Published:Updated:

அகவிலைப்படியால் அதிகரிக்கும் வரி... தவிர்க்கும் வழிமுறைகள்..!

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
வருமான வரி

வருமான வரி

அகவிலைப்படியால் அதிகரிக்கும் வரி... தவிர்க்கும் வழிமுறைகள்..!

வருமான வரி

Published:Updated:
வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
வருமான வரி

கடந்த 2021-22-ம் நிதியாண்டின் கடைசி தேதியில் மத்திய அரசு ஊழியர் களுக்கான அகவிலைப்படியை 31 சத விகிதத்திலிருந்து 34 சதவிகிதமாக உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு. இது வழக்கமான நடைமுறைதான். மத்திய அரசு ஊழியர் மட்டுமன்றி, அவர்களுக்கு இணையாக சம்பளம் பெறும் அஞ்சல்துறை, ரயில்வே போன்ற வாரியங்களின் ஊழியர்களும் இந்த அகவிலைப்படி உயர்வைப் பெறுவார்கள். அடுத்ததாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கக்கூடும். இதனால் அனைவரின் மாதாந்தரச் சம்பளமும் உயரும்.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

வருமானத்தை உயர்த்தும் காரணிகள்...

சம்பளம் என்பது அகவிலைப்படியால் மட்டுமன்றி, வருடாந்தர ஊதிய உயர்வு வீட்டு வாடகைப்படி உயர்வு, சம்பள கமிஷன் உயர்வு போன்றவற்றாலும் அதிகரிக்கிறது.

இவை போக, ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு (அரசு) சம்பளதாரர் தனது ஈட்டிய விடுப்புக் (Eamed leave) கணக்கில் உள்ள 15 நாள்களை ஒப்படைத்து, அதற்கு இணையான சம்பளத்தை ரொக்கமாகப் பெறுவதாலும் வருடாந்தர வருமானம் அதிகரிக்கிறது. ஆனால், வருமானம் உயர்வதற்கேற்ப செலுத்த வேண்டிய வருமான வரியும் அதிகரிக்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

பிப்ரவரியில் தவிப்பு...

இவ்வாறு அதிகரிக்கும் அல்லது அதிகரிக்கப் போகும் வருமான வரியைச் சேமிப்பது எப்படி என்று பெரும்பாலான சம்பளதாரர்கள் முன்னதாகவே கணக்குப் போட்டு பார்க்கத் தவறிவிடுகிறார்கள். பிப்ரவரி மாத சம்பளத்தில் பெரும்பகுதி, வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும் போதுதான், “ஆஹா! இந்த வரி உயர்வைக் கவனிக்காமல் இருந்துவிட்டோமே... இப்போது வரி கட்ட வேண்டியிருக்கிறதே...’’ என்று புலம்பத் தொடங்கிவிடுகிறார்கள். இனிமேலாவது காலம் கடந்த பின் ‘வரியை எப்படி சேமிக்கலாம்’ என்று சிந்திக்காமல் ‘அட்வான்ஸாகவே’ வரியைக் கணக்கிட்டு, மிச்சப்படுத்தும் வழிகளைக் கண்டறிவதே புத்திசாலித்தனம். அதற்கான வழிகளைப் பார்ப்போம்.

அகவிலைப்படியால் அதிகரிக்கும் வரி... தவிர்க்கும் வழிமுறைகள்..!

வருமான வரிக் கணக்கீடு...

வருமான வரியைச் சேமிக்க விரும்புவோர், சம்பள வருமானம் இரண்டு முறைகளில் கணக் கிடப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் தன்னுடைய சம்பளத் தையோ, சம்பளத்தின் ஒரு பகுதியையோ, அது எந்த நிதியாண்டில் பெறப்பட்டதோ, அந்த நிதியாண்டுக் கணக்கில் காட்டலாம். அல்லது அந்த சம்பளம் எந்த நிதியாண்டுக்கு உரியதோ, அந்த நிதியாண்டுக் கணக்கிலும் காட்டலாம். அதாவது, பெற வேண்டியது (Due basis) அல்லது பெற்றது (Drawn basis) என இரண்டு வகையிலும் கணக்கிட்டுக் கொள்ள லாம். உதாரணமாக, 31% என்றிருந்த அகவிலைப் படியை 34% என மத்திய அரசு கடந்த ஜனவரி 2022-ல் உயர்த்தியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வுத் தொகையானது ஏப்ரல் 2022 அல்லது அதற்குப் பிறகுதான் கிடைக்கும்.

அரசுப் பணியில் இருப்பவர்களின் 2022-23 நிதியாண்டுக்கான சம்பளம் என்பது மார்ச் 2022 முதல் பிப்ரவரி 2023 வரையிலான சம்பளமாக உள்ளது. அப்படிப் பார்த்தால், ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022-க்கான அகவிலைப்படி நிலுவை 2021-22 நிதியாண்டுக்கு உரியது. எனவே, ஜனவரி மற்றும் பிப்ரவரி 2022-க்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை அதற்குரிய (Due basis) 2021-22 நிதியாண்டுக் கணக்கிலும் சேர்க்கலாம். ஏப்ரல் மாதம்தான் நிலுவைத் தொகைகையில் கிடைத்தது (Drawn basis) என்கிற அடிப்படையில் 2022-23 நிதியாண்டுக் கணக்கிலும் சேர்த்துக்கொள்ளலாம்.

அகவிலைப்படியால் அதிகரிக்கும் வரி... தவிர்க்கும் வழிமுறைகள்..!

வரிக்கழிவு

 நிரந்தரக்கழிவு: 50,000

 சி.பி.எஸ்சந்தா: 53,652

 எஸ்.பி.எஃப்: 840

 எஃப்.எஸ்.எஃப்: 1,320

 NHIS: 3,600

 தொழில்வரி: 2,500

 மொத்தம்: 1,11,912

வரிச் சேமிப்பு

இப்படி வரியைக் கணக்கிடும் முறை அடிப்டையில், வரித் தொகையான ரூ.13,172-யை எப்படிச் சேமிக்கலாம் என்பது முக்கியமான விஷயம். இதற்காக சென்னையையொட்டிய கிராமப்புறங்களில் தற்போது ரூ.32,200 அடிப்படைச் சம்பளத்தில் பணிபுரியும் தமிழக அரசு ஊழியர் ஒருவரின் 2022-23 நிதியாண்டுக்கான வரிக்கணக்கைப் பார்ப்போம். (பார்க்க, மேலே உள்ள அட்டவணை).

இந்த அட்டவணையின்படி, இந்த அரசு ஊழியரின் 2022-23 நிதியாண்டுக்கான வரிக்குரிய தொகை ரூ.5,00,826- ஆக இருக்கிறது. இவர் பழைய பென்ஷன் சார்ந்த ஊழியராக இருப்பார் எனில், இந்த 826-ஐ ஜி.பி.எஃப் கணக்கில் சேர்த்து வரி இல்லாமல் செய்ய முடியும். ஆனால், இவர் சி.பி.எஸ் ஊழியராக இருந்தால், வரி கட்ட வேண்டியிருக்கும்.

ஆனால், இவரும் வரியிலிருந்து விடுபட வாய்ப்பு உண்டு. எப்படி எனில், தற்போது 2021-22 நிதி ஆண்டுக்குத் தாக்கல் செய்யப்போகும் வரித் தாக்கலில் ஜனவரி - பிப்ரவரி 2022-க்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.1,932-ஐ மட்டும் சேர்த்துவிட்டால் 2022-23-க்கு வரிக்குரிய வருமானம் ரூ.4,98,894 என்றாகிவிடும். இதற்கான வரி ரூ.12,445 பிரிவு 87A-யின்படி தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.

வருமானத்தைப் பெற்றுக்கொண்டுதான் வரிக் கணக்கில் கொண்டு வர வேண்டும் என்பது கிடையாது. இனி பெறப்போகும் சம்பளத்தையும் (Due basis) வரித் தாக்கலில் சேர்த்து மேற்கண்டவாறு வரியைச் சேமிக்கலாம்.

ஓய்வுக்கால நிதியம், ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றுக்கு சம்பளப் பிடித்தம் தவிர, வருமான வரிப்பிரிவு 80c முதல் 80u வரை எந்த முதலீடும் இல்லாத பங்களிப்பு ஊதியம் சார்ந்த ஒருவருக்கான உதாரணம் மேலே இருப்பது.

சம்பளத்துக்கு வெளியே தனிப்பட்ட முறையில் வரிச்சலுகை உள்ளவர்களும் நடப்பு நிதி ஆண்டின் வருமானத்தைக் கணக்கிட்டு வரியைச் சேமிக்கலாம்.

ஒப்படை விடுப்புக்கு வரிச் சேமிப்பு

ஒருவருடைய மொத்த சம்பளத்தில் (Gross salary) வரிச் சலுகை போக, வரிக்குரிய வருமானம் ரூ.4,75,000-ஆக உள்ளதாக வைத்துக்கொள்வோம். நிதியாண்டு இறுதியில் இவர் 15 நாள் ஈட்டிய விடுப்பு ஒப்படை சம்பளம் கோரி விண்ணப்பிக்கிறார். இவரது 15 நாள் களுக்கான விடுப்புச் சம்பளம் 26,000 ரூபாய். அப்படி எனில், இவரது வரிக்குரிய வருமானம் ரூ.5,01,000 என்றாகிவிடும். எனவே, ரூ.12,700 வரி கட்ட வேண்டி யிருக்கும். இந்த சி.பி.எஸ் ஊழியர் 15 நாள்களுக்கான ஈட்டிய விடுப்பு சம்பளத்தை 14 நாள் எனக் குறைத்து விண்ணப்பித்தால், விடுப்புச் சம்பளம் 24,267-ஆக இருக்கும். இத்துடன் 4,75,000 ரூபாயைச் சேர்த்தாலும் வரிக்கான தொகை 4,99,267-ஆக மட்டுமே இருக்கும். இதனால் வரித்தள்ளுபடி கிடைத்துவிடும்.

இதே போல், தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள நிலையைப் (pay stage) பொறுத்து வீட்டு வாடகைப்படி மாறுபடும். வீட்டு வாடகைப்படி உயர்வு காரணமான வருமான வரியையும் சரியாகக் கணக்கிட்டு வரிச் சேமிப்பு செய்யலாம்.

புதிய வரித்திட்டம்

வருமான வரித் தவிர்ப்பு மட்டுமன்றி, வருமான வரியைக் குறைக்கவும் மேற்கண்ட கணக்கீடுகள் பயன்படும். அதாவது, 10% வரியிலிருந்து 15 சதவிகிதத்துக்கு உயராமலும், 15-லிருந்து 20-க்கு மேல் உயராமலும் முன்னதாகவே வரியைக் கணக்கிட்டு வரித் தள்ளுபடி பெறலாம். ஒரு நிதியாண்டில் ஒரு தொகையைக் கணக்கில் சேர்த்துவிட்டால், அடுத்த நிதியாண்டில் அதே தொகையைச் சேர்க்க வேண்டியதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வருமானத்தைக் குறைத்துக் காண்பித்து வரி கட்டாமல் இருப்பது தான் தவறு. ஆனால், வருமானவரித் துறை தந்துள்ள வரிச்சலுகைகளைப் பயன்படுத்தி வரியைக் குறைத்து, மிச்சப்படுத்துவதில் தவறு எதுவும் இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism