிட்’. பங்கை, சிறு துண்டுகளாக்குவது. அப்படி, சமீபத்தில் செய்த ஒரு நிறுவனம் HDFC Bank.

HDFC Bank பங்கின் முகமதிப்பு 2 ரூபாயாக இருந்தது. அதை 2019, மே மாதம் 22-ம் தேதி முதல் 1 ரூபாய் முகமதிப்பாக்கிவிட்டது அந்நிறுவனம். அதன் காரணமாக, அதுசமயம் அந்நிறுவனப் பங்கு வைத்திருந்தவர்களின் பங்குகளின் முகமதிப்புகள், 1 ரூபாயாகக் குறைந்து, பங்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகிவிட்டது. 100 பங்குகள் வைத்திருந்தவர்களுக்கு மற்றொரு 100 பங்குகள். இது, ஒரு 2 ரூபாய் நாணயத்தைப் பெற்றுக்கொண்டு, இரண்டு 1 ரூபாய் நாணயங்கள் (சில்லரை மாற்றிக்கொள்வது) கொடுப்பது போலதான்.

shares
shares

சுமார் 2,000 ரூபாய் விலை நடந்துகொண்டிருந்த HDFC Bank பங்குகளின் விலை திடீரென 1,000 ஆகிவிட்டதே என சிலர் நினைத்திருக்கலாம். அதற்கு காரணம், `ஸ்டாக் ஸ்பிலிட்’ தான். ஒரு பங்கின் மதிப்பு குறையும். ஆனால், மொத்தமதிப்பில் மாற்றம் இருக்காது.

ஒருவகையில் பார்த்தால், இதுவும் போனஸ் கொடுக்கையில் பங்குவிலைகளில் ஏற்படும் மாற்றம்போலதான். விலை குறையும். அதே சமயம் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கை உயர்ந்துவிடும். இப்படிச் செய்தபின், HDFC Bank பங்கின் விலை மேலும் உயர்ந்து, 1,290 ரூபாயாக இருக்கிறது.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism