Published:Updated:

ஃபார்ம் 26 ஏ.எஸ்... வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஏன் அவசியம்? - அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள்...

ஃபார்ம் 26 ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபார்ம் 26 ஏ.எஸ்

TAX FILING

ருமான வரிப் படிவம் தாக்கலின்போது படிவம் 26 ஏ.எஸ் (Form 26AS) என்பது முக்கியமான ஓர் ஆவண மாகக் கருதப்படுகிறது. அந்த 26 ஏ.எஸ் படிவத்தில்/ ஆவணத்தில் தரப்பட்டுள்ள விவரங்களை அடிப் படையாகக் கொண்டுதான் உங்களின் வருமான வரிப் படிவம் தயார் செய்யப்பட்டு தாக்கல் செய்யப் படுகிறது. ஆனால், இந்தப் படிவம் 26 ஏ.எஸ்ஸின் முக்கியத்துவம் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இந்தப் படிவத்தின் முக்கியத்துவம் என்ன என்று பார்த்துவிடுவோம்.

எட்டு பாகங்களை 26 ஏ.எஸ்...

இந்த 26 ஏ.எஸ் ஆவணம் என்பது எட்டு பாகங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

இதில் பார்ட் ஏ-வில் (Part A) உங்கள் வருமானத்திலிருந்து யாராவது வரிப் பிடித்தம் செய்திருந்தால் , அந்த வரிப் பிடித்தம் சம்பந்தமான விவரங்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும். உதாரணமாக, நீங்கள் வாங்கும் சம்பளத்திலிருந்து, நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் வரிப் பிடித்தம் செய்திருந்தால் அது இங்கு இடம்பெற்றிருக்கும். மேலும், நீங்கள் உங்களுடைய அசையா சொத்துகளை விற்கும்போது, விற்பனை மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மேல் இருந்தால், விற்பனை மதிப்பில் 1% வரிப் பிடித்தம் செய்யப்படும். அதுவும் இந்தப் பகுதியில்தான் இடம்பெறும்.

வி.தியாகராஜன்
ஆடிட்டர்
வி.தியாகராஜன் ஆடிட்டர்

பார்ட் பி-யில் (Part B) உங்களுக்கான வரியை யாராவது வசூலித்து, அதை உங்கள் பெயரில் செலுத்தியிருந்தால் அது இந்தப் பகுதியில் இடம்பெறும். உதாரணமாக, நீங்கள் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக கார் வாங்கும் போது, உங்களிடமிருந்து காரின் விலையில் 1% வரி வசூலித்து, அதை உங்களின் பான் எண்ணைக் குறிப்பிட்டு, வரி பிடித்தவர்கள் அரசுக்கு வரி செலுத்துவார்கள். அது இந்தப் பகுதியில் இடம்பெறும். மூல வருமானத்தில் வரிப் பிடித்தம் மற்றும் வரி வசூல் என்பது வருமான வரிச் சட்டத்தில் 50 விதமான பிரிவுகளில் கணக்கிடப்படுகிறது.

திருப்பித் தரப்பட்ட வரி விவரங்கள்...

பார்ட் சி-யில் (Part C) பார்ட் ஏ, பி-யில் வராத வரி செலுத்திய விவரங்கள் இடம்பெறும். உதாரணமாக, நீங்கள் கட்டிய முன்கூட்டியே செலுத்திய வரி(Advance Tax) மற்றும் சுயமதிப்பீட்டு வரி (Self Assessment Tax) பற்றிய விவரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும்.

பார்ட் டி-யில் (Part D) உங்களுக்குத் திருப்பித் தரப்பட்ட வரி விவரங்கள் (Tax Refund) இடம்பெற்றிருக்கும்.

பார்ட் இ-யில் (Part E) நீங்கள் மேற்கொண்ட குறிப்பிடத் தகுந்த நிதிப் பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். உதாரணமாக, நீங்கள் ஒரு வருடத்துக்கு ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக உங்களின் வங்கிக் கணக்கில் ரொக்கமாகச் செலுத்தி இருந்தாலோ, நீங்கள் ஏதேனும் அசையும் மற்றும் அசையா சொத்து சம்பந்தமான நிதிப் பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்தாலோ, அதைப் பற்றிய விவரங்கள் இந்தப் பகுதியில் இடம்பெற்றிருக்கும். இதுபோன்று 14 விதமான நிதிப் பரிவர்த்தனை பற்றிய விவரங்கள் இந்தப் பகுதியில் இடம் பெற்றிருக்கும்.

பார்ட் எஃப்பில் (Part F) கடந்த நிதியாண்டில் அசையா சொத்துகளை நீங்கள் விற்று இருந்தாலோ, அசையா சொத்துகளின் மூலம் வாடகை வருமானம் பெற்றிருந்தாலோ, அந்த வருமானத்தில் வரிப் பிடித்தம் செய்யப்பட்டுள்ள விவரங்கள் இந்தப் பகுதியில் இடம்பெற்றிருக்கும்.

ஃபார்ம் 26 ஏ.எஸ்
ஃபார்ம் 26 ஏ.எஸ்

பார்ட் ஜி-யில் (Part G) நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகையில் வரிப் பிடித்தம் செய்து அதை அரசாங்கத்துக்குச் செலுத்தாமல் இருந்தால் அல்லது தாமதமாகச் செலுத்தியிருந்தால் அவை பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். (பார்ட் ஹெச் பகுதியில் உள்ள விவரங்கள் பெட்டிச் செய்தியில் தரப்பட்டுள்ளது!)

கவனத்தில் கொள்ள வேண்டியவை...

இதுவரை நாம் பார்த்த எட்டு பாகங்களில் இடம்பெற்றுள்ள விவரங்கள் அனைத்தையும் தொகுத்து உங்களின் வருமான வரிப் படிவத்தில் இடம்பெறச் செய்து, உங்களின் வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.

அப்படித் தாக்கல் செய்யும் முன் கீழ்க்கண்ட விஷயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியம்.

1. 26 ஏ.எஸ் படிவத்தை /ஆவணத்தை நீங்கள் உங்கள் பான் எண் (PAN Number) மற்றும் ரகசிய எண் (Password) உதவியுடன் வருமான வரித் தாக்கல் செய்யும் வலைதளத்திலிருந்து (www.income taxindiaefiling.gov.in) தரவிறக்கி (download) சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், உங்களின் இன்டர்நெட் பேங்கிங் வங்கிக் கணக்கு மூலமாகவும் தரவிறக்கிக் கொள்ளலாம்.

2. இந்த 26 ஏ.எஸ் ஆவணம் வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் முக்கியமான தாகும். அதாவது, மாதச் சம்பளம் வாங்குபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், கூட்டுத் தொழில் செய்பவர்கள், கம்பெனி நடத்து பவர்கள் என்று அனைவருக்கும் இது முக்கியமான ஆவணம் ஆகும்.

3. ஃபார்ம் 26 ஏ.எஸ்ஸில் ஒரு முழு நிதியாண்டுக்கான தகவல்கள் இடம்பெற்றிருக்கும். உதாரண மாக, நீங்கள் இப்போது 2019-20-ம் நிதிநிலை ஆண்டுக்கான வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்யவிருக்கிறீர்கள் எனில், நிதிநிலை ஆண்டு 2019-20-ம் ஆண்டுக்கான தகவல்கள் படிவம் 26 ஏ.எஸ் படிவத்தில் இடம்பெற்றிருக்கும். இதுபோல, ஒவ்வொரு நிதி ஆண்டுக்கான படிவம் 26 ஏ.எஸ்ஸைத் தரவிறக்கிக் கொள்ளலாம்.

4. இந்தப் படிவம் 26 ஏ.எஸ்ஸில் இடம்பெற்றுள்ள தகவல்கள், விவரங்கள் அனைத்தையும் உங்கள் வருமான வரிக் கணக்கில் சேர்த்து கணக்கிட்டே வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும் என்பது முக்கியம்.

