Published:Updated:

பங்குச்சந்தையில் `ஸ்டாப் லாஸ்' எப்போது செய்ய வேண்டும் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-82

#SmartInvestorIn100Days

`ரன் த புராஃபிட். ஸ்டாப் த லாஸ்’ (Run the profit. Stop the loss) என்று பங்குச்சந்தையில் ஓர் அனுபவமொழி உண்டு.

பங்குச்சந்தையில் `ஸ்டாப் லாஸ்' எப்போது செய்ய வேண்டும் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-82

`ரன் த புராஃபிட். ஸ்டாப் த லாஸ்’ (Run the profit. Stop the loss) என்று பங்குச்சந்தையில் ஓர் அனுபவமொழி உண்டு.

Published:Updated:
#SmartInvestorIn100Days

சிலர், பங்குகளை வாங்கிய பின் அந்தப் பங்கின் விலை விழும். பதற்றப்பட மாட்டார்கள். `சில நாள்கள் விலை ஏறும். வேறு சில நாள்கள் இறங்கும்தான். இதெல்லாம் சகஜம்’ என்று சும்மா இருப்பார்கள். விலை மேலும் இறங்கும். இப்போது விற்றால் நஷ்டம் அதிகமாகிவிடுமே ’ வேண்டாம். மீண்டும் உயராமலா போய்விடும்’ என்று பொறுமை காப்பார்கள். விலை மேலும் குறையும். இறுதியில் நஷ்டத்தில் நிற்பார்கள்.

அவர்கள் செய்திருக்கவேண்டியது, `ஸ்டாப் லாஸ்’. அதாவது, நஷ்டத்தைத் தடுக்க, விலை குறிப்பிட்ட அளவுக்கும் கீழ் போனால், விற்றுவிடும் `ஸ்டாப் லாஸ்’ செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. அதனால் பெரிய நஷ்டம்.

ஸ்டாப் லாஸ் என்பது, குறிப்பாக டிரேடர்கள் செய்யவேண்டிய ஒன்று. மிக உறுதியாகத் தெரியாத பங்குகளில் முதலீடு செய்யும் போதும், `ஸ்டாப் லாஸ்’ அளவு தெரிந்துவைத்திருக்க வேண்டும். அந்த நிலை வரும்போது பயன்படுத்த வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் பகுதியில் பதில் கேட்டு வந்திருக்கிற கேள்விகளில், அப்படி மாட்டிக்கொண்டவர்களின் கேள்விகளும் இரண்டு இருக்கின்றன.

வேறு சிலர் அல்லது அதே நபர்கள், நல்ல பங்காக வாங்கி விடுவார்கள். விலை உயரும். ஓரளவு லாபம் என்பது அவர்களுக்கு சந்தோஷம் கொடுக்கும். `இந்த அளவு லாபம் வந்திருக்கிறதே... பரவாயில்லை, இதிலாவது நஷ்டமில்லாமல் போகட்டும். கிடைக்கும் லாபத்தை எடுத்துக்கொண்டுவிடலாம்’ என்று லாபம் தரும் பங்கை விற்றுவிடுவார்கள். லாபம்தான். ஆனால், சிறிய லாபம்.

Representational Image
Representational Image

அவர்கள் விற்ற பின்பும் அந்தப் பங்கின் விலை உயரும். முதல் சில நாள்கள், அப்படிப்பட்ட விலை உயர்வைப் பார்த்தும் சும்மா இருப்பார்கள். `எல்லா சமயமும் சரியாக மிக உயர்ந்த விலையில் விற்க முடியாது’ என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வார்கள்.

ஆனால் அந்தப் பங்கு, அதன் பின்னும் தொடர்ந்து விலை உயரும். அவர்களுக்கு வியப்பாக இருக்கும். அவர்கள் செய்தது என்ன? அல்லது செய்யாதது என்ன? என்ன காரணம்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்கள் செய்தது உடனடியாக `லாபத்தைப் பதிவுசெய்தது’. Booked the profit. அது, அந்த இடத்தில் தவறு. கண்ணில் தெரியும் லாபம் இல்லாமல் போய்விடக்கூடாது என்கிற ஆதங்கம். போய்விடுமோ என்ற அச்சம்.

`ரன் த புராஃபிட். ஸ்டாப் த லாஸ்’ (Run the profit. Stop the loss) என்று பங்குச்சந்தையில் ஓர் அனுபவமொழி உண்டு.

மேலே பார்த்தவை இரண்டு விதமான தவறுகள். முதலாவது, தொடர்ந்து விலை இறங்கவிருக்கும் பங்கை விற்காமல் வைத்துக்கொள்வது. இரண்டாவது, தொடர்ந்து விலை உயரும் பங்கை விற்பது.

பங்குச் சந்தையில் வாங்குகிறவற்றில் சில, சரியில்லாமல் போகும் ஆபத்து உண்டு. எவராலும், எந்த நிறுவனத்தாலும் 100 சதவிகிதம் சரியாக மட்டுமே செய்ய முடியாது. ஆனால், சரி வரவில்லை என்று தெரியவந்தால், உதறிவிட்டுவிட வேண்டும். அதற்குத்தான் `ஸ்டாப் லாஸ்’.

அப்படிப்பட்ட சிறு நஷ்டங்களையும் தாண்டி பணம் பண்ணவேண்டும் என்றால், வேறு சிலவற்றில் நல்ல லாபம் வரவேண்டும். அப்படி கிடைக்கும் சில வாய்ப்புகளை அவசரப்பட்டு, குறைத்துக்கொண்டுவிடக்கூடாது. அதற்குத்தான், `லாபத்தை ஓடவிடு’ என்பது.

Representational Image
Representational Image

என்ன விலைக்குக் கீழ் போனால் விற்பது, எதன் லாபத்தைத் தொடரவிடுவது என்பதெல்லாம் எப்படித் தெரியுமாம்? என்று கேட்கலாம்.

அவற்றுக்கெல்லாம் வழிகள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அந்த வழிமுறைகளின் பெயர், டெக்னிக்கல்ஸ் அல்லது டெக்னிக்கல் அனாலிசிஸ். அதையெல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism