Published:Updated:

தமிழக அரசு சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த கருத்தரங்கம்!

தமிழ்நாடு தொழில் முனைவோர் நிறுவனம்
News
தமிழ்நாடு தொழில் முனைவோர் நிறுவனம் ( ETV Bharat )

ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் பயிற்றுவிக்கப்படும். இத்தொழிலுக்கான ஆலோசனைகள், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவை விவாதிக்கப்படும்.

தமிழக அரசு சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த கருத்தரங்கம்!

ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் பயிற்றுவிக்கப்படும். இத்தொழிலுக்கான ஆலோசனைகள், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவை விவாதிக்கப்படும்.

Published:Updated:
தமிழ்நாடு தொழில் முனைவோர் நிறுவனம்
News
தமிழ்நாடு தொழில் முனைவோர் நிறுவனம் ( ETV Bharat )

சென்னையில் தமிழக அரசு சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் அதன் சட்டதிட்டங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

தமிழக அரசு சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த கருத்தரங்கம்!

இந்த கருத்தரங்கு குறித்து தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நேற்று அறிக்கையை வெளியிட்டது.

இந்தியாவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில்களின் வாய்ப்புகள் தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அதுகுறித்து அறிந்து கொள்வது மிக அவசியம் ஆகிறது.

exports
exports

என்ன கருத்தரங்கம்?

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வழிமுறைகள் குறித்தும் அதன் சட்டதிட்டங்கள் குறித்தும் வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை மதியம் 2.30 மணி தொடங்கி மாலை 5.30 மணி வரை இணையவழி கருத்தரங்கம் நடத்த உள்ளது.

கருத்தரங்கில் என்ன கற்பிக்கப்படும்?

ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை கற்பிக்கப்படும். மேலும் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் பயிற்றுவிக்கப்படும். இத்தொழிலுக்கான ஆலோசனைகள், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவை விவாதிக்கப்படும்.

தமிழக அரசு சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த கருத்தரங்கம்!

கருத்தரங்கில் கலந்துகொள்ள தகுதி என்ன?

ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் கலந்து கொள்ளலாம்.

கருத்தரங்கில் கலந்துகொள்வது எப்படி?

இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள ரூ.2000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-32 என்ற முகவரியில் 9444556099, 9677152265, 044-22252081/22252082 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.