Published:Updated:

கடைசி நேர வரி சேமிப்பு... கைகொடுக்கும் டிப்ஸ்..!

வரி சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
வரி சேமிப்பு

வரி சேமிப்பு

கடைசி நேர வரி சேமிப்பு... கைகொடுக்கும் டிப்ஸ்..!

வரி சேமிப்பு

Published:Updated:
வரி சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
வரி சேமிப்பு

டாக்டர் அபிஷேக் முரளி, ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துபவர்கள் சங்கம்

நடப்பு நிதி ஆண்டு (2021-22) வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இன்னும் பலர் முழுமையான வருமான வரி சேமிப்புகளை மேற்கொள்ளாமல் இருக்கிறார் கள். பழைய வரி முறையில் வருமான வரியைச் சேமிக்க உதவும் சில விரைவான வரி சேமிப்புகள் பற்றிப் பார்ப்போம்.

டாக்டர் அபிஷேக் முரளி 
ஆடிட்டர் & பிரசிடென்ட், 
அகில இந்திய வரி செலுத்துபவர்கள் சங்கம்
டாக்டர் அபிஷேக் முரளி ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துபவர்கள் சங்கம்

80சி பிரிவு

வரி சேமிப்பு என்றாலே அனைவரின் நினைவுக்கும் உடனே வருவது 80சி பிரிவுதான். இந்தப் பிரிவின் கீழ் பல்வேறு முதலீடுகள் மூலம் நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரியைச் சேமிக்க முடியும். இந்த வரம்பை எட்டவில்லை என்றால், முதலீடு செய்வதற்கான முக்கியத் திட்டமாக பொதுமக்கள் சேமநல நிதி (Public Provident Fund -PPF) இருக்கிறது. வங்கி வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு (எஃப்.டி) சுமார் 6.5% வட்டி வழங்கப்படும் நிலையில் பி.பி.எஃப்-க்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. எஃப்.டி வட்டிக்கு வரி கட்ட வேண்டும். பி.பி.எஃப் வட்டி வருமானத்துக்கு வரி எதுவும் கிடையாது என்பது மிகவும் சிறப்பு மற்றும் லாபகரமானதாகும். இதன் லாக்இன் பிரீயட் 15 ஆண