Published:Updated:

முகமறியா வரி நோட்டீஸ்... சாதாரண மக்களை வாட்டி வதைப்பது ஏன்?

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
வருமான வரி

வருமான வரி

முகமறியா வரி நோட்டீஸ்... சாதாரண மக்களை வாட்டி வதைப்பது ஏன்?

வருமான வரி

Published:Updated:
வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
வருமான வரி

எஸ்.சதீஷ்குமார், ஆடிட்டர், Auditorssk.com

2019-ம் ஆண்டு அக்டோபரில் வருமான வரி மதிப்பீட்டு ஆய்வுக்கு புதிய நடைமுறையை மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT) அறிவித்தது. இந்த நடைமுறையின்கீழ் வரி செலுத்துவோர், வருமான வரி அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது, முகமறியா மதிப்பீடு திட்டம் (Faceless Assessment Scheme) என அழைக்கப்படுகிறது.

எஸ்.சதீஷ்குமார் 
ஆடிட்டர், Auditorssk.com
எஸ்.சதீஷ்குமார் ஆடிட்டர், Auditorssk.com

இதன்படி, இ-மதிப்பீட்டு மையம் வரிதாரருக்கு நோட்டீஸ் அனுப்பும். இந்த நோட்டீஸுக்கு வரி செலுத்து வோர் 15 நாளில் பதில் அளிக்க வேண்டும். அந்த பதிலைப் பெற்ற பின், அவர் களின் பிரச்னை, தானியங்கி முறையைப் பயன்படுத்தி ஓர் அதிகாரிக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அவர் அந்தப் பிரச்னையைக் கையாள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த முறையானது கேட் பதற்கு நன்றாகத்தான் இருக் கிறது. ஆனால், நடை முறையில் சாமானியர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். உண்மையில் நடந்த மூன்று சம்பவங்களைப் பார்ப்போம்.

ஆவின் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட் ஒருவர், அவரின் வங்கிக் கணக்கில் ‘ஓ.டி’ கடன் பெற்று, ஆவின் நிறுவனத்துக்கு ‘டி.டி’ எடுத்து பணம் செலுத்தி வந்திருக்கிறார். முகமறியா மதிப்பீட்டுத் திட்டத்தில் இவரின் ‘ஓ.டி’ கணக்கைத் தவறாக வங்கிச் சேமிப்புக் கணக்கு என எடுத்துக் கொண்டு, சுமார் 60% வரி மற்றும் வட்டி, அபராதம் என ரூ.9 கோடி கட்டச் சொல்லி நோட்டீஸ் வந்துள்ளது. அதாவது, வரிக்கு இணை யாக அபராதம் போடப்பட் டிருக்கிறது. மேலும், வங்கி சேமிப்புக் கணக்கும் முடக்கப் பட்டிருக்கிறது.

முகமறியா வரி நோட்டீஸ்... சாதாரண மக்களை வாட்டி வதைப்பது ஏன்?

இந்த வரி நோட்டீஸுக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனில், கட்ட வேண்டிய தொகையில் 20 சதவிகிதத்தை முதலில் கட்ட வேண்டும். அதாவது, கிட்டத் தட்ட ரூ.2 கோடி. இந்த அளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. இது போல, வியா பாரம் செய்பவர்களுக்குப் படிப்பறிவு பெரிதாகக் கிடை யாது. இந்த நோட்டீஸ் எல்லாம் இ-மெயில் மூலமே அனுப்பப்படுகிறது என்ப தால், அவர்களுக்கு வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட பிறகுதான் விவரமே தெரிய வருகிறது.

அடுத்து, 60 வயது கைம் பெண். இவர் குடும்பத்தில் பாகப்பிரிவினைமூலம் ரூ.2 கோடி கிடைத்திருக்கிறது. சொத்து விற்று வந்த பணத்தை இடைப்பட்ட காலத்தில் வங்கி சேமிப்புக் கணக்கி லேயே வைத்திருந்திருக்கிறார். இந்தப் பணத்தை மூலதன ஆதாயம் கணக்கு (Capital Gain Account) என்பதற்கு மாற்றவில்லை என்பதற்காக ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பணத்தைக் கொண்டு வேறு வீடும் வாங்கி விட்டார். வாங்கிய அந்த வீடு தவிர, குடியிருக்க வேறு வீடு அவருக்கு இல்லை. குடும்ப ஓய்வு மட்டும் தான் அவரின் வருமானம். வருமான வரி வரும் அளவுக்கு அந்த பென்ஷன் தொகை இல்லை. வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் அவசியமும் இல்லை. அந்த அம்மாவுக்கு ரியல் எஸ்டேட் நீண்ட கால மூலதன ஆதாயத்தைக் கொண்டு வேறு சொத்து வாங்குவதற்குள்ள இடைப்பட்ட காலத்தில் அந்தப் பணத்தை மூலதன ஆதாயக் கணக்கில் போட்டு வைக்க வேண்டும் என்கிற விவரம் தெரியவில்லை. அவருக்கு இப்படியாகிவிட்டது.

இந்தச் சம்பவம், சம்பளத்தாரருக்கு நடந்துள்ளது. கொரோனா பரவலில் அவருக்கு வேலை போய் விட்டது. இதனால், அவர் நிதி ஆண்டில் இரு நிறு வனங்களில் பணிபுரிந்துள்ளார். அவருக்கு இரண்டு ஃபார்ம் 16 இருந்திருக்கும் நிலையில், அவர் வழக்கம் போல் ஒரு ஃபார்ம் படிவத்தின் அடிப்படையில் வரிக் கணக்குத் தாக்கல் செய்திருக்கிறார். அவருக்கு சம்பளத்தில் பிடிக்கப்பட்ட டி.டி.எஸ் அடிப்படையில் அந்தத் தொகையைப் போல் 200% அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. மேலும், அவர் வருமான வரி கட்டிய பிறகும் ரூ.30 லட்சம் அவருக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

இது போன்ற பிரச்னைகளுக்கு கோர்ட்டுக்குப் போய், நேரிடையாக விளக்கம் அளிக்கும்பட்சத்தில் தான் தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.மேல் முறையீடு செய்தால், அதுவும் முகமறியா விசாரணைதான். வருமான வரி ஆணையரை (மேல்முறையீடு) நேரில் பார்த்து விளக்கம் அளிக்க முடியாது. மேல் முறையீடு செய்தாலும் சாதாரணமானவர்களின் பிரச்னைகளை அதிகாரிகள் கவனிப்பதில்லை. அவர்கள் அரசுக்கு வருமானம் வருகிறது என மக்களைக் கஷ்டப்பட விட்டுவிடுகிறார்கள். இதற்கு முன், வருமான வரித் துறையில் செட்டில்மென்ட் கமிஷன் என ஒன்று இருந்தது. இப்போது அதுவும் இல்லை.

வங்கிப் பரிவர்த்தனை மட்டுமே பார்த்து எந்த விளக்கத்தையும் கேட்காமல், அபராதம் விதிப்பது எப்படி சரியாகும்? வரி கட்டாதவர்கள் அனைவருமே வரி ஏய்ப்பு செய்பவர்கள் என்று நினைப்பது தவறான எண்ணமே அன்றி வேறென்ன?