பிரீமியம் ஸ்டோரி

அன்பளிப்புக்கு வருமான வரி உண்டா, எத்தனை ரூபாய்க்கு வருமான வரி கட்ட வேண்டும், யாரிடமிருந்து பெறப்பட்ட அன்பளிப்புக்கு வருமான வரி கட்ட வேண்டும் என்பவை பலரும் அடிக்கடி கேட்கும் கேள்விகள். இது குறித்த வருமான வரி விதிகளைப் பார்ப்போம்.  

ப.முகைதீன் 
சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

அன்பளிப்பு என்பது...

ஒருவர் மற்றவருக்கு, எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் தருவது. அது பணம், வங்கி வரைவோலை, நகை, நிலம், வீடு என இருக்கலாம்.

உறவினர்கள் என்பவர்கள்...

உறவினர்கள், நண்பர்களிடம் இருந்தும் அன்பளிப்புப் பெறலாம். உறவினர்கள் என்பது வருமான வரிச் சட்டத்தின்படி, தனிநபரின் கணவர் அல்லது மனைவி, சகோதரர் அல்லது சகோதரி, மனைவி அல்லது கணவரின் சகோதரர், மனைவி அல்லது கணவரின் சகோதரி, கணவர் அல்லது மனைவியின் தந்தை வழி சகோதர, சகோதரி, கணவர் அல்லது மனைவியின் தாய் வழி சகோதரர், சகோதரி, தனிநபரின் வம்சாவளியைச் சேர்ந்த நேரடி வாரிசுதாரர் (Lineal Descendant), தனிநபரின் சகோதரர் அல்லது சகோதரியின் வாழ்க்கைத் துணை (கணவர்/மனைவி), வம்சாவளி வந்த நேரடி வாரிசின் வாழ்க்கைத் துணை, இந்துக் கூட்டுக் குடும்ப உறுப்பினராக உள்ள எவரேனும் - இவர்கள்தாம் உறவினர்கள். 

அன்பளிப்புக்கு வரிச் சலுகை 
உண்டா?  அவசியம் அறிய வேண்டிய அம்சங்கள்! 

வரியின்றி பணம் பெறுதல்... 

மேற்சொல்லப்பட்ட உறவினர் களிடமிருந்து திருமணத்தின்போது பணம் பெறுதல், உயில் மூலமாகப் பணம் பெறுதல், பரம்பரைச் சொத்து என்ற வகையில் பணம் பெறுதல், வருமான வரி விதி 10(20)-ன்படிஉள்ளாட்சி நிறுவனத் திடமிருந்து பணம் பெறுதல், பிரிவு 10(23)-ல் உள்ளபடி, எந்தவொரு நிதியத்தில் இருந்தோ, தர்ம ஸ்தாபனத்தில் இருந்தோ, பல்கலைக் கழகம் இதர கல்வி நிலையங்களில் இருந்தோ, மருத்துவமனை மற்றும் மருத்துவ நிறுவனங்களில் இருந்தோ பணம் பெறுதல், டிரஸ்டுகளில் இருந்து பணம் பெறுதல், நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும்போது பங்குகளைப் பெறுதல் முதலான வற்றுக்கு வருமான வரி கிடையாது. 

பணமாக அன்பளிப்புப் பெறுதல் திருமண நிகழ்ச்சியின்போது மட்டுமே வரிக்கு உட்படாது. பிறந்த நாள், வயது நிறைவு நிகழ்ச்சியின் போது பணம் பெற்றால் வரிக்கு உட்படும். நண்பர்கள் என்பவர்கள் உறவினராக மாட்டார்கள். எனவே, நண்பர்கள் மூலம் பெறப்படும் பண அளிப்பு வரிக்கு உட்படும். 

வெளியூர், வெளிநாடு அன்பளிப்பு...

ஒரு நிதியாண்டில் மும்பை, டெல்லி போன்ற இந்திய நகரங்களில் இருந்தும், துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் பெறப்படும் அன்பளிப்புத் தொகை 5,000 ரூபாய்க்கு உட்பட்டிருந்தால் வரி கிடையாது. 50,000-க்கு மேற்பட்டால் மொத்தத் தொகைக்கும் வரி உண்டு. 50,000 ரூபாய் வரம்பு என்பது ஒரு நிதி ஆண்டில் பல தருணங்களில் பெற்ற பண அன்பளிப்பின் கூட்டுத் தொகையாகக் கணக்கிடப்படும்.

அசையாச் சொத்து...

உறவினர்களிடமிருந்து அன்பளிப் பாகப் பெறப்படும் நிலம், வீடு போன்ற அசையாச் சொத்துகள் வரிக்கு உட்படாது. அதாவது, திருமண விழாவின்போது பெறப்பட்ட அசையாச் சொத்து, உயில் மற்றும் பூர்வீக சொத்து, உள்ளாட்சி போன்றவற்றிலிருந்து பெறப்படும் அசையாச் சொத்து முதலியன வரிக்கு உட்படாது. 

திருமணம் தவிர்த்து, பிறந்தநாள், வயது முதிர்வு, ஆண்டு விழா போன்ற வைபவங்களின் போது பெறப்படும் அசையாச் சொத்துக்கு வரி உண்டு. நண்பர்களிடமிருந்து பெறப்படும் அசையாச் சொத்து அன்பளிப்பும் வரிக்கு உட்படும். வரியானது அசையாச் சொத்தின் முத்திரைத்தாள் மதிப்பு எவ்வளவோ, அந்தத் தொகைக்குரிய வரி விகிதத்தில் வசூலிக்கப் படும் (பிற நிபந்தனைகளும் உண்டு).

அசையும் சொத்து...

அசையாச் சொத்து போலவே, உறவினர் களிடமிருந்து பெறப்படும் தங்க நகைகள், வெள்ளிக்கட்டி போன்ற அசையும் சொத்து ஆகியவை திருமணத்தின்போது பெறப்பட்டால் வரிக்கு உட்படாது. அதே போல், உயில் மற்றும் பூர்வீகச் சொத்து வகையில் பெறப்படும் அசையும் சொத்து வரிக்கு உட்படாது. உள்ளாட்சி முதலியவற்றிலிருந்து பெறப்படும் அசையும் சொத்துக்கும் வரி கிடையாது. ஆனால், நண்பர்கள் முதலானவர்களிடமிருந்து பெறப்படும் அசையும் சொத்து இனங் கள், அதன் சந்தை விலை அடிப்படையில் தனிநபர் பெற்ற வருமானம் எனக் கணக்கிடப் படும். இதற்கும் வரி விதிக்கப்படும். நண்பர்களிடமிருந்து பெறப்படும் அசையும் சொத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 50,000 ரூபாய் என்ற வரம்பைத் தாண்டினால், மொத்தத் தொகையும் வரிக்கு உட்படும். 

அசையாச் சொத்து என்பது பங்குகள் மற்றும் பங்குப் பத்திரங்கள் (Shares/Securities), நகைகள் (Jewellery), தொல்பொருள்கள் (Archaelogical), ஓவியங்கள் (Drawings), பெயின்டிங்ஸ் (Paintings), சிற்பங்கள், வெள்ளி போன்ற உலோகக் கட்டிகள் ஆகியவை அடங்கும். ஆனால், டெலிவிஷன், மோட்டார் பைக், கார் போன்றவை அன்பளிப்பில் அடங்காது.

அன்பளிப்புத் தொடர்பான வரி விஷயங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவோம்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு