நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பிக்பாஸ்கெட்டை வாங்கும் டாடா குழுமம்..! ரிலையன்ஸோடு மோதி ஜெயிக்குமா?

பிக்பாஸ்கெட்
பிரீமியம் ஸ்டோரி
News
பிக்பாஸ்கெட்

T A K E O V E R

கடந்த அக்டோபர் மாதம் முதல் நடந்த பேச்சுவார்த்தைகள் ஒருவழியாக முடிந் திருக்கிறது. பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் 68% பங்குகளை டாடா குழுமம் வாங்க இருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகத் தகவல்.

பிக்பாஸ்கெட்
பிக்பாஸ்கெட்

20 மாதங்களுக்கு முன்பு பில்லியன் டாலர் கிளப்பில் பிக்பாஸ்கெட் இணைந்தது. தற்போதைய மொத்தச் சந்தை மதிப்பு 1.85 பில்லியன் டாலர் (ரூ.13,500 கோடி). இதில் 68% பங்கை ரூ.9,500 கோடிக்கு டாடா குழுமம் கையகப்படுத்த உள்ளது. ரிலையன்ஸ், அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ரீடெய்ல் மற்றும் இ-காமர்ஸ் துறையில் முக்கியப் போட்டியாளராக இருக்கின்றன. இந்த நிலையில், டாடா குழுமமும் இந்தப் போட்டியில் களம் இறங்குகிறது.

2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ்கெட் தற்போது 25-க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் பிரிவில் செயல்பட்டு வந்தாலும், இந்தப் பிரிவில் பெரிய நிறுவனமாக பிக்பாஸ்கெட் திகழ்கிறது. ஒரு நாளைக்கு மூன்று லட்சம் டெலிவரியை இந்த நிறுவனம் செய்கிறது. பிக்பாஸ்கெட் டேக் ஓவர் டாடாவுக்குப் பலன் சேர்க்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.