நடப்பு
Published:Updated:

ஐ.டி ரிட்டர்ன்... கெடு தேதி தவறினால்.. என்னென்ன பாதிப்புகள்?

சி.சரவணன்

மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31. இந்த தேதியை பல்வேறு காரணங் களுக்காகப் பலரும் தவறவிட்டிருப் பார்கள். அவர்கள் இனி வரிக் கணக்குத் தாக்கலை எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள், 2015 மார்ச் வரை வரிக் கணக்குத் தாக்கல் செய்யலாம். அபராதம் எதுவும் கிடை யாது. இதை ஆங்கிலத்தில் காலதாமதமாக ரிட்டர்ன் தாக்கல் (Belated Return) செய்வது என்பார்கள்.

 பாதிப்புகள் என்னென்ன?

வருமான வரி எதுவும் கட்ட வேண்டும் எனில், மாதத்துக்கு 1% வட்டி கணக்கிட்டு கட்ட வேண்டும்.

ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனில், ரீஃபண்ட் கிடைக்க வேண்டி இருந்தால் தாமதம் ஏற்படும்.

ஐ.டி ரிட்டர்ன்...  கெடு தேதி தவறினால்..  என்னென்ன பாதிப்புகள்?

மூலதன ஆதாய இழப்பு மற்றும் வணிக இழப்பு ஏதும் இருந்தால், அதனை அடுத்துவரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்படும்.

உங்கள் வரிக் கணக்கில் ஏதாவது தவறு இருந்தால், அதனை சரிசெய்து மீண்டும் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியாது.

வெளிநாட்டுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கும்பட்சத்தில், வீட்டுக் கடன் / கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், கடந்த மூன்றாண்டுகளின் வருமான வரிக் கணக்குத் தாக்கல் விவரத்தைக் கேட்பார்கள். எனவே, சரியான நேரத்தில் வரிக் கணக்குத் தாக்கல் செய்திருப்பது அவசியம்.

ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் வரிக் கணக்கு விவரங் களைத் தாக்கல் செய்ய வேண்டும். காரணம், இதில் ஏதாவது தவறு இருந்தால் சரிசெய்துகொள்ள வாய்ப்புக் கிடையாது.

எனவே, படிவம் 16-ல் உள்ள விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், வரிச் சலுகைக்கான முதலீடு மற்றும் செலவு விவரங்களை மிகச் சரியாக ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவும்.

ஐ.டி ரிட்டர்ன்...  கெடு தேதி தவறினால்..  என்னென்ன பாதிப்புகள்?

 அபராதம் எவ்வளவு?

கெடு தேதி, சலுகை தேதி கடந்தும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனில் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கே.ஆர்.சத்தியநாராயணனிடம் கேட்டோம்.

“2015 மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு, 2016 மார்ச் 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்பட்சத்தில் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படலாம். இது சம்பந்தப்பட்ட வருமான வரி அதிகாரியைப் பொறுத்து இருக்கிறது. தாமதத்துக்குச் சரியான காரணம் இருந்தால் மட்டுமே அபராதம் தவிர்க்கப்படலாம்.

இந்த அபராத காலத்தையும் தாண்டி வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனில், வருமான வரித் துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று, வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.  இந்த சிறப்பு அனுமதி கிடைக்கும் என்பதில் உறுதி கிடையாது. அப்படி வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியாமல் போனால், ரீஃபண்ட் கிடைக்க வேண்டி இருந்தால், அது கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது.

அடுத்து, வீட்டுக் கடன் / கார் கடன் போன்றவை கிடைக்காமல் போகலாம். மேலும், இப்படி மிகவும் தாமதமாக வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் பட்சத்தில், வருமான வரித் துறை உங்களின் உண்மையான சம்பளம் எவ்வளவு, வரிச் சலுகைக்கான முதலீடுகள் எல்லாம் உண்மையா என ஆராய வாய்ப்பு இருக்கிறது.அந்த வகையில் கெடு தேதி தாண்டி யவர்கள் விரைவில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது பலவகையில் லாபகரமாக இருக்கும்” என்றார் அவர்.

வரிக் கணக்குத் தாக்கல் செய்யாத வர்கள் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு உடனடியாக வரிக் கணக்கை தாக்கல் செய்துவிடலாமே!