நான் ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இப்போது ஓய்வூதியம் பெற்று வருகிறேன். இதில் வாடகைப்படி என எதையும் தனியாகக் குறிப்பிடவில்லை. நான் வாடகைக் கொடுப்பதற்கான ரசீதும் இல்லை. இதற்கு எப்படி வரி விலக்கு பெறுவது?

கணேசன், மதுரை.

லயனல் சார்லஸ், ஆடிட்டர்.

''பென்ஷன் வாங்குபவர்கள் மாதத்துக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு வரி விலக்கு பெற முடியும். இது வருமான வரி 80ஜிஜி பிரிவின்கீழ் வரும். வாடகைப்படிக்கு வருமான வரி விலக்கு பெறுவதற்கு ரசீது கட்டாயம் தேவை. அது இல்லையென்றால், நீங்கள் வீட்டு வாடகையை காசோலை மூலமாகத் தந்திருந்தாலும் வரி விலக்குப் பெறலாம். இது இரண்டும் இல்லாமல் வரி விலக்குப் பெற முடியாது.''

என்.ஹெச்.பி.சி நிறுவனத்தின் 500 பங்குகளை வைத்திருக்கிறேன். இந்தப் பங்குகளை ஐ.பி.ஓ.வில் 36 ரூபாய்க்கு வாங்கினேன். அந்த நிறுவனம் இந்தப் பங்குகளை பைபேக் செய்து வருகிறது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

ஜெயபிரகாசம், அண்ணாநகர்.

வி.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்.

''சந்தை விலைக்கும் பைபேக் விலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால், இப்போது பைபேக்கில் ஆஃபர் செய்வதால் பெரிய பலன் இல்லை. தற்போதைய சந்தை விலையில், பங்கின் மீதான டிவிடெண்ட் யீல்டு கணிசமாக இருக்கிறது. வரி இல்லாத வருவாயாக ஆண்டுக்கு 5 சதவிகிதத்துக்கு மேல் கிடைக்கிறது. 30 சதவிகித வருமான வரிப் பட்டையில் இருப்பவர்களுக்கு 7.50 சதவிகித யீல்டு. மார்ஜின் ஆஃப் சேஃப்டி அடிப்படையில் பார்த்தாலும் பங்கின் விலை இதற்கும் கீழே இறங்குவதற்கான வாய்ப்பில்லை. உடனடியாக பெரிதாக விலை அதிகரிக்கவும் வாய்ப்பு இல்லை. எனினும், நீண்ட கால அடிப்படையில், இப்போதைய விலையில் இருந்து ஓரளவுக்கு நல்ல ஆதாயத்தைக் கொடுக்கக்கூடிய பங்கு. உடனடியாக பணம் தேவைப்படாதவர்கள் இந்த முதலீட்டைத் தொடரலாம்!''

நான் புதிதாக வீடு வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். வீட்டின் மதிப்பு 10 லட்சம் ரூபாய். என்னிடம் தற்போது 5 லட்சம் ரூபாய் உள்ளது. மீதமுள்ள 5 லட்சம் ரூபாய்க்கு தங்க நகை, இன்ஷூரன்ஸ் பத்திரம் ஆகியவற்றை அடமானம் வைக்கலாமா அல்லது வீட்டுக் கடன் வாங்கலாமா?

சுரேஷ், மதுரை.

எஸ். ரவிக்குமார், நிதி ஆலோசகர்.

''வீடு வாங்குவதற்குத் தேவைப்படும் தொகையை நீங்கள் வீட்டுக் கடன் மூலமாக வாங்கிக்கொள்ளலாம். ஏனெனில், இதன் வட்டி விகிதம் என்பது 10-லிருந்து 13 சதவிகிதத்துக்குள் இருக்கும். இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, எல்.ஐ.சி.யில் 10 சதவிகிதமும், தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் 12 சதவிகிதமும் வட்டி கட்டவேண்டும். ஆனால், நகைக் கடனுக்கு நீங்கள் 14 சதவிகிதத்துக்குமேல் தரவேண்டியிருக்கும். வீட்டுக் கடனில் நீங்கள் திரும்பச் செலுத்தும் தொகையில் வட்டியில் வருடத்துக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம். மேலும், வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின்கீழ் நீங்கள் செலுத்தும் அசல் தொகையில் ஒரு லட்சம் ரூபாய் வரையும் வரி விலக்குப் பெறலாம். தங்க நகை, இன்ஷூரன்ஸ் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் கடனை வேறு ஏதாவது அவசரத்தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.''

ரிசர்வ் வங்கி பணவீக்க விகித இண்டெக்ஸ் பாண்டுகளை வெளியிட்டுள்ளது. இதை நான் வாங்கலாமா அல்லது தங்கத்தில் முதலீடு செய்யலாமா? இதில் எது நீண்டகாலத்துக்கு ஏற்றதாக இருக்கும்?

கதிரவன், சென்னை.

ஜெயக்குமார், நிதி ஆலோசகர்.