உங்களிடமிருந்து வரிப் பிடித்தம் செய்து அரசாங்கத்துக்கு முறையாகச் செலுத்தாமல் இருந்தால் அந்த வரியை உங்களின் வருமான வரிக் கணக்கில் நீங்கள் எடுக்க முடியாமல் போய்விடும். எனவே, உஷார்!

கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருந்தால்...

5. வருமான வரிப் பிடித்தம் செய்யப்பட்டுள்ள விவரங்கள் இந்தப் படிவம் 26 ஏ.எஸ்ஸில் இடம்பெற்றிருந்தாலும், நீங்கள் அதிகபட்ச வருமான வரி வரம்புக்குள் வருபவராக இருந்தால், அந்த வருமானத்துக்கான மீதமுள்ள வரியை நீங்கள்தான் செலுத்த வேண்டும். உதாரணமாக, வங்கி வைப்பு நிதியின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத் துக்கு வங்கிகள் 10% வரிப் பிடித்தம் செய்கின்றன. ஆனால், உங்கள் வருமானம் 30% வருமான வரி வரம்புக்குள் உட்பட்டிருந்தால், அந்த வங்கி வட்டி வருமானத்துக்கான மீதமுள்ள 20% வரியை நீங்கள் செலுத்தி, வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

அரசுக்கு வரி செலுத்தியிருந்தால்தான்...

6. இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான விஷயம், உங்கள் வருமானத்தில் வரிப் பிடித்தம் செய்திருந்தாலும் அல்லது உங்களிடமிருந்து வரிவசூல் செய்திருந்தாலும், அதை உங்களின் பான் எண்ணைக் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் அதாவது, உங்களிடம் இருந்து வரிப் பிடித்தம் செய்தவர்கள் மற்றும் வரி வசூல் செய்தவர்கள், அரசுக்கு முறையாகச் செலுத்தியிருந்தால்தான் அந்த விவரங்கள் இந்தப் படிவம் 26 ஏ.எஸ்ஸில் இடம்பெறும். இல்லாவிட்டால் இடம்பெறாது.

அவ்வாறு உங்களிடமிருந்து வரிப் பிடித்தம் செய்து அரசாங்கத்துக்கு முறையாகச் செலுத்தாமல் இருந்தால் அவர்களிடம் அந்த வரியை உடனே அரசாங்கத்துக்குச் செலுத்து மாறு நீங்கள் நிர்ப்பந்திக்க வேண்டும். இல்லா விட்டால், அவ்வாறு பிடித்தம் செய்த வரியை உங்களின் வருமான வரிக் கணக்கில் நீங்கள் எடுக்க முடியாமல் உங்களுக்கு வரி இழப்பாக முடியும்.

இந்த விவரங்களை எல்லாம் மனதில் வைத்து வருமான வரிப் படிவம் தாக்கல் செய்தால் அது வரி செலுத்துபவருக்கும், அரசாங்கத்துக்கும் உதவியாக இருக்கும்!

சுயதொழில் செய்பவராக இருந்தால்...

குதி ஹெச்சில் (Part H) நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால், உங்களின் வியாபாரத்தில் ஜி.எஸ்.டி 3B படிவம் தாக்கல் செய்திருந்தால், அதில் இடம்பெற்றுள்ள விற்பனை மதிப்பு பற்றிய விவரங்கள் இந்தப் பகுதியில்தான் இடம் பெற்றிருக்கும்.

இது சமீபத்தில் நிதித்துறை முடிவெடுத்து சேர்க்கப்பட்ட பகுதியாகும். இது உங்களின் வியாபாரத்தில் கிடைக்கும் விற்றுமுதல் வருவாய் மதிப்பை (Turnover Value) ஜி.எஸ்.டி வடிவத்திலும், வருமானவரி கணக்கிலும் சமமாகக் காண்பித் திருக்கிறீர்களா, இல்லையா என்பதைத் தெளிவுபடுத்திவிடும்.

எனவே, இந்தப் பகுதியும் முக்கியமான பகுதிகளில் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.