Published:Updated:

நம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா?! #SmartInvestorIn100Days நாள்-21

``இன்ஃபோசிஸ் நிர்வாகத்தில் சில தவறுகள் நடக்கின்றன. லாபத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக சில செலவுகளைக் குறைத்து கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள்." - விசில்புளோயர்கள்

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 16.72 சதவிகிதம் விலை குறைந்திருக்கிறது.

நல்ல நிர்வாகம் என்று பெயர் வாங்கிய, இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டின் நல்ல நிதிநிலை முடிவுகளை சென்ற வாரம் அறிவித்த நிறுவனத்தின் பங்கு விலைகள், சந்தை ஏறுமுகமாக இருக்கிற நிலையில் இவ்வளவு விழ என்ன காரணம்?

நேற்று ஒரு நாளில் மட்டும் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் என இரண்டு சந்தைகளிலும் சேர்த்து, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான பங்குகள் வர்த்தகம் ஆகியிருக்கின்றன.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்

இதற்குக் காரணம் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் பங்குச் சந்தை நிர்வாகங்களுக்கு அனுப்பியிருக்கும் ஒரு மின்னஞ்சல். குறிப்பாக US Securities and Exchange Commission-க்கு அனுப்பியுள்ள ஒரு மின்னஞ்சல்.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்

``இன்ஃபோசிஸ் நிர்வாகத்தில் சில தவறுகள் நடக்கின்றன. லாபத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக சில செலவுகளை குறைத்து கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். பல்வேறு விதங்களில் இன்ஃபோசிஸ் நிறுவனம் அது ஈட்டும் லாபத்தைக் காட்டிலும் கூடுதலாக காட்டுகிறது என்பது போன்ற சில குற்றச்சாட்டுகளுடன், அவற்றுக்கான போன் உரையாடல் ஒலிப்பதிவுகளும் எங்களிடம் இருக்கின்றன என்றும் முதலில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு (போர்டுக்கு) நாங்கள் செப்டம்பர் 20-ம் தேதி எழுதியிருக்கிறோம்" என்றும் அந்த மின்னஞ்சலில் தெரிவித்திருக்கிறார்கள் விசில்புளோயர்கள்.

``போர்டுக்கு எழுதியதற்குப் பதில் ஏதும் வரவில்லை. நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஏதும் எடுக்கவில்லை. இதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்" என்பதுபோல கண்காணிப்பு ஆணையங்களுக்கு ஒரு மெயில் அனுப்பியிருக்கிறார்கள்.

அவ்வளவுதான்... இன்ஃபோசிஸ் பங்கு விலைகளில் பூகம்பமே வெடித்திருக்கிறது.

நாம் முன்பு, இந்தப் பகுதியில், முதலீடு செய்யத்தக்க பங்குகள் என்றால் குறைந்தபட்சம் 5 லட்சணங்கள் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததும் அந்த ஐந்தில் `குட் கவர்னென்ஸ்’ ஒன்று என்றும் எழுதியிருந்தது நினைவிருக்கலாம்.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்
பங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! #SmartInvestorIn100Days - நாள் 3

அந்த `குட் கவர்னென்ஸ்’ தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இப்போது கேள்விக்குறி ஆகியிருக்கிறது.

அப்படி ஒரு மெயில், நிறுவனத்தின் ஊழியர்களிடம் இருந்தே வந்ததும், அமெரிக்க பங்குச்சந்தையில் அமெரிக்கன் டெப்பாசிட்டரி ரெசிப்ட்ஸ் ADR என்ற வகையில் பட்டியல் இடப்பட்டு நமது NSE, BSE-யில் டிரேட் ஆகி வந்த இன்ஃபோசிஸ், திங்கட்கிழமை ஒருநாள் வர்த்தகத்தில் மட்டும் 15 % விழுந்தது.

திங்கட்கிழமை இந்திய பங்குச் சந்தைகளுக்கு மகாராஷ்டிர மாநில தேர்தல் காரணமாக விடுமுறை. நேற்று, செவ்வாய்க் கிழமை வர்த்தகம் தொடங்கியதும் 10 % விழுந்து அந்தப் பங்கில் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. பின்பு மீண்டும் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து விலைகள் தொடர்ந்து விழுந்தன. நாள் முழுக்க இறக்கம்தான்.

நிதிநிலை அறிக்கைக்குப் பின், இன்ஃபோசிஸ் விலை குறைந்தது, டி.சி.எஸ். விலை அதிகமானது... ஏன்? - நாள்-18

இங்கே சிலது முறையாக நடக்கவில்லை என்று புகார் கொடுத்து இருப்பவர்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள், பெயர்களைச் சொல்ல விரும்பாத சில ஊழியர்கள். அவர்களை, `எத்திக்கல் எம்ப்ளாயிஸ்’ என்று பெயர் போட்டுக்கொள்பவர்கள். எத்திக்கல் என்றால் நேர்மையான என்றும் பொருள் கொள்ளலாம். உள்ளே இப்படியெல்லாம் நடக்கிறது என்று வெளியுலகுக்கு தெரியப்படுத்துகிறவர்களை, பொதுவாக `விசில் ஃபுளோயர்ஸ்’ என்பார்கள். இவர்கள் செய்திருப்பது `விசில் ஃபுளோயிங்’ தான்.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ்
நிதிநிலை அறிக்கைக்குப் பின், இன்ஃபோசிஸ் விலை குறைந்தது, டி.சி.எஸ். விலை அதிகமானது... ஏன்? - நாள்-18

இந்தப் பங்கை யார் யாரெல்லாம் வாங்கி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் நிலைமை குறித்து கூடுதல் புரிதல் ஏற்படும்.

கிட்டத்தட்ட 77 சதவிகிதப் பங்குகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம் இருக்கின்றன. 10 சதவிகிதத்துக்கும் குறைவாக பொதுமக்களிடம். 77 சதவிகிதத்தில் ஒரு பகுதி, அதாவது 33.41% வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம். அவர்களுக்கு இதுபோன்ற செய்திகள் எல்லாம் ஏற்புடையவை அல்ல. விற்க ஆரம்பித்துவிடுவார்கள்.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களில் மியூச்சுவல் ஃபண்ட்களும் அடங்கும். அவை விற்பதை சற்று தாமதப்படுத்தலாம். சிறுமுதலீட்டாளர்கள் இதுதான் விலை குறைந்திருக்கும் நேரம் என்று வாங்குவார்கள்.

நேற்றைய முடிவு விலையுடன் இறக்கம் நிற்குமா அல்லது மேலும் விலை இறங்குமா என்று சொல்ல முடியாது. இன்ஃபோசிஸ் நிறுவனம் எடுத்திருக்கும் நடவடிக்கைப் போதுமானதா? அந்த விசாரணையின் முடிவு என்ன? அதை முதலீட்டாளர்கள் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதையெல்லாம் பொறுத்திருக்கிறது விலையின் எதிர்கால போக்கு.

nandan nilekani
nandan nilekani
வெளிச்சத்திற்கு வந்த இன்ஃபோஸிஸ் விவகாரம்... பங்குச் சந்தையில் நடந்தது என்ன?

இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு இஸ்ரேலிய நிறுவனத்திடமிருந்து ஆட்டோமேஷன் டெக்னாலஜி தொழில்நுட்பத்தை வாங்கியதில் முறைகேடு இருந்ததாக ஒருமுறையும், வெளியேறிய புரமோட்டர் ஒருவருக்கு அதிக தொகை கொடுத்துவிட்டதாக மற்றொருமுறையும் என இன்ஃபோசிஸ் நிறுவனம் இதற்குமுன்னர் இருமுறை இதுபோன்ற சிக்கலில் மாட்டியிருக்கிறது. பின்னர் நிறுவனத்தின் CEO சிக்கா வெளியேறினார். அதன்பின் இப்போது தலைவராக இருக்கும் நந்தன் நீல்கேணி வந்தார்.

எப்படிப் பார்த்தாலும் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கும் அதன் நிர்வாகத்துக்கும் அதன் பங்கு விலைகளுக்கும் இது ஒரு பெரிய சறுக்கல்தான். இதனால் இந்தப் பங்கின் ரேட்டிங் குறையும். ரீரேட் ஆகும்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.