Published:Updated:

`வெற்றி வேண்டுமா?' இதை கட்டாயம் செய்ய வேண்டும்.. ஆனந்த் மஹிந்திரா சொன்ன அந்த சீக்ரெட் என்ன தெரியுமா?

anand mahindra

பிரபல எழுத்தாளரும் பேச்சாளருமான லியோ புஸ்காக்லியா கூறிய இந்த வார்த்தைகளை எப்போதுமே நினைவில் கொள்ளுங்கள். `ரிஸ்க் எடுக்காத நபர், எதையும் செய்வது இல்லை, அவரிடம் சொல்லிக்கொள்ளவும் எதுவும் இருப்பதில்லை, ஒன்றுமில்லாத அவர், இறுதியில் இருப்பே இல்லாமல் போய்விடுவார்

Published:Updated:

`வெற்றி வேண்டுமா?' இதை கட்டாயம் செய்ய வேண்டும்.. ஆனந்த் மஹிந்திரா சொன்ன அந்த சீக்ரெட் என்ன தெரியுமா?

பிரபல எழுத்தாளரும் பேச்சாளருமான லியோ புஸ்காக்லியா கூறிய இந்த வார்த்தைகளை எப்போதுமே நினைவில் கொள்ளுங்கள். `ரிஸ்க் எடுக்காத நபர், எதையும் செய்வது இல்லை, அவரிடம் சொல்லிக்கொள்ளவும் எதுவும் இருப்பதில்லை, ஒன்றுமில்லாத அவர், இறுதியில் இருப்பே இல்லாமல் போய்விடுவார்

anand mahindra

இன்றைய இளைஞர்களுக்கு வேறொருவருக்குக் கீழ் வேலை செய்து சம்பாதிக்கும் வாழ்க்கை சுத்தமாகப் பிடிப்பதில்லை. கால் காசு என்றாலும் சொந்தமாகத் தொழில் செய்து சம்பாதித்து சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதுதான் பலரது கனவு.

ஆனால், சொந்தமாகத் தொழில் தொடங்கி சாதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. போட்ட முதலீட்டை எடுப்பதற்குள்ளாகவே டங்குவாரு அறுந்துடும். அந்த அளவுக்கு சவால்களும் சிக்கல்களும் தொழில் செய்பவர்களுக்கு எப்போதும் காத்திருக்கும். ஆனால், அந்தச் சவால்கள், சிக்கல்களை எல்லாம் கடந்து ஜெயிக்க முடியாது என்றில்லை. நிச்சயம் ஜெயிக்க முடியும். இன்று முன்னணி தொழிலதிபர்களாக இருக்கும், ரத்தன் டாடா, அம்பானி என அனைவருமே அதற்கு உதாரணம். அந்த வரிசையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர்.

ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திராவின் சிறப்பு எப்போதுமே இளமை துடிப்புடன் இருப்பது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மிகச் சில தொழிலதிபர்களில் இவரும் ஒருவர். நல்ல விஷயங்கள் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டவும் செய்வார். உதவி தேவைப் படுபவர்கள் எனில், உடனடியாக உதவியும் செய்வார். இதனாலேயே இளம் தலைமுறையினருக்கு இவர் முன்னுதாரணமாக இருந்துவருகிறார்.

சமீபத்தில் இளம் தொழில்முனைவோரான திவ்யா கந்தோத்ரா டாண்டன் என்பவர் ஆனந்த் மஹிந்திராவிடம் வெற்றிகரமாகத் தொழில் செய்வதற்கான அறிவுரைகளைக் கூறுமாறு கேட்டிருக்கிறார். அவர் பதிவில், ``மஹிந்திரா குழுமத்தில் உங்களின் தலைமை பண்பாலும், தொலைநோக்கு பார்வையாலும் நான் ஈர்க்கப்பட்டேன். ஒரு இளம் தொழில்முனைவோராக எனக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரைகளைக் கேட்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து அவர் பதிவிட்டிருக்கிறார். இதற்கு ஆனந்த் மஹிந்திரா உடனே பதில் பதிவிட்டிருக்கிறார்.

ஆனந்த் மஹிந்திரா ட்வீட்
ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட பதிலில் அவர் கூறியதாவது,

``வலி இல்லாமல் எந்த ஆதாயமும் இல்லை. நான் ஜிம்மில் சேர்ந்த ஆரம்பத்தில் என்னுடைய கோச் எனக்கு கூறியது என்னவெனில் வொர்க் அவுட் மூலம் மாற்றத்தைப் பெற வேண்டுமெனில் முதலில் நான் என்னுடைய comfort zone-லிருந்து வெளிவர வேண்டும் என்பதுதான். அந்த வகையில் ஒரு தொழில் முனைவோராக மிக எளிதாகவும், மிக விரைவாகவும் கிடைக்கும் வெற்றியை நீங்கள் இயல்பாகவே சந்தேகத்துடன் பார்க்க வேண்டும். ஏனெனில், அதில் பெரிய வீழ்ச்சி காத்திருக்கலாம். எனவே, எப்போதுமே கடின உழைப்புக்கும், தவிர்க்க முடியாத மாற்றங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும்.

எளிதில் வெற்றி கிடைக்கும்போது, ரிஸ்க் எடுப்பதற்கான ஆசை சட்டென குறைந்துவிடும். எனவே, உங்களின் ஆரம்ப காலகட்டங்கள்தான் ரிஸ்க் எடுப்பதற்கான சிறந்த நேரம். எந்தவொரு ரிஸ்க்கும் எடுக்காதவர் எதையும் சாதிப்பதில்லை.

ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா

பிரபல எழுத்தாளரும் பேச்சாளருமான லியோ புஸ்காக்லியா கூறிய இந்த வார்த்தைகளை எப்போதுமே நினைவில் கொள்ளுங்கள். `ரிஸ்க் எடுக்காத நபர், எதையும் செய்வது இல்லை, அவரிடம் சொல்லிக்கொள்ளவும் எதுவும் இருப்பதில்லை, ஒன்றுமில்லாத அவர், இறுதியில் இருப்பே இல்லாமல் போய்விடுவார்" என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா கூறியிருப்பவை தொழிலுக்கும் மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பொருந்தும். யாருக்கெல்லாம் சாதிக்க வேண்டும் என்ற பசி இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் இது

ஒரு பாடம்.