Published:Updated:

திரும்பப் பெறவேண்டிய ஆவணங்கள்!

வீட்டுக் கடன் ப்ரீ க்ளோஸ்...

திரும்பப் பெறவேண்டிய ஆவணங்கள்!

தனியார் வங்கி ஒன்றில் பத்து வருடங்களுக்கு முன்பு வீட்டுக் கடன் வாங்கியிருந்தேன். அந்தக் கடனை ப்ரீ க்ளோஸ் செய்ய திட்டமிட்டுள்ளேன். இப்படி செய்யும்போது வங்கியிடம் இருந்து என்னென்ன ஆவணங்களை வாங்கவேண்டும்?

திரும்பப் பெறவேண்டிய ஆவணங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

-சுந்தர், செங்கல்பட்டு.

விஸ்வநாத் கிருஷ்ணன், சொத்து ஆலோசகர்.

##~##

''நீங்கள் வீட்டுக் கடன் வாங்கும்போது கடன் வழங்கிய வங்கி, உங்களிடம் ஒரு ரசீதைக் கொடுத்திருக்கும். நீங்கள் என்னென்ன ஆவணங்களை வங்கிக்கு கொடுத்திருக்கிறீர்கள் என்பது அதில் இருக்கும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தும் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். கடனை முன்கூட்டியே திரும்பச் செலுத்தும்போது பாக்கி அசல் தொகை எவ்வளவு, அதற்கான வட்டி எவ்வளவு என்பதை ஸ்டேட்மென்டாக வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. முன்கூட்டியே செலுத்தும் போது, ஏதாவது கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டி உள்ளதா என்பதைக் கவனிப்பது முக்கியம். அப்படி ஏதாவது இருந்தால் ஆர்பிஐ-ன் விதிமுறைகளின்படி வசூலிக்கக் கூடாது என்பதைத் தெரிவித்து அந்தக் கட்டணத்தை ரத்துசெய்ய சொல்லவேண்டும்.

அதேபோல, காசோலை பணம் இல்லாமல் திரும்பியதற்கான அபராதம் ஏதாவது சேர்த்துள்ளார்களா என்பதையும் பார்க்க வேண்டும். அந்த அபராதம் சரி என்று உங்களுக்குப்பட்டால் மட்டும் கொடுக்கலாம். மேலும், ப்ரீ க்ளோஸ் செய்யும்போது அந்தத் தொகைக்கு டி.டி எடுத்துக்கொள்வது நல்லது. அதை வங்கிக்குக் கொடுத்து அதன்பிறகு உங்களுடைய பத்திரத்தின் ஒரிஜினலை வாங்கலாம். இதற்கு சில நாட்கள் ஆகும். அத்துடன் நீங்கள் வாங்கிய வீட்டுக் கடன் கணக்கில் எந்தவிதமான பாக்கி தொகையும் இல்லை என்று சான்றிதழ் வாங்கிக் கொள்வது அவசியம். அதேபோல, வங்கி உங்களிடம் கொடுத்த ஆவணங்கள் என்னென்ன என்பதை எழுதி, அதில் வங்கி அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.''

திரும்பப் பெறவேண்டிய ஆவணங்கள்!
திரும்பப் பெறவேண்டிய ஆவணங்கள்!

நான் வைத்திருக்கும் பங்குகளை என்னுடைய மகனுக்கு பரிசாக தர திட்டமிட்டுள்ளேன். ஆனால் அதை, ஆஃப் மார்க்கெட்டில் எஸ்டிடி செலுத்தாமல் கொடுக்க உள்ளேன். ஒரு வருடம் கழித்து இந்தப் பங்குகளை என் மகன் விற்கும்போது ஏதாவது பிரச்னை வருமா?

திரும்பப் பெறவேண்டிய ஆவணங்கள்!

கண்ணன், தேனி.

எம்.எல். சீனிவாசன், ஆடிட்டர்.

''நீங்கள் வைத்திருக்கும் பங்குகளை உங்கள் மகனுக்கு பரிசாக கொடுக்கும்போது வருமான வரி கட்ட தேவையில்லை. வருமான வரிச் சட்டம் 47 (III) பிரிவின் கீழ் விலக்கு பெற முடியும். மேலும், உங்கள் மகனும் வரிச் செலுத்தத் தேவையில்லை. அன்பளிப்பாக வந்ததால் வருமான வரிச் சட்டம் 56(2) (VII) கீழ் வருகிறது. அந்தப் பங்குகளை ஒரு வருடம் கழித்து உங்கள் மகன் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூலம் விற்கும்போது எஸ்டிடி என்கிற பங்கு பரிவர்த்தனை வரிச் செலுத்தவேண்டும். வருமான வரிச் சட்டம் 10(38) கீழ் நீண்டகால மூலதன ஆதாய வரிவிலக்கு பெறமுடியும்.  

பங்குகளை உங்கள் மகன் ஆஃப் மார்க்கெட்டில் விற்கும்போது நீண்டகால மூலதன ஆதாய வரி 20 சதவிகிதம் அல்லது பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு 10 சதவிகிதம், இதில் எது குறைவோ அதை வரியாகச் செலுத்தவேண்டும். இப்படி பங்குகளை மாற்றும்போது வரிவிலக்கு பெறுவதற்கு நீங்கள் பரிமாற்றம் செய்யும் பங்குகள் அத்தனையும் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பங்கு சந்தைகளில் ஏதாவது ஒன்றில் பட்டியலிடப்பட்டதாக இருக்க வேண்டும்.''

திரும்பப் பெறவேண்டிய ஆவணங்கள்!
திரும்பப் பெறவேண்டிய ஆவணங்கள்!

என்னுடைய தந்தைக்கு சொந்தமான 6 சென்ட் வீட்டை அண்ணன், தம்பி இருவரும் பிரித்துக்கொண்டோம். இந்த நிலத்துடன் சேர்த்து அருகில் இருந்த 3 சென்ட் புறம்போக்கு இடத்தை நானும், என்னுடைய அண்ணனும் சேர்ந்து பிரித்துக்கொண்டோம். அந்த இடத்தில் வீடு கட்டியுள்ளோம். அந்த வீட்டுக்கு மின்சாரக் கட்டணம், வரிச் செலுத்தி வருகிறேன். வீட்டின் பட்டா எங்கள் இருவரின் பெயரில் உள்ளது. இந்த நிலையில், இந்த இடத்தை என்னுடைய அண்ணன் அவருக்குச் சொந்தம் என்கிறார். இதில் கட்டிய வீட்டுக்கும் பணம் தர மறுக்கிறார். இதற்கு நான் வழக்குத் தொடர முடியுமா?

திரும்பப் பெறவேண்டிய ஆவணங்கள்!

க.வெங்கடேசன், சென்னை.

அழகுராமன், வழக்கறிஞர்.  

''உங்கள் தந்தையின் பொதுச்சொத்தை இருவரும் சமமாக பிரித்துக்கொண்டீர்கள். அதன்பிறகு 3 சென்ட் நிலத்துக்கு கூட்டுப்பட்டாவும் வாங்கி வைத்துள்ளீர்கள். இது உங்கள் இருவருக்குமான பொதுச்சொத்து. அதில் வீடு கட்டி அதற்கான வரி, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை நீங்கள் செலுத்தி வந்துள்ளீர்கள். இந்தநிலையில் இந்த சொத்தை உங்கள் அண்ணன் மட்டும் உரிமைகொண்டாட முடியாது.

நீங்கள் வீடு கட்டியதற்கு செலவான தொகைக்கான ஆதாரங்களை வைத்திருந்தால் அவர் மீது நீங்கள் வழக்குத் தொடுக்க முடியும்.''

திரும்பப் பெறவேண்டிய ஆவணங்கள்!

நான் வருடாவருடம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து வருகிறேன். இந்த ஆவணங்களை எத்தனை வருடங்களுக்கு பாதுகாத்து வைக்கவேண்டும்.?

திரும்பப் பெறவேண்டிய ஆவணங்கள்!

கணேசன், மதுரை.

எல்.சார்லஸ், ஆடிட்டர்.

''நடப்பு நிதியாண்டு வருமான வரித் தாக்கல் செய்த விவரத்தை ஆறு வருடம் வரை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். தனிநபர்கள் தாங்கள் வரி விலக்கு பெற்றதற்கான ஆதாரத்தையும் வைத்திருக்க வேண்டும். அதாவது, வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தியதற்கான ஆதாரம், இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு ப்ரீமியம் செலுத்திய விவரம் ஆகியவைகளையும் 6 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.''

திரும்பப் பெறவேண்டிய ஆவணங்கள்!

பங்குச் சந்தையில் மூன்று டீமேட் கணக்குகளின் மூலம் பத்து லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். இந்த மூன்று டீமேட் கணக்கையும் ஒரே கணக்காக மாற்ற முடியுமா?

திரும்பப் பெறவேண்டிய ஆவணங்கள்!

அருண், காஞ்சிபுரம்.

ஏ.ஆர்.வாசுதேவன், மேலாளர், சிடிஎஸ்எல்.

''மூன்று டீமேட் கணக்குகளையும் ஒரே கணக்காக மாற்ற முடியும். அதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் மூன்று டீமேட் கணக்குகளிலும் பெயர், பான் எண், முகவரி ஆகியவை ஒன்றுபோல் இருக்கவேண்டும். ஒரே கணக்காக மாற்றியபிறகு ஆஃப் மார்க்கெட் பரிவர்த்தனை மூலம் உங்களுடைய பங்குகளை ஒரே கணக்கின் கீழ் வரவு வைக்கலாம். இதன்பிறகு மீதமுள்ள இரண்டு கணக்கை ரத்து செய்துவிடுவது அவசியம்.''

திரும்பப் பெறவேண்டிய ஆவணங்கள்!