''இன்ஃப்ளேஷன் இண்டெக்ஸ் பாண்டை பொறுத்தவரை, அது இன்னும் சிறுமுதலீட்டாளர்களுக்குக் கொண்டுவரப்படவில்லை. கடந்த ஜூன் மாதத்தில் வந்த பாண்டுகள் அனைத்தும் கம்பெனிகளுக்கானது. ஏனெனில், அது மொத்த பணவீக்க விகிதத்தை அடிப்படையாகவைத்துக் கொண்டுவரப்பட்டது. வருகிற டிசம்பர் மாதத்தில்தான் நுகர்வோர் பணவீக்க விகிதத்தை அடிப்படையாகவைத்து சிறு முதலீட்டாளர்களுக்காக பாண்டு கொண்டுவரப்பட உள்ளது. இது வந்தபிறகு இதில் முதலீடு செய்யலாம். அதுவரை டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள் மற்றும் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

தங்கத்தைப் பொறுத்தவரை, அதன் வருமானம் என்பது இன்ஃப்ளேஷனைவிட சற்று கூடுதலாக வருமானம் தரும், அவ்வளவுதான். ஆனால், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,800 டாலரில் இருந்து தற்போது 1,300 டாலருக்கு கீழே வந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் தங்கத்தின் விலை பெரிதாக இறங்கவில்லை. காரணம், இந்திய ரூபாயின் மதிப்பானது 45-லிருந்து 63 ரூபாய்க்கு கீழே இறங்கிவிட்டது. இதனால் தங்கத்தின் விலை அப்படியே உள்ளது.

எல்.எம்.எல்., கருத்துரி குளோபல் இந்த இரண்டு பங்குகளுக்கும் ஏதாவது எதிர்காலம் உண்டா? இதில் முதலீடு செய்த தொகை திரும்பக் கிடைக்க வாய்ப்புகள் உள்ளதா?

கே.என். ஜெயராமன், சென்னை.

ஆர். சுபாஷ், நிர்வாக இயக்குநர்,

டி.ராம் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ்.

''எல்.எம்.எல் பங்கின் தற்போதைய விலையானது 5.20 ரூபாய் ஆகும். இந்த நிறுவனம் சமீபத்தில் இரண்டு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தியது. அந்த வாகனம் நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் தரவில்லை. காரணம், இந்தத் துறையில் பல நிறுவனங்கள் முன்னிலை வகித்து வருகின்றன. அதாவது, ஹீரோ மோட்டார், பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மேலும், எம்.என்.சி. நிறுவனங்களான சுசூகி, ஹோண்டா போன்ற போட்டி நிறுவனங்களும் களத்தில் உள்ளன. இப்படி இருக்கும் சூழ்நிலையில் எல்.எம்.எல் நிறுவனத்தின் பங்கு விலை உயருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, முடிந்தவரை இந்தப் பங்கைவிட்டு வெளியேறுவது நல்லது.

அடுத்து, கருத்துரி குளோபல் பங்கின் தற்போதைய விலையும் 1.55 ரூபாயில் உள்ளது. இந்த நிறுவனம் ரோஜாப்பூ மற்றும் அக்ரி கமாடிட்டி பொருட்களைதான் உற்பத்தி செய்துவருகின்றன. இந்த நிறுவனத்தின் உற்பத்தி என்பது எத்தியோப்பியாவை நம்பி உள்ளது. அந்த நாட்டில் அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்துதான் இந்த நிறுவனத்தின் எதிர்காலம் இருக்கும். மேலும், உற்பத்தி செய்யப்படும் பொருளின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் இல்லை என்பதால் வருமானம் எப்படி இருக்கும் என்பதைக் கணக்கிடுவது கடினம். இந்தப் பங்கையும் விற்றுவிட்டு வெளியேறுவது நல்லது.''

என் வயது 30. எனக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. என் குழந்தையின் எதிர்காலத்துக்காக முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். தற்போது என்னிடம் 1.5 லட்சம் ரூபாய் உள்ளது. நல்ல வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டம் எது என்று கூறுங்கள்.

சரவணன், திருச்சி.

ஏ.பி. வாசுதேவன், நிதி ஆலோசகர்.

''குழந்தையின் எந்த தேவைக்காக முதலீடு செய்ய இருக்கிறீர்கள், அதற்கு தேவையான பணம் எவ்வளவு, எத்தனை ஆண்டுகள் கழித்து பணம் தேவை என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. குழந்தையின் உயர்கல்வி மற்றும் திருமணம்தான் உங்களின் தேவையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தத் தேவை உங்கள் மகளின் 18 வயதுக்கு மேல்படிப்புக்கும், 24 வயதில் திருமணத்துக்கும் என வைத்துக்கொள்ளலாம். இதற்கு தற்போது மேல்படிப்புக்கு 5 லட்சம் ரூபாயும், திருமணத்துக்கு 8 லட்சம் ரூபாயும் தேவைப்படும். பணவீக்க விகிதம் 8 சதவிகிதம் என வைத்துக்கொண்டால் எதிர்காலத்தில் படிப்புக்கு 17 லட்சம் ரூபாயும், திருமணத்துக்கு 43 லட்சம் ரூபாயும் தேவைப்படும். இதற்கு நீங்கள் ஹெச்.டி.எஃப்.சி சில்ட்ரன் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் (பங்கு சார்ந்தது), ஐசிஐசிஐ புரூடென்ஷியல் சில்ட்ரன் கேரியர் ப்ளான் ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த இரண்டு ஃபண்டுகளும் கடந்த ஐந்து வருடத்தில் சுமார் 20 சதவிகிதத்துக்குமேல் வருமானம் தந்துள்ளது. மொத்தமாக ஒருமுறை முதலீடாக படிப்புக்காக 1 லட்சம் ரூபாயும், திருமணத்துக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதலீடு செய்யவேண்டும். இந்த முதலீட்டுக்கு 12 சதவிகித வருமானம் கிடைத்தால்கூட படிப்புக்கு சுமார் 6.13 லட்சம் ரூபாயும், திருமணத்துக்கு முதலீட்டு செய்தது சுமார் 6.05 லட்சம் ரூபாயும் கிடைக்கும். ஆனால், இந்தத் தொகை உங்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாது. லார்ஜ் கேப் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி மூலம் சேமிக்கலாம்.''

படங்கள்: எஸ்.பி.ஜெர்ரி ரினால்டுவிமல்

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-2.

nav@vikatan.com.