Published:Updated:

சம்பாதிக்க ஆரம்பித்ததும் முதலீட்டை தொடங்கிட வேண்டும்... ஏன் தெரியுமா?#SmartInvestorIn100Days நாள்-96

ஆன்லைனில் ஆடும் ரம்மி மற்றும் ஏனைய விளையாட்டுகள், இன்ட்ராடே டிரேடிங் உட்பட பலவும் செலவு மட்டுமல்ல, கையில் இருக்கும் பணத்தை, முதலீட்டை அழிக்கும் நடவடிக்கைகள். அவை பழக்கம் ஆகிவிடக்கூடாது.

 மாதம் 1000 ரூபாயை 25 வயது முதல் தொடர்ந்து சேமித்து, சரியாக முதலீடு செய்து பெருக்கிய  ஒருவருக்கு,  அவரது 60-வது வயதில் கிடைக்கக்கூடிய தொகையைத் தாமதமாகத் தனது 55 வயதில் சேமிக்க ஆரம்பிப்பவர் பெறவேண்டுமென்றால், அவர் மாதம் ரூ.18,000 வீதம் சேமிக்க வேண்டும் என்கிறது ஒரு கணக்கு.

சம்பாதிக்கத் தொடங்கிய உடனேயே சேமிப்பதையும் ஆரம்பித்துவிட வேண்டும். காரணம், இப்போது சம்பாதிக்கிற பணம், இப்போதைய தேவைகளுக்கு மட்டுமல்ல. திரைப்படத்தின் இரண்டாவது பாதி ஆட்டத்தின் ’செகண்டு ஹாப்’ தேவைகளுக்கும் சேர்த்துதான்.

 `90-ஸ் கிட்ஸ்'  கிராண்ட் ஸ்லாம் வென்றதேயில்லை... எதனால் தெரியுமா? #Tennis

 பலருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு (’நைன்டீஸ் கிட்ஸ்’ உட்பட) அவர்களுக்கு வரும் வருமானத்தை எப்படி எதில் செலவழிப்பது மற்றும் எங்கே எவ்வளவு சேமிப்பது என்பனவற்றில் தெளிவு இல்லை. பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் நேரங்களில் சந்தித்திருக்கிறேன். அவர்களுடன் உரையாடியிருக்கிறேன். என் மனதில் பட்ட விஷயம், பெரும்பாலானவர்களுக்கு அந்தக் கவனங்கள் இல்லை.

Investment
Investment

வேலைக்குச் சேர்ந்ததும், கையில் கணிசமான பணம் கிடைக்கிறது. அவர்களாகவோ அல்லது உடன் பணிபுரிகிறவர்களைப் பார்த்தோ அவர்கள் ‘செலவு’  வழியில் போய்விடுகிறார்கள்.விலை உயர்ந்த உடைகள், போன்கள், இரு சக்கர வாகனங்கள், நண்பர்களுடன் விருந்துகள், சுற்றுலாக்கள் எனப் பலவற்றிலும் தாராளமாகச் செலவுசெய்கிறார்கள். சேமிப்பது இல்லை.

 கையில் பணம் கிடைக்கும் நேரம் சேர்க்க வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது தவிர, பலருக்கும் பெரும் கேடாக அமைவது அவர்களது பழக்கங்கள். மது போன்றவை மட்டுமல்ல. புதிதாக முளைத்திருக்கிற வில்லன்கள், ஆன்லைனில்  இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரம்மி, ’டிரீம் லெவன்’ போன்று பல விளையாட்டுகள் அவர்களைக் குறிவைத்தும் நடத்தப்படுகின்றன. முதலில், இலவசமாகக் கொஞ்சம் பணம் கொடுத்து ஆடத் தூண்டப்படுகிறார்கள். இவையெல்லாம்  சூது என்று அறியாமல் விளையாட்டு என்றும், மூளைக்கு வேலை என்பது போலவும் நம்பி, சம்பாதிக்கும் பணத்தை இதில் இழக்கிறார்கள்.

’டிரீம் இலெவன்’
’டிரீம் இலெவன்’

ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்டில் முதல் விதி, இருக்கும் பணத்திற்கு ரிஸ்க் எடுக்காமல் இருப்பது. விவரமறிந்த பங்குகளில் பலரும் லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து நன்றாக சம்பாதித்துக்கொண்டிருக்க, பலரும் சம்பாதிப்பதற்கு வழியாக டிரேடிங் மற்றும் பியூச்சர்ஸ் & ஆப்ஷனைத் தேர்வுசெய்து, தொடர்ந்து வேறு எங்கோ சம்பாதிக்கும்  பணத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள்.

மாத சம்பளக்காரர்களுக்கு டிரேடிங் வேண்டாம். பியூச்சர்ஸ் & ஆப்ஷன் வேண்டவே வேண்டாம். அவையெல்லாம் இன்வெஸ்ட்மென்ட் வழிகள் அல்ல. சிலர் காபிக்குப் பழகிவிட்டார்கள். சிலர் சிகரெட்டுக்கு. வேறு சிலர் மதுவிற்கு. பழகியதை விட முடியாது. கடினம். பெரும் முயற்சியும் கட்டுப்பாடும் வேண்டும்.

அவையெல்லாம் செலவு மட்டுமே வைக்கும். ஆனால், ஆன்லைனில் ஆடும் ரம்மி மற்றும் ஏனைய விளையாட்டுகள், இன்ட்ராடே டிரேடிங் உட்பட பலவும் செலவு மட்டுமல்ல, கையில் இருக்கும் பணத்தை, முதலீட்டை அழிக்கும் நடவடிக்கைகள். அவை பழக்கம் ஆகிவிடக்கூடாது.

 பழகிவிட்டால் அவை ’கம்பல்சிவ் பிகேவியர்’ என்ற நிலைக்குத் தள்ளிவிடும். செய்யாமல் இருக்க முடியாது. லாப நட்டம் புரியாது. பின்பு கடன் வாங்கி செய்யச்சொல்லும்.

பழக்கம் என்பது இரண்டு பக்கம் உள்ள கத்தி. அதை நல்லதுக்கும் பயன்படுத்தலாம். சேமித்து முதலீடு செய்து பணம் பெருக்கி ருசி கண்டுவிட்டால், அதையும் விடமுடியாது. அதுவும் ’கம்பல்சிவ் பிகேவியர்’  என்ற நிலைக்குப் போய்விடும்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு