Published:Updated:

நீண்ட கால மூலதன ஆதாய வரி... - “10% ஒரு நல்ல ஆரம்பமே!”

நீண்ட கால மூலதன ஆதாய வரி... - “10% ஒரு நல்ல ஆரம்பமே!”
பிரீமியம் ஸ்டோரி
நீண்ட கால மூலதன ஆதாய வரி... - “10% ஒரு நல்ல ஆரம்பமே!”

நீண்ட கால மூலதன ஆதாய வரி... - “10% ஒரு நல்ல ஆரம்பமே!”

நீண்ட கால மூலதன ஆதாய வரி... - “10% ஒரு நல்ல ஆரம்பமே!”

நீண்ட கால மூலதன ஆதாய வரி... - “10% ஒரு நல்ல ஆரம்பமே!”

Published:Updated:
நீண்ட கால மூலதன ஆதாய வரி... - “10% ஒரு நல்ல ஆரம்பமே!”
பிரீமியம் ஸ்டோரி
நீண்ட கால மூலதன ஆதாய வரி... - “10% ஒரு நல்ல ஆரம்பமே!”

லகப் பொருளாதாரம் குறித்தும், நம் நாட்டின் பொருளாதாரம் குறித்தும் தெளிவை உருவாக்குவதில் சர்வதேச பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரனுக்கு இருக்கும் பங்கு சிறப்பானது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து சிங்கப்பூரிலிருந்து இ-மெயில் மூலம் அவர் நமக்களித்த பேட்டி இதோ....

நீண்ட கால மூலதன ஆதாய வரி... - “10% ஒரு நல்ல ஆரம்பமே!”

இந்த பட்ஜெட்டில் எந்தத் துறைக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்?

‘‘விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. விவசாய விளைபொருள்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை 50% அளவுக்கு உயர்த்த உறுதி அளித்திருக்கிறார்கள். புதிய வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கவும், மானிய விலையில் சமையல் எரிவாயு அளிக்கும் வகை செய்ததன் மூலமும், பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண பல திட்டங்களை அறிவித்திருக் கிறார்கள். நாடு முழுக்க மிகப் பெரிய அளவில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டுவந்திருக் கிறார்கள்’’. 

ஓட்டு வாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதா?

‘‘விவசாயிகள் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய அளவுக்கு கஷ்டத்தில் இருக்கிறார்கள்.  பருவ நிலை என்பது முன்புபோல தீர்மானிக்க முடியாததாக மாறி யிருக்கிறது.உணவுப் பொருள்களுக்கான விலை குறைந்திருக்கிறது. அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த முடிவுகள்,  வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை  இறக்குமதி செய்ய அனுமதி தருவது போன்ற நடவடிக்கைகள் நிலைமையை மோசமாக்குகிறது. பல கட்டடத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காததால், அவர்கள் மீண்டும் தங்கள் கிராமங்களுக்கே திரும்பியிருக் கிறார்கள். இதனால் கிராமப்புறங் களில் வருமானம் குறைந்திருக்கிறது. எனவே,தேர்தல் வந்தாலும் வராவிட்டாலும், விவசாயிகளையும் கிராமப்புற வளர்ச்சியையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.’’

வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு இந்த பட்ஜெட்டில் பெரிய திட்டம் எதுவும் இல்லையே!


‘‘இந்தக் கூற்று சரியானதல்ல. புதிய ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை மூன்று ஆண்டுகளுக்கு ஏற்றுக் கொள்ளும் திட்டத்தை அரசாங்கம் நீட்டித்திருக்கிறது. பெண்கள் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதிக்கான தொகை முதல் மூன்று ஆண்டுகளுக்குக் குறைக்கப்பட்டிருக்கிறது. வங்கிகளுக்குப் புதிய மூலதனம் அளிக்கப்பட்டிருப்பதால், கடன் தருவது அதிகரித்து பொருளாதாரம் வளர்ச்சி காணத் தொடங்கும். இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.’’

மூலதன சந்தை (Capital market) இந்தியாவில் வளர்ந்துவரும் நிலையில், நீண்ட கால மூலதன ஆதாய வரியைக் கொண்டு வந்திருப்பது சரியா?


‘‘இந்த வரியைக் கொண்டுவருவதற்கு இதைவிட நல்ல சமயம் இனி இருக்க முடியாது. இந்த வரியைச் சீரமைக்க சில விஷயங்களைச் செய்ய வேண்டும். எல்லா சொத்துகள் தொடர்பாகக் குறைந்த காலம் மற்றும் நீண்ட காலம் குறித்த வரையறையைத் தெளிவாக உருவாக்கி, பொதுவான, ஒரே அளவிலான வரியைக் கொண்டு வரவேண்டும். குறுகிய காலம் என்பதை 36 மாதங்களுக்கு மிகாமலும், குறுகிய கால மூலதன ஆதாய வரியை வருமான வரியுடன் சேர்த்தும் நிர்ணயிக்க வேண்டும். பங்குச் சந்தை முதலீட்டுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியை 10 சதவிகிதமாகவும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத பங்குகளில் முதலீடு செய்த முதலீடுகளுக்கு 20 சதவிகிதமாகவும் நிர்ணயம் செய்திருப்பது நல்ல ஆரம்பமே.’’  

இந்த பட்ஜெட் பற்றி உங்கள் விமர்சனம் என்ன?


‘‘வருமானம் குறித்த அனுமானங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. தேசிய மருத்துவக் காப்பீட்டுக்கான செலவுக்கும், விவசாய விளைபொருள் களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான செலவுக்குமான பணத்தை அரசாங்கம் எப்படிப் பெறப் போகிறது என்பதில் தெளி வில்லை. பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு குறைந்து வருவது ஏமாற்றம் அளிக்கிறது. அரசின் கொள்முதல் கொள்கையினால் பணவீக்கம் அதிகமாவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதை ரிசர்வ் வங்கியோ அல்லது கடன் சந்தை முதலீட்டாளர்களோ நிச்சயம் விரும்பமாட்டார்கள். அரசாங்கம் வாங்கும் கடனுக்கான செலவு அதிகரித்தால், பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ள கணக்குகள் தவறாகப் போக வாய்ப்பு ஏற்படும்.

சிறு சேமிப்புத் திட்டங்களினால் அரசாங்கத்துக்கு அதிகம் செலவு ஏற்படுகிறது. சிறு சேமிப்புத் திட்டங்களை மாற்றி அமைப்பதன் மூலம் அரசாங்கம் பெறும் கடனுக்கான செலவு குறையும். இந்தத் திட்டங் களுக்கான வட்டி விகிதத்தை ஒரேயடியாக ஒழித்துக்கட்டாவிட்டாலும், கொஞ்சம் குறைக்கத்தான் வேண்டும். உலக அளவில் பங்குச் சந்தைகள் சரியும்பட்சத்தில், முதலீட்டாளர்களின் சென்டிமென்ட் பாதிப்படைந்து, பொருளாதார வளர்ச்சி குறையும். இதனால் இந்தியாவும் பாதிப்படையும். எனவே, பொருளாதார வளர்ச்சி நம்மை ஏமாற்றிவிட நிறையவே வாய்ப்புள்ளதை உணர்ந்து, வரி வருவாயானது பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளதைவிடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நிதிப் பற்றாக்குறையைப் பொறுத்தவரை, பட்ஜெட்டில் சொன்ன அளவுக்குக் கொண்டுவர வேண்டுமெனில், இந்த அரசாங்கத்துக்கு நிறைய அதிர்ஷ்டம் வேண்டும்.’’ 

- ஏ.ஆர்.குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீண்ட கால மூலதன ஆதாய வரி... - “10% ஒரு நல்ல ஆரம்பமே!”

தொழில் துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் இல்லையே?

‘‘உண்மைதான். ஆனாலும்  தொழில் துறை முழுவதுமாக ஒதுக்கப் பட்டுவிடவில்லை. ரூ.250 கோடிக்கும் குறைவான டேர்ன்ஓவர் கொண்ட தொழில் நிறுவனங்களுக் கான கார்ப்பரேட் வரியைக் குறைத்திருக்கிறது. தவிர, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் இயங்கு மூலதனம் சிறப்பான நிலையில் இருக்கத் தேவையான நடவடிக்கை யையும் எடுத்திருக்கிறது. சிக்கலில் இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சொத்துகள் தொடர்பான பிரச்னையைத் தீர்க்கும்  திட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் உறுதி அளித்திருக்கிறது. ஆனால்,  ஏஞ்சல் ஃபண்டிங் மீதான வரி குறித்த பிரச்னை விரைவில் தீர்க்கப்பட வேண்டும்.’’
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism