Published:Updated:

சாவரின் தங்கப் பத்திரம் 2016-17 சீரிஸ் 4 - தங்க முதலீட்டில் கிடைத்த லாபம் என்ன தெரியுமா?

சாவரின் கோல்ட்
News
சாவரின் கோல்ட்

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு ஆண்டுதோறும் 2.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதிர்வு காலமாக எட்டு ஆண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் தேவைப்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு பணத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

சாவரின் தங்கப் பத்திரம் 2016-17 சீரிஸ் 4 - தங்க முதலீட்டில் கிடைத்த லாபம் என்ன தெரியுமா?

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு ஆண்டுதோறும் 2.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதிர்வு காலமாக எட்டு ஆண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் தேவைப்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு பணத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

Published:Updated:
சாவரின் கோல்ட்
News
சாவரின் கோல்ட்

மத்திய ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் பல்வேறு காலகட்டங்களில் சாவரின் கோல்ட் பத்திரங்கள் என்ற பெயரில்  999 என்ற அளவில் 24 கேரட் சுத்தமான தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு ஆண்டுதோறும் 2.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதிர்வு காலமாக எட்டு ஆண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் இடையில் பணம் தேவைப் பட்டால் முதலீடு செய்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்வு பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

சாவரின் கோல்டு பாண்டு
சாவரின் கோல்டு பாண்டு

அவ்வாறு கடந்த 2016-17-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி தங்க பத்திரங்களை வெளியிட்டது. தங்க பத்திரங்கள் வெளியிடும் பொழுது திட்ட காலம் தொடங்கப்படுவதற்கு முன்புள்ள ஒரு வாரத்தின் சராசரி விலையில் யூனிட்களின் விலை நிர்ணயம் செய்யப்படும். மேலும், ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும்போது சராசரி சுத்த தங்கத்தின் விலையில் இருந்து 50 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். அதன்படி அந்தப் பத்திரங்கள் வெளியிடப்பட்டபோது சுத்த தங்கத்தின் விலை ரூ.2,943 ஆக இருந்தது. அந்த விலையில் ரூ.50 தள்ளுபடி கொடுக்கப்பட்டு ஒரு யூனிட் விலை ரூ.2,893 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது அந்தப் பத்திரங்கள் வெளியிடப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளபடியால் முதலீட்டாளர்கள் விருப்பப்பட்டால் இந்தத் திட்டத்தில் இருந்து தற்போது விலகிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2022 செப்டம்பர் 17 அன்று ஐந்து ஆண்டுகள் முடிவு பெற்றது. அதன்படி கடந்த ஒரு வாரத்தில் சுத்த தங்கத்தின் சராசரி விலையான  ரூ.5,077 என்று ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2,893 முதலீடு செய்திருந்தால் தற்போது அந்த முதலீட்டாளருக்கு ரூ.5,077 கிடைக்கும். அதன்படி ஒரு யூனிட்டுக்கு ரூ.2,184 லாபம் கிடைக்கும். ஒரு கிராம் தங்கத்தைத்தான் ரிசர்வ் வங்கி ஒரு யூனிட்டாக நிர்ணயம் செய்திருந்தது. இதன் மூலம் முதலீட்டாளர் ஒரு கிராம் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் ஐந்து ஆண்டு களில் 75.49% வளர்ச்சி அடைந்து, அது அவருக்கு ரூ.2,184 லாபத்தைப் பெற்றுத் தந்திருக்கும்.

கோல்டு பாண்டு முதலீடு
கோல்டு பாண்டு முதலீடு

இதன் மூலம் தங்கப் பத்திரங்களில் செய்துள்ள முதலீடு பல நிலையான வருமானம் தரும் வங்கி டெபாசிட் திட்டம், போஸ்ட் ஆபீஸ் சேவிங் திட்டம் போன்ற திட்டங்களைவிட இரண்டு மடங்கு அதிக வருமானத்தைத் தந்துள்ளது என்பதை நாம் உணரலாம்.

 பொதுவாக, தங்க நகை வாங்கி சேர்ப்பதில் நமது இந்தியர்களின் விருப்பம் மிக அதிக அளவில் உள்ளது. மக்களில் அதிக அளவு தங்கத்தில் முதலீடு செய்யும் நாட்டவர்களில் நமது நாடு எப்போதும் முன்னணியில் இருப்பதிலிருந்து இதை நாம் உணர முடியும். தங்க நகைகளாக வாங்கி சேர்க்கும்போது செய்கூலி, சேதாரம் மற்றும் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி போன்ற பல காரணிகளால் நமது முதலீடு குறையும். மேலும், தங்க நகைகள் திருட்டு போன்ற பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும் சூழ்நிலையும் உள்ளது. அந்தத் தங்க நகைகளை நமது பணத் தேவைக்காக விற்கும் சூழ்நிலை ஏற்பட்டால் மார்க்கெட் விலையைவிட சற்றுக் குறைந்த விலையில்தான் விற்பனை செய்ய முடியும். இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது தங்க நகைகளில் இதே காலகட்டத்தில் முதலீடு செய்திருந்தால் நமது முதலீட்டின் அளவு 40% என்ற அளவுக்குதான் வளர்ந்திருக்கும். அதற்கு மாறாக ஒருவர் தங்க பத்திரங்களில் முதலீடு செய்திருந்தால் அவருக்கு 75%-க்கு மேல் லாபம் கிடைத்திருப்பதை இதன் மூலம் அறிய முடியும்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர் தாம் முதலீடு செய்து இருக்கும் வங்கியையோ, போஸ்ட் ஆபீஸ் கிளையையோ தொடர்புகொண்டு இந்தத் திட்டத்திலிருந்து விலகும் படிவத்தை சமர்ப்பித்தால் அவர் முதலீடு செய்திருக்கும் யூனிட்களின் அளவுக்கு பணம் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பொதுவாக, இந்தப் பணம் ஒன்று முதல் மூன்று நாள்களில் முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

 இது மட்டுமன்றி கூடுதலாக கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டாளர் வட்டி வருமானத்தையும் அடைந்திருப்பார். அது அவருக்கு கூடுதல் போனஸ் ஆகும்.

கோல்டு பாண்ட்
கோல்டு பாண்ட்

மேலும், இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் என்பதால் தற்போது ஐந்து ஆண்டுகளில் அந்தப் பணத்தை திரும்பப் பெற்றால் அந்த முதலீட்டுக்கான லாபத்துக்கு கேப்பிடல் கெய்ன்ஸ் வரி செலுத்த வேண்டி இருக்கும். அதற்குப் பதிலாக இந்தப் பணத்தை இந்தத் திட்டத்தின் முதிர்வு காலமான எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பெற்றுக்கொண்டால் கிடைக்கும் லாபத்துக்கு எந்த வரியும் விதிக்கப்படாது. அதனால் அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டால் மட்டும் இந்தத் திட்டத் திலிருந்து விலகிக்கொள்ளலாம். அவ்வாறு பணத்தேவை இல்லாதபட்சத்தில் தொடர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீட்டை மேற்கொண்டு வருவது கூடுதல் லாபத்தை ஒருவருக்கு பெற்றுத் தரும்.

இந்தத் திட்டத்தில் இவ்வளவு லாபம் கிடைக்கிறதே. நாம் முதலீடு செய்ய தவறி விட்டோமே என்று வருத்தப்படுகிறீர்களா? மத்திய ரிசர்வ் வங்கி நாம் ஏற்கெனவே கூறியதுபடி ஒவ்வோர் ஆண்டும் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. தற்போது சென்ற மாதம் இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணை திட்டம் ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்து வரும் திட்டங்களில் முதலீடு செய்து ஒவ்வொரு வாசகரும் கூடுதல் வருமானத்தைப் பெரும் வாய்ப்பில் தம்மை இணைத்துக் கொள்ளலாம்.