Published:Updated:

சாவரின் கோல்டு பாண்டு திட்டம்; ஜூன் 20-ம் தேதி துவக்கம்..! - முதலீடு செய்வது எப்படி?

சாவரின் கோல்டு பாண்டு
News
சாவரின் கோல்டு பாண்டு

சாவரின் கோல்டு பாண்டு திட்டத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் இந்தியா ஆகிய இடங்களில் விண்ணப்பப் படிவங்கள் பெற்று, அங்கேயே முதலீடு செய்யலாம்.

சாவரின் கோல்டு பாண்டு திட்டம்; ஜூன் 20-ம் தேதி துவக்கம்..! - முதலீடு செய்வது எப்படி?

சாவரின் கோல்டு பாண்டு திட்டத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் இந்தியா ஆகிய இடங்களில் விண்ணப்பப் படிவங்கள் பெற்று, அங்கேயே முதலீடு செய்யலாம்.

Published:Updated:
சாவரின் கோல்டு பாண்டு
News
சாவரின் கோல்டு பாண்டு

சாவரின் கோல்டு பாண்டு

இந்திய அரசு, ரிசர்வ் வங்கியின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் பல கட்ட சீரிஸ்களில் எஸ். ஜி. பி (SGB) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சாவரின் கோல்டு பாண்டுகளை வெளியிடுகிறது. கடந்த 2021 - 22-ம் நிதியாண்டில் தங்க பத்திரங்கள் மூலம் ரூ.12,991 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பு 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான சாவரின் கோல்டு பாண்டு முதல் சீரிஸ் ஆனது ஜூன் 20, 2022 அன்று தொடங்கவுள்ளது.

தங்கம்
தங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜூன் 20-ம் தேதி வரை 5 நாட்கள் இந்த தங்க பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். நடப்பு நிதியாண்டில் இரண்டாவது கட்ட வெளியீடானது ஆகஸ்ட் 22 - 26, 2022 அன்று வெளியிடப்படவுள்ளது. முதல் சீரிஸில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,091-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு முதல் சாவரின் கோல்டு பாண்டு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சாவரின் கோல்டு பாண்டு முதலீட்டுக்கு மக்கள் நல்ல வரவேற்பை வழங்கி வருகின்றனர். இந்த முதலீட்டுத் திட்டத்தில் குறைந்தபட்சமாக ஒரு கிராம் தொடங்கி, அதிகபட்சமாக 4 கிலோ வரை ஒரு நிதி ஆண்டில் தனிநபர் முதலீடு செய்யலாம். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு தனிநபருமே அதிகபட்சமாக ஆண்டொன்றுக்கு 4 கிலோ தங்கத்தின் மதிப்புக்கு முதலீடுகளைச் செய்யலாம். அறக்கட்டளையாக இருக்கும்பட்சத்தில் ஒரு நிதி ஆண்டில் 20 கிலோ வரை முதலீடு செய்யலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலீடு செய்வது எப்படி?

தங்க நகையோ, தங்கக் கட்டிகளோ வாங்கும்போது அதன் மீது செய்கூலி, சேதாரம் போன்றவை உண்டு. இதில் அந்தச் செலவுகள் கிடையாது. மற்ற செலவினங்கள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, பிசிக்கல் தங்கமாக இருக்கும்போது, அதைப் பாதுகாப்பது கடினம். எஸ்.ஜி.பி என்பது பாதுகாப்பு அம்சத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது.’

பேப்பர் கோல்டு
பேப்பர் கோல்டு

வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் இந்தியா லிட் ஆகிய இடங்களில் விண்ணப்பப் படிவங்கள் பெற்று, அங்கேயே முதலீடு செய்யலாம். ரிசர்வ் வங்கியின் இணையதளத்திலும் படிவங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலீடு செய்யப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி வழங்கப்படும். அது ஒவ்வொரு நிதியாண்டிலும், இரண்டு முறை நேரடியாக முதலீட்டாளர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இப்படி அளிக்கப்படும் 2.5% வட்டிக்கு வருமான வரி உண்டு.

கோல்டு பாண்ட்
கோல்டு பாண்ட்

தங்கப் பத்திரங்களின் முதிர்வுக் காலம் எட்டு ஆண்டுகள். முதிர்வின்போது அப்போதைய சந்தை விலைக்கு நிகராக வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். முதிர்வுக் காலத்துக்கு முன்பாகவே பத்திரங்களைப் பணமாக மாற்றிக்கொள்ள வேண்டுமானால், முதலீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஐந்து வருடங்கள் கழித்து திரும்பப் பெறலாம்.

ஆபரணத் தங்கமாக வாங்காமல், முதலீடு என்ற நோக்கில் வாங்க நினைப்பவர்களுக்கு மத்திய அரசாங்கம் வெளியிடும் ‘சாவரின் கோல்டு பாண்ட்’ என்பது மிகச் சரியான முதலீடாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism