Published:Updated:

வருமான வரி: மறந்துபோன பாஸ்வேர்டு: திரும்பப் பெற என்ன வழி?

வருமான வரி: மறந்துபோன பாஸ்வேர்டு: திரும்பப் பெற என்ன வழி?

வருமான வரி: மறந்துபோன பாஸ்வேர்டு: திரும்பப் பெற என்ன வழி?

வருமான வரி: மறந்துபோன பாஸ்வேர்டு: திரும்பப் பெற என்ன வழி?

Published:Updated:

கேள்வி-பதில்

?கடந்த வருடம் எனது வருமான வரிக்கான விவரங்களை இ-ஃபைலிங் மூலம் தாக்கல் செய்தேன். இதன் பாஸ்வேர்டை மறந்துவிட்டேன். இதை எப்படிப் பெறுவது?

கண்ணன், சென்னை.பி.ஜெயராகவன், ஐ.ஆர்.எஸ், இணை இயக்குநர், வருமான வரித் துறை, தலைமை அலுவலகம், சென்னை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இ-ஃபைலிங் செய்த பாஸ்வேர்டை பெறுவது மிகவும் எளிது. அதாவது, validate@incometaxindia.gov.in என்ற மெயில் ஐடி-க்கு உங்களின் பான் எண், பெயர் ஆகியவற்றைக் கொடுத்து பாஸ்வேர்டை பெறலாம். அல்லது

incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தின் வழியாக மூன்று வழிகளில் பாஸ்வேர்டை பெறமுடியும். அதாவது, ரகசிய கேள்விக்குப் பதிலளித்துப் பெறுவது, உங்களின் டிஜிட்டல் கையெழுத்தைக் கொடுத்துப் பெறுவது, இ-ஃபைலிங் செய்யும்போது கிடைத்த ஒப்புகை எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்து பெறுவது என்பது அந்த வழிகள். இதைப் பெறுவதற்கான விவரங்கள் உங்களிடம் இல்லையெனில், நேரடியாக டெல்லியிலுள்ள வருமான வரி கணினிப் பிரிவுக்குக் கடிதம் எழுதி அதன் மூலமாகவும் பாஸ்வேர்டை பெற முடியும்.

The Director of Income Tax (Systems)-III,
Directorate of Income Tax,
ARA Centre, Ground Floor,
E-2, Jhandewalan Extension,
New Delhi – 110055.''

வருமான வரி:  மறந்துபோன பாஸ்வேர்டு: திரும்பப் பெற என்ன வழி?

? திருமணத்துக்கு முன்பே என் மனைவி 1999-ம் வருடம் எல்.ஐ.சி-ல் மணிபேக் பாலிசி ஒன்றை எடுத்திருந்தார். அந்த பாலிசி தற்போது முதிர்வடைந்துவிட்டது. முதிர்வு தொகைக்காக எல்ஐசியிடமிருந்து வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டிருந்தனர். அந்த வங்கிக் கணக்கில் என் மனைவி, என் பெயரையும் சேர்த்துத் தந்திருந்தார். இப்படி பெயர் மாற்றம் செய்திருப்பதை அரசுப் பதிவேட்டில் பதிவு செய்து, அந்த ஆதாரத்தைத் தந்தால்தான் முதிர்வு தொகை கிடைக்கும் என்கிறார்கள். இது உண்மையா?

பலராமன், வேலூர்.
எஸ்.அழகிரிசாமி, முதன்மை மேலாளர், எல்.ஐ.சி, சென்னை மயிலாப்பூர் கிளை.

''பெயர் மாற்றம் செய்து அரசு பதிவேட்டில் வெளியிட்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அதேநேரத்தில், உங்கள் பெயர் மாற்றியிருப்பதற்கான ஆதாரத்தைக் கொடுக்கவேண்டும். இது முடியவில்லை எனில், எல்.ஐ.சி. உங்கள் பாலிசி முதிர்வு தொகையை வரைவுக் காசோலையாக உங்களின் பழைய பெயருக்கே கொடுக்கும். மேலும், ஏற்கெனவே உங்களிடம் வாங்கி வைத்திருக்கும் மாதிரி கையெழுத்தும், இப்போது நீங்கள் போடும் கையெழுத்தும் ஒரேமாதிரி இருக்கவேண்டும்.''

வருமான வரி:  மறந்துபோன பாஸ்வேர்டு: திரும்பப் பெற என்ன வழி?

?எனது தந்தை வழி சொத்தை விற்பனை செய்ததன் மூலமாக 30 லட்சம் ரூபாய் கிடைத்தது. இந்தத் தொகையை வைத்து என் மகனின் பெயரில் வீடு அல்லது நிலம் வாங்கினால், அந்தத் தொகைக்கு வரிச் சலுகை பெற முடியுமா? எனக்கு ஏற்கெனவே ஒரு வீடு உள்ளது.

 எஸ்.எஃப். சுந்தரராஜ், திருச்சி.வி.பி.மணவாளன், ஆடிட்டர், மணவாளன் அண்டு கோ.

''தந்தை வழி சொத்தை விற்பனை செய்ததன் மூலமாகக் கிடைத்த தொகையில் உங்கள் பெயரில் வீடு அல்லது நிலம் வாங்கினால் மூலதன ஆதாய வரி செலுத்த தேவையில்லை. ஆனால், உங்கள் மகனின் பெயரில் வீடு அல்லது நிலம் வாங்கினால், இண்டக்சேஷனுக்குப் பிறகு நீண்டகால மூலதன ஆதாய வரி 20%  செலுத்தவேண்டும். இண்டக்சேஷனுக்கு முன் என்றால், 10 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்.''

