முடிவடைந்த 2018-19-ம் நிதியாண்டு வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்வதற்கான படிவத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட் டுள்ளன. வரிதாரர் குறித்துப் பல தகவல்கள் புதிதாகக் கேட்கப்பட்டுள்ளன. எனவே, வழக்கம்போல வருமான வரித் தாக்கல் செய்தவர்களும், இனி செய்ய இருப்பவர்களும் கூடுதல் விவரங்களைத் திரட்டி வருமான வரித் தாக்கல் செய்யவேண்டியிருக்கிறது.

தற்போது வந்திருக்கும் மாற்றங்களின்படி, குறிப்பாக, வெளிநாடுவாழ் இந்தியர்கள் செய்ய வேண்டிய வருமான வரித் தாக்கலில், அவர்கள் இந்தியாவில் எத்தனை நாள்கள் தங்கியிருந்தனர் என்கிற விவரங்களையும், பங்குச் சந்தையில் கிடைத்த வருமானத்துக் கான வரித் தாக்கலைச் செய்பவர்களிடம் பட்டியலிடப்படாத நிறுவனப் பங்குகளில் (Unlisted shares) முதலீடு செய்திருந்தால், அது குறித்த விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.

வருமான வரித் தாக்கல் படிவங்களில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்து சென்னையின் பிரபல ஆடிட்டர் சதீஷ்குமாரிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

``நிதிச்சட்டம் 2018-ன்படி, மத்திய நேரடி வரிகள் ஆணையம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் வருமான வரித் தாக்கல் படிவத்தில் மாற்றங்கள் கொண்டுவருகிறது. அதன்படி, கடந்த நிதியாண்டிற்கான ஐ.டி.ஆர் படிவத்தில் நுட்பமான பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அந்த மாற்றங்களைப் பற்றி இனி பார்ப்போம்.

* வரித் தாக்கல் செய்பவர், மாதச் சம்பளதாரராகவோ அல்லது பென்ஷன்தாரராகவோ அல்லது குடும்ப பென்ஷன்தாரராகவோ இருந்து, அவருக்கு ஒரேயொரு சொந்த வீடு இருந்து அதன்மூலம் வருமானமோ அல்லது இழப்போ இருந்து, அவர் இந்தியாவில் எப்போதும் குடியிருப்பவராக இருந்தால் ஐ.டி.ஆர் 1 படிவத்தில் வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்தியாவில் சாதாரணமாக வசிக்காமலும் வெளிநாடு வாழ் இந்தியராக இருப்பவர், சம்பளம் அல்லது பென்ஷன் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளின் மூலம் வருமானம் அல்லது இழப்பு காட்டுபவர்கள், ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர்கள் அல்லது கடந்த ஆண்டில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பவர்கள் அல்லது முதலீடு/சொத்தின்மூலம் மூலதன ஆதாயம் அல்லது இழப்பு அடைந்தவர்கள், இதர வருமானம் ஈட்டுவோர், டிவிடெண்ட் வருமானம், எதிர்பாராத வருமானம், 5,000 ரூபாய்க்கும் அதிகமான விவசாய வருமானம் பெறுவோர், 50 லட்சம் ரூபாய்க்குமேல் மொத்த வருமானம் ஈட்டுவோர், வெளிநாட்டிலிருந்து வருமானம் ஈட்டுவோர், வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து கிடைக்கும் வட்டி வருமானம், இந்தியாவுக்கு வெளியே உள்ள கணக்கில் கையெழுத்துப் போடும் உரிமை வைத்திருப்போர் அனைவரும், முறையே ஐ.டி.ஆர் 2 அல்லது ஐ.டி.ஆர் 3 படிவத்தில் வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

பிசினஸ் அல்லது தொழில் பணி மூலமாக வருமானம் ஈட்டுவோர், கூட்டு நிறுவனம் மூலம் சம்பளம் அல்லது வட்டி வருமானம் பெறுவோர் ஐ.டி.ஆர் 3 படிவத்தை நிரப்ப வேண்டும். வருமான வரிச் சட்டம் 44AD, 44ADA, 44AE பிரிவுகளின்கீழ், இந்தியாவில் வியாபாரம் அல்லது பணி மூலமாக உத்தேச வருமானம் ஈட்டுவோர் ஐ.டி.ஆர் 4 படிவத்தை நிரப்ப வேண்டும் (எல். எல்.பி நிறுவனங்கள் தவிர).

வருமான வரிச் சட்டம் 44AD, 44ADA, 44AE பிரிவுகளின்கீழ், வெளிநாடுவாழ் இந்தியர்கள் வியாபாரம் அல்லது தொழிற் பணிமூலமாகக் கிடைக்கும் உத்தேச வருமானத்தை ஐ.டி.ஆர் 3 படிவத்தில் நிரப்ப வேண்டும்.
பட்டியலிடப்படாத நிறுவனங் களில் முதலீடு செய்பவர்கள், நிறுவனத்தின் பெயர், நிறுவனத்தின் பான் நம்பர், பங்குகளை வாங்கிய தேதி மற்றும் விலை, முகமதிப்பு, சந்தை மதிப்பைவிடக் குறைவான விலைக்கு வாங்கியிருந்தால், பங்கின் வெளியீட்டு விலை ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.

பங்குகளின் சந்தை மதிப்புக்கும் வெளியீட்டு விலைக்குமான வித்தியாசம் 50,000 ரூபாயைவிட அதிகமானால், முதலீட்டாளர் களுக்கு வரி விதிக்கப்படும். இதுகுறித்த தகவல்களை முறையே ஐ.டி.ஆர் 2, ஐ.டி.ஆர் 3, ஐ.டி.ஆர் 5 படிவங்களில் அளிக்க வேண்டும்.

கம்பெனிகள்(பிரிவு 11-ன் கீழ் விலக்கு தவிர) ஐ.டி.ஆர் 6 படிவத்தில் நிரப்ப வேண்டும். ஐந்து லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் இருப்பவர்களுக்குக் காகித வடிவிலான படிவத்தால் நேரடியாக வரித் தாக்கல் செய்யலாம் என்றிருந்ததை நீக்கிவிட்டார்கள். சூப்பர் சீனியர் சிட்டிசன் மக்களுக்கு மட்டுமே காகித வடிவிலான படிவம் ஏற்றுக்கொள்ளப்படும்.

வருமானத்தில் நிலையான கழிவான 40,000 ரூபாய் வரிவிலக்கிற்கு ஐ.டி.ஆர் படிவத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சீனியர் சிட்டிசன்கள், வங்கி, கூட்டுறவு வங்கி, அஞ்சலக முதலீட்டிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு, வருமான வரிச் சட்டம் 80TTB பிரிவின்படி, 50,000 ரூபாய் வரை வரிச் சலுகை பெறலாம்.

புதிய ஐ.டி.ஆர் படிவத்தில், மொத்த சம்பளத்தைக் குறிப்பிடவேண்டும். இதன்பின் நிலையான பிடித்தம், பொழுதுபோக்கு அலவன்ஸ், பிற சலுகைகளை கழித்துக் காட்டவேண்டும்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஐ.டி.ஆர் படிவத்தில் கூடுதலாக இந்தியாவில் தங்கியிருந்த நாள்கள், இருப்பிடத்துக்கான நீதிமன்ற எல்லை, வருமான வரி அடையாள எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

விவசாய வருமானம் 5 லட்சம் ரூபாயைவிட அதிகரித்தால், நிலம் அமைந்துள்ள பகுதி, நிலத்தின் அளவு, நிலம் சொந்தமா அல்லது குத்தகையா, பாசன வசதியுள்ளதா அல்லது மானாவாரி நிலமா என்பது குறித்த விவரங்களைக் கூடுதலாகத் தர வேண்டும்.

சேமிப்பு மற்றும் வைப்புநிதி மூலம் கிடைக்கும் வட்டி, வருமானவரி ரீஃபண்ட் உள்ளிட்டவற்றுக்குத் தனியாக விவரங்களை அளிக்க வேண்டும். ஜி.எஸ்.டி, டேர்ன்ஓவர் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும். சொத்துகளை விற்பனை செய்யும் போது அதை வாங்கியவர் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன” என்றார் அவர்.

நம் நாட்டில் தொழில்நுட்பம் பெருகப் பெருக புதிய தொழில்கள் பெருகிவருகின்றன. வருமானம் ஈட்டும் வழிமுறைகளில், வியாபாரங்களில், முதலீட்டு முறைகளில் புத்தாக்கச் சிந்தனைகள் பெருகவே செய்கிறது. அதற்கேற்ப வருமான வரி கணக்குத் தாக்கல் படிவங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. இந்த மாற்றங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, வருமான வரித் துறை கேட்கும் விவரங்களை அந்தத் துறைக்கு அளிக்க வேண்டியது நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமை ஆகும். இந்தக் கடமையை நிறைவேற்றத் தவறுபவர்கள் வரித் துறையின் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்!

- தெ.சு.கவுதமன்