Published:Updated:

மறைமுக வரி: உங்கள் வருமானத்தில் எவ்வளவு?

ச.ஸ்ரீராம் படங்கள்: ஜெ.வேங்கடராஜ், மாடல்: சாய்பிரபு.

பிரீமியம் ஸ்டோரி

உங்கள் வருமானத்துக்கேற்ப ஆண்டுகொருமுறை நீங்கள் வரி செலுத்திக்கொண்டு இருப்பீர்கள். இது நேரடி வரி என்பதால், நீங்கள் எவ்வளவு வரி கட்டுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெளிவாகவே தெரியும்.

ஆனால், நேரடி வரியைப் போல, மறைமுக வரி என்கிற வரியையும் நாம் தினம் தினமும் கட்டி வருகிறோம். இந்த வரியை எவ்வளவு கட்டுகிறோம் என்பது நமக்கே தெரியாது.

காரணம், காலையில் நாம் பல்துலக்க உபயோகிக்கும் பேஸ்ட் தொடங்கி இரவு ஹோட்டலில் சாப்பிடும் உணவு வரை எல்லாவற்றுக்குமே நாம் இந்த வரி செலுத்துகிறோம். ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் நாம்  எவ்வளவு வரி செலுத்துகிறோம், அது வருமானத்தில் எவ்வளவு தொகையை ஆக்கிரமிக்கிறது என்பது குறித்து பி.எஸ்.ஆர். ஏ.என்.டி. கம்பெனியின் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் ஆர்.வெங்கடேசன் விரிவாகக் கூறினார்.

''வரி என்பது பொதுவாக இரண்டு வகைப்படும். ஒன்று, நேரடி வரி. இதில் நாம் ஆண்டு முழுவதும் எவ்வளவு சம்பாதிக்கிறோமோ, அதில் வரி வரம்புக்குமேல் உள்ள வருமானத்துக்குச் செலுத்தும் வரியாகும். அதாவது, நாம் சம்பாதிக்கும் தொகையில் வரிவிலக்குக்கான காரணிகளான இன்ஷூரன்ஸ் பிரீமியம், வீட்டுக் கடன் அசல், வட்டி மற்றும் சில குறிப்பிட்ட முதலீடுகள் போன்றவை போக மீதமுள்ள தொகைக்கு அரசு நிர்ணயித்துள்ள வரியை நாம் செலுத்துவது.

மறைமுக வரி: உங்கள் வருமானத்தில் எவ்வளவு?

இது நேரடி வரி என்பதால், ஒவ்வொருவரும் இந்த வரியை எவ்வளவுக்குக் கட்டுகிறார்கள் என்பது தெளிவாகவே தெரியும்.  

ஆனால், மறைமுக வரி என்று ஒரு வரியும் இருக்கிறது. அரசு நிர்ணயித்துள்ள  வருமான வரி வரம்புக்குள் நாம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம்மிடமிருந்து மறைமுகமாக வசூலிக்கப்படும் வரிதான் இது. நாம் வாங்கும் பொருட்கள், ஹோட்டலில் சாப்பிடும் உணவு என்று தொடங்கி அன்றாடம் வாங்கும் அனைத்து பொருட் களுக்கும் இந்த மறைமுக வரி இருக்கிறது.

ஒருவர் மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்கிறார் என வைத்துக்கொண்டால், அதற்கு வரி என்ற பெயரில் மட்டும்  எவ்வளவு செலவு செய்கிறார் என்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ஒருவர் மாதம் 30,000 ரூபாய் சம்பாதிப்பவராக இருந்தால், அவரது ஆண்டு வருமானம் 3,60,000 ரூபாயாக இருக்கும். அதில் அவரது வீட்டு வாடகை, பயணப்படி, மற்ற முதலீடுகளுக்கான 80சி விதிப்படி வரிவிலக்கு ஆகியவை சராசரியாகக் கழிக்கப்பட்டால், அவரது ஆண்டு வருமானம் 2,60,400-ஆக இருக்கும். இதில் 2 லட்சம் ரூபாய்க்கு வரிச் சலுகை இருப்பதால், மீதமுள்ள தொகைக்கு அவர் 10% வரி செலுத்தவேண்டியிருக்கும். அதாவது, 6,040 ரூபாய் வருமான வரியாக அவர் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால்,  அதிக தொகைக்கு இன்ஷூரன்ஸ்  எடுத்திருந்தாலோ அல்லது குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் அதிகமாகக் கட்டி இருந்தாலோ வரியாகக் கட்டும்  தொகை மாறுபடும்.

மறைமுக வரி: உங்கள் வருமானத்தில் எவ்வளவு?

அடுத்து, மறைமுக வரி அல்லது நேரடி அல்லாத வரியைப் பார்ப்போம். இதில் பல வரிகள் அடங்கும். குறிப்பாக, சுங்க வரி, இறக்குமதி வரி, சேவை வரி, வாட் ஆகிய வரிகள் நாம் வாங்கும் பொருட்களுக்கும், சேவைகளுக்கும் விதிக்கப் பட்டு, அவை அந்த பொருள் / சேவையின் விலையில் சேர்க்கப்பட்டு, நம்மிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இந்த வரியை யாராலும் கட்டாமல் தவிர்க்க முடியாது.

உற்பத்தி செய்து விற்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு கலால் வரி விதிக்கப்படும். உதாரணமாக, நாம் வாங்கும் செல்போன், ஆட்டோமொபைல் தயாரிப்புகள் போன்றவற்றுக்கு கலால் வரி விதிக்கப்படும். இது பொதுவாக, 12.36 சதவிகிதமாக இருக்கும். ஆனால், இது தயாரிப்புகளைப்

மறைமுக வரி: உங்கள் வருமானத்தில் எவ்வளவு?

பொறுத்து 2% முதல் 12.36% வரை விதிக்கப்படும்.

இறக்குமதி வரியைப் பொறுத்த மட்டில், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு நம் நாட்டில் விற்கப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும். நாம் வாங்கும் செல்போன், லேப்டாப் போன்றவை

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் அதற்கும் இந்த வரி விதிக்கப்படும்.

மறைமுக சேவையில் பிரதான இடத்தைப் பிடிப்பது சேவை வரி. இதில்தான் நாம் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுவது, தொலைபேசிக்கான கட்டணம் போன்றவை அடங்கும். இந்த வரி நமக்கு 12.36% என்கிற அளவில் விதிக்கப்படுகிறது. நாம் அந்தப் பொருளையோ அல்லது சேவையையோ பெறும்போது இந்த வரி நமக்கு விதிக்கப்பட்டுவிடுகிறது.

வாட் என்பது மாநில அரசால் விதிக்கப்படும் வரியாகும். இது பொருட்களைப் பொறுத்து

1 சதவிகிதத்தில் தொடங்கி 14.5 சதவிகிதம் வரை விதிக்கப்படுகிறது. இந்த வாட் வரி நாம் வாங்கும் பொருட்களுக்கு மாநில அரசால் நேரடியாகவே விதிக்கப்படுகிறது. பொருட்களின் விலை வாட் வரி சேர்த்தே மக்களை வந்தடைகிறது.

நேரடி வரியைக் கணக்கிடுகிற மாதிரி, மறைமுக வரியைத் துல்லியமாக கணக்கிட முடியும். ஆனால், ஒருவர் வாங்கும் பொருட்கள் / சேவையைப் பொறுத்து, அவர் கட்டும் மறைமுக வரியின் அளவு மாறும். சராசரியாக 30,000 சம்பளம் வாங்கும் ஒருவர் ஆண்டுக்கு எவ்வளவு பணத்தை வரியாகச் செலவழிக்கிறார் என்பதைக் கீழ்க்கண்ட உதாரணம் மூலம் பார்ப்போம்:

நேரடி வரி:

ஆண்டு வருமானம்: ரூ.3,60,000

வரிவிலக்கு:

மறைமுக வரி: உங்கள் வருமானத்தில் எவ்வளவு?

1. வீட்டு வாடகைபடி: ரூ.50,000  
2. 80சி விதிப்படி  :   ரூ.40,000
3. பயணப்படி        : ரூ.9,600
மொத்த வரிவிலக்கு  : ரூ.99,600
வருமானம்         : ரூ.2,60,400
வருமான வரி (10%)  : ரூ.6,040
மறைமுக வரி:
கலால் வரி + வாட்: ரூ.2,100
(செல்போன் விலை ரூ.7,000)
சேவை வரி
தொலைபேசிக் கட்டணம்: ரூ.445 (மாதம் 300 பிரீபெய்டு என்ற அளவில்)
ஏர்கண்டிஷன் உணவகங்கள்: ரூ.593 (வருடத்துக்கு 12,000 என்ற அளவில்)
நேரடி வரி :    ரூ.6,040
மறைமுக வரி     : ரூ.3,138
 __________
மொத்தம்:              ரூ.9,178
__________

மேற்சொன்ன இந்தக் கணக்கு ஒரு சிறு உதாரணமே.

ஆக, மாதம் 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒருவர் ஓர் ஆண்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வரி என்ற பெயரில் மாத வருமானத்தில் 33% செலவிடுகிறார்.''

அடேங்கப்பா, கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவு பணம் நம் கைவிட்டுப் போகிறது பார்த்தீர்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு