பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இணைந்த ஹெச்.சி.எல்... பெரிய இலக்குகள்... வெற்றி ரகசியம் சொல்லும் ‘குவி!’

அருண் பிரகாஷ், பாலமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
அருண் பிரகாஷ், பாலமுருகன்

பிசினஸ்

இந்தியாவின் முக்கியமான டெக்னாலஜி நிறுவனமான ஹெச்.சி.எல் டெக், எஜு டெக் பிரிவில் செயல்பட்டு வரும் குவி நிறுவனத்தின் பெரும்பான் மையான பங்குகளை வாங்கி யிருக்கிறது. இதன் மூலம் ஹெச்.சி.எல் டெக்னாலஜியும் வளர்ந்து வரும் எஜுடெக் பிரிவில் கவனம் செலுத்தி யிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்த முதலீடு எதற்காக, முதலீட்டுக்குப் பிறகு, அடுத்த கட்ட திட்டம் என்ன என்பது குறித்து குவி நிறுவனத்தின் நிறுவனர்கள் பாலமுருகன் மற்றும் அருண் பிரகாஷ் ஆகியோரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது...

“டெக்னாலஜியை பிராந் திய மொழிகளில் கற்றுத் தருவதுதான் எங்கள் நிறுவனத்தின் பணி. ஆரம் பத்தில் நேரடியாக வாடிக்கை யாளர்களுக்குக் கொடுக் காமல் நிறுவனங்கள் மூலமாக (B2B) விற்பனை செய்து வந்தோம். அதுவரையில் எங்களுக்கு நிதி தேவை யில்லை. அதன் பிறகு, நேரடி யாக வாடிக்கையாளர் களுக்குச் செல்ல வேண்டும் என முடிவெடுத்த பிறகுதான் நாங்கள் நிதி திரட்ட முடிவெடுத்தோம்.

அருண் பிரகாஷ், பாலமுருகன்
அருண் பிரகாஷ், பாலமுருகன்

ஆரம்பகட்டத்தில் ரூ.1 கோடி நிதி திரட்டினோம். அதைத் தொடர்ந்து கோவிட் சமயத்தில் சுமார் ரூ.6 கோடி நிதி திரட்டினோம். இந்த நிதியை புதிய கோர்ஸ்கள் மற்றும் மார்க்கெட்டிங்க்குக்கு செலவு செய்தோம். எங்களுடைய வருமானமும் கணிசமாக உயர்ந்தது.

கோவிட்டுக்குப் பிறகு, எங்களுடைய வளர்ச்சி நன்றாக இருந்தது. இந்தச் சமயத்தில், எங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினார்கள். அதனால் இந்தியாவைத் தவிர்த்து, மற்ற நாடுகளிலும் கவனம் செலுத்தத் திட்டமிட்டோம்.

அதனால் கடந்த ஜனவரி யில் நிதி திரட்டும் பணியைத் தொடங்கினோம். பல முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னோம். ஆனால், எங்களுக்கும் ஹெச்.சி.எல்-க்கும் இடையே அலைவரிசை ஒன்றாக இருந்தது. தவிர, நாங்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களுடன் ஒன்றாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம் என்பதால், அடுத்தகட்ட பேச்சு வார்த் தைக்கு எளிதாக இருந்தது. கடந்த பிப்ரவரியிலேயே ஹெச்.சி.எல் நிறுவனம் வருவது முடிவாகிவிட்டது” என அருண் தெரிவித்தார்.

அதன் பிறகு ஏன் இவ்வளவு தாமதம், பெரும்பான்மை பங்குகளை ஏன் வாங்க வேண்டும் என்னும் கேள்விக்கு பாலமுருகன் பதில் அளித்தார். “முதலீட் டாளர்களில் இருவகை உண்டு. ஒன்று நிதி சார்ந்த முதலீட்டாளர்கள். இரண்டாவது உத்தி சார்ந்த முதலீட்டாளர்கள். நிதி சார்ந்த முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு முதலீடு செய்கிறோம் எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்பது மட்டுமே இலக்கு.

ஹெச்.சி.எல் உத்தி சார்ந்த முதலீட்டாளர் (Strategic Investor). இணைந்து செயல்பட முடிவெடுத்தனர். அப்படியானால் பெரும்பான்மையான பங்குகள் இருந்தால் மட்டுமே பெரிய வளர்ச்சியை அடைய முடியும். அதனால் பங்கு முதலீட்டாளராக இல்லாமல், பெரும்பான்மையான பங்குகளை வாங்க ஹெச்.சி.எல் முடிவெடுத்தது. இது எங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது. ஹெச்.சி.எல் குழுமத்திடம் கல்வி நிறுவனங்கள் உள்ளன. டெக்னாலஜி நிறுவனமும் உள்ளன. அதனால் புதிய புராடக்ட் உருவாக்கம் அல்லது வேலைவாய்ப்பு எனப் பல வகைகளில் குவி இணைந்து செயல்பட முடியும் என்பதால் இரு தரப்புக்குமே இது சரியான தேர்வாக இருந்ததால் ஒப்புக்கொண்டோம்.

குவியில் சில ஏஞ்சல் முதலீட்டாளர்கள், கிரே மேட்டர்ஸ் கேப்பிடல், சி.பி.ஏ உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்கள் உள்ளன. மேலும், ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் ஐ.ஐ.எம் அகமதாபாத் ஆகிய கல்வி நிறுவனங் களுக்கும் பங்கு இருந்தது. தற்போது அனைத்து முதலீட்டாளர்களும் சராசரியாக ஐந்து மடங்கு லாபத்தில் வெளியேறிவிட்டனர். இது தவிர, நிறுவனத் துக்கு ஹெச்.சி.எல் ரூ.15 கோடியை முதலீடு செய்திருக் கிறது. அடுத்த முறை தேவைப்படும் நிதியை முதலீடு செய்யவும் ஹெச்.சி.எல் ஒப்புக்கொண்டுள்ளது.

இப்போது தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட சில மொழிகளில் கண்டென்ட் உள்ளன. மேலும், அரபி, மலாய் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளையும் இணைக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அது தவிர, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தேவையான மொழி தொடர்பான விஷயங்களிலும் கவனம் செலுத்த இருக்கிறோம். தன்னுடைய பணி யாளர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்பினால், கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கள் மூலமாகப் பயிற்சி வழங்க முடியும். இந்தப் பிரிவில் பெரிய வாய்ப்பு இருக்கிறது. அதற்கான குழுவை உருவாக்கத் திட்ட மிட்டிருக்கிறோம்’’ என பாலமுருகன் கூறினார்.

குவிக்கு வாழ்த்துகள்..!‘‘இப்போது தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட சில மொழிகளில் கண்டென்ட் உள்ளன. அரபி, மலாய் மொழிகளையும் சேர்க்கத் திட்டம்!’’ இணைந்த ஹெச்.சி.எல்... பெரிய இலக்குகள்...

வெற்றி ரகசியம் சொல்லும் ‘குவி!’