?எனது 7 வயது மகனின் கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்காக ஹெச்.டி.எஃப்.சி ஸ்டாண்டர்டு சிம்பிள் லைஃப் குரோத் ஃபண்டில் 20 ஆயிரம் ரூபாயும், பிஎன்பி மெட்லைஃப் மெட் ஈஸி ஃபண்டில் 12 ஆயிரம் ரூபாயும் வருடத்துக்கு முதலீடு செய்துவருகிறேன். கடந்த ஐந்து வருடமாகத் தொடர்ந்து முதலீடு செய்கிறேன். இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தவும்.

 கே.ராஜா, சென்னை. வி.டி.அரசு, வைஷ்ணவி ஃபைனான்ஷியல் கன்சல்டன்ட்.

''நீங்கள் முதலீடு செய்துள்ள இந்த இரண்டுமே யூனிட் லிங்க்டு பாலிசி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த பாலிசிகளில் கட்டணம் என்பது அதிகமாக இருக்கும். எனவே, சரண்டர் செய்வதுதான் புத்திசாலித்தனம். நீங்கள் முதலீடு செய்துள்ள ஹெச்.டி.எஃப்.சி ஸ்டாண்டர்டு சிம்பிள் லைஃப் குரோத் ஃபண்டின் குறைந்தபட்ச முதலீட்டு காலமே 5 ஆண்டுகள்தான். இதை முடித்துவிட்டீர்கள். இனிமேல் முதலீடு செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

இதேபோல, மெட்லைஃப் மெட் ஈஸி ஃபண்டின் குறைந்தபட்ச முதலீட்டுக் காலத்தைத் தெரிந்துகொண்டு அந்தக் காலம் வரை முதலீடு செய்யுங்கள். அதன்பிறகு அதை நிறுத்திவிடுவது நல்லது. பங்குச் சந்தை ஏறும் சமயத்தில் பாலிசியை சரண்டர் செய்துவிடுங்கள். அதேநேரத்தில், 25 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள். ஏற்கெனவே யூலிப் பாலிசிக்குக் கட்டிய பிரீமியத்தில் டேர்ம் பாலிசிக்கு கட்டியதுபோக மிச்சம் உள்ள தொகையைவைத்து மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டை தொடங்கலாம். ஃப்ராங்க்ளின் புளூசிப் ஃபண்டு, ஐ.சி.ஐ.சி.ஐ. பேலன்ஸ்டு ஃபண்டு ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.''  

?தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். வயது 30. அடுத்த ஐந்து வருடத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்குவதற்காகச் சேமிக்க நினைக்கிறேன். இதற்காக மாதம் பத்தாயிரம் ரூபாய் என்னால் சேமிக்க முடியும். எனது தேவையை நிறைவேற்றும் வகையில் முதலீட்டுத் திட்டத்தைக் கூறவும்.  

லஷ்மணன், திருநெல்வேலி.ரவிக்குமார், இயக்குநர், எம்.எஸ்.ஆர். கன்சல்டன்ட்

'' முதலீடு செய்வதற்கு முன் உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை என்றால், நீங்கள் ஆர்.டி.யில் முதலீடு செய்யலாம். இதில் மாதம் 10 ஆயிரம் ரூபாயை ஐந்து வருடத்துக்கு முதலீடு செய்தால் 7.5 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆர்.டி.யில் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தால் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளைத் தேர்வு செய்யலாம். இதில் டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஃபோகஸ்டு புளூசிப் ஃபண்டு, ஹெச்.டி.எஃப்.சி டாப் 200, பிர்லா சன் லைஃப் ஃபிரன்ட் லைன் ஈக்விட்டி ஃபண்டு போன்றவற்றில் முதலீடு செய்யலாம். மேலும், ரிஸ்க்கை தவிர்க்கும்விதமாக டாடா பேலன்ஸ்டு ஃபண்டு, ஹெச்.டி.எஃப்.சி புரூடென்ஸ் ஃபண்டுகளில்  முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டு ஒவ்வொன்றிலும் தலா இரண்டாயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம்.''

வருமான வரி:  மறந்துபோன பாஸ்வேர்டு: திரும்பப் பெற என்ன வழி?

?சென்னை வண்டலூரில் 2008-ம் ஆண்டு காலி மனை வாங்கினேன். அது பஞ்சாயத்து அப்ரூவல் மனை. இந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் தர மறுக்கிறார்கள். பஞ்சாயத்து அப்ரூவல் மனைக்கு வீட்டுக் கடன் கிடைக்காதா?  

செந்தமிழ்ச்செல்வன், சென்னை. டி.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்.

''சென்னை வண்டலூர் பகுதி சி.எம்.டி.ஏ.வில்தான் வருகிறது. எனவே, உங்களின் காலிமனையில் வீடு கட்டுவதற்கான வரைபடம் வரைந்து உரிய ஆவணங்களுடன் காட்டாங்கொளத்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அனுமதிக் கேட்டு விண்ணப்பிக்கலாம். இங்குள்ள சி.எம்.டி.ஏ அதிகாரிகள் உங்களின் மனையை நேரில்வந்து பார்ப்பார்கள். அதன்பிறகு உரிய கட்டணத்தைச் செலுத்தினால் அனுமதி கிடைக்கும். மேலும், பஞ்சாயத்து அப்ரூவல் மனை என்பதால் திறந்தவெளி முன்பதிவு (Open Space Reservation )கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இது அரசு வழிகாட்டி மதிப்பில் 10 சதவிகிதமாக இருக்கும். இதன்படி அப்ரூவல் பெற்றால் வங்கிக் கடன் எளிதாகக் கிடைக்கும். வீட்டுக் கடன் உங்களின் வருமானம், திரும்பச் செலுத்தும் திறன் ஆகியவற்றைப் பொறுத்துதான் கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism