நடப்பு
புத்தக விமர்சனம்
Published:Updated:

நடுத்தர மக்களை மகிழ்வித்த வருமான வரிச் சலுகைகள்..!

சி.சரவணன்

நடுத்தர மக்களை மகிழ்வித்த வருமான வரிச் சலுகைகள்..!

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்த 2014-15ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு அதிக வருமான வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. பட்ஜெட்டில் தனிநபர்களுக்கு என்னென்ன வருமான வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன என்பதை சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் பெ.பாபு விளக்கிச் சொன்னார்.

''வருமான வரி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அதேநேரத்தில், 60 வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கான அடிப்படை வருமான வரி உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான வரி வரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களுக்கான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை.

அடிப்படை வரம்பு அதிகரிக்கப் பட்ட வகையில் ரூ.5,000 வரை வரி மிச்சமாகும். கடந்த ஆண்டு (2013-14) வரை 5 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு, வரித் தள்ளுபடி ரூ.2.000 அளிக்கப்பட்டது. அது இந்த ஆண்டும் தொடர்கிறது.

நடுத்தர மக்களை மகிழ்வித்த வருமான வரிச் சலுகைகள்..!

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.1 லட்சம் ரூபாயாக இருந்த, வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் முதலீடு மற்றும் செலவுக்கான வரி விலக்கு வரம்பு, ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டி ருக்கிறது.

இது நடுத்தர மக்களுக்கு வருமான வரியை கணிசமாகச் சேமிக்க உதவும். அதாவது, பிஎஃப், பிபிஎஃப், லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், இஎல்எஸ்எஸ் ஃபண்ட் முதலீடு உள்ளிட்டவைகளில் அதிக முதலீட்டை செய்வது மூலம் வரிச் சேமிப்பை அதிகரிக்க முடியும்.

தற்போது பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்டில் (பிபிஎஃப்) ஓராண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின் கீழ் விதிமுறைக்கு உட்பட்டு, நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரையில் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த உச்சவரம்பு ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

பிபிஎஃப்-ல் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமானப் பெருக்கம், முதிர்வுத் தொகைக்கு வரி கிடையாது. ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாயை பிபிஎஃப்-ல் ஒருவர் போட்டுவந்தால், 20 ஆண்டுகள் கழித்து சுமார் 80 லட்சம் கிடைக்கும். இந்தத் தொகைக்கு வரி எதுவும் கிடையாது என்பது மிகவும் லாபகரமான விஷயம். வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் வட்டிக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது'' என்றவர், மத்திய பட்ஜெட்டில் சம்பளக்காரர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மொத்தச் சலுகை என்ன என்பதையும் குறிப்பிட்டார்.

நடுத்தர மக்களை மகிழ்வித்த வருமான வரிச் சலுகைகள்..!

''அடிப்படை வருமான வரி வரம்பில் ரூ.50,000 உயர்வு, வீட்டுக் கடன் வட்டியில் வரிச் சலுகை ரூ.50,000, பிபிஎஃப் முதலீட்டு வரம்பில் ரூ.50,000 உயர்வு என ஆக மொத்தம் 1.5 லட்சம் ரூபாய் இந்த பட்ஜெட்டில் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் ஒருவர் இந்த மூன்று சலுகைகளையும் பயன்படுத்தும்பட்சத்தில் ரூ.5,000 முதல் அதிகபட்சம் ரூ.35,000 வருமான வரியை மிச்சப்படுத்த முடியும்.

எதிர்பார்த்த அளவுக்கு வருமான வரியில் அதிகச் சலுகைகள் கிடைக்கவில்லை என்றாலும் முடிந்தவரை சில சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

நடுத்தர மக்களை மகிழ்வித்த வருமான வரிச் சலுகைகள்..!

ஆரம்பம் அருமை என்று சொல்லலாம். அடுத்துவரும் ஆண்டுகளில் அரசின் வருவாய் பெருகும்போது தனிநபர்களுக்குக் கூடுதல் சலுகைகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்'' என்றார்.

பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

படம்: ச.இரா.ஸ்ரீதர்.

''மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு சாதகம்தான்!''  

ஏ.பாலசுப்பிரமணியன், சிஇஓ, பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்

நடுத்தர மக்களை மகிழ்வித்த வருமான வரிச் சலுகைகள்..!

''பட்ஜெட்டில் அனைத்து முதலீடு களுக்கும் ஒரே டீமேட் கணக்கு மற்றும் கேஒய்சி கொண்டு வரப்படும் என நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். ஒரே டீமேட்டில் அனைத்து  முதலீட்டு விவரங்களைக் கொண்டுவருவதால் ஒருவரின் முதலீடு எதிலெல்லாம் இருக்கிறது என்பதை எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

80சி பிரிவில் முதலீட்டு வரம்பு ரூ.50,000 அதிகரிக்கப் பட்டிருப்பதன் மூலம் இஎல்எஸ்எஸ் ஃபண்டில் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடன் ஃபண்டுகளுக்கான நீண்ட கால மூலதன ஆதாயம் கணக்கீட்டுக்கான காலம் 12 மாதத்திலிருந்து 36 மாதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நீண்ட கால மூலதன ஆதாய வரி, பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% என்று கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது நீண்ட காலத்தில் லாபகரமானதாக இருக்கும்.''

 புதிய இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் வரும்..!

நடுத்தர மக்களை மகிழ்வித்த வருமான வரிச் சலுகைகள்..!

இன்ஷூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு தற்போது 26%ஆக இருப்பதை 49%ஆக உயர்த்தி இருக்கிறார் நிதி அமைச்சர். இதன்மூலம் இந்தியாவுக்கு 300 கோடி டாலர் (ரூ.1,80,000 கோடி) வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி கோட்டக் மஹிந்திரா ஓல்டு மியூச்சுவல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை ஆக்சுவரியாக இருக்கும் சுனில் சர்மாவிடம் கேட்டோம்.

''இந்தியாவை எடுத்துக்கொண்டால், ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டுத் துறையில் குறைந்தது 100 நிறுவனங்களாவது இருக்க வேண்டும். அந்தவகையில் எஃப்டிஐ வரம்பு அதிகரிப்பால் இன்னும் 25 முதல் 30 புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம் நாட்டில் இன்ஷூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். மைக்ரோ இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு சேவை வரி நீக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் கிராமப்புற ஏழைகள் மிகவும் லாபமடைவார்கள்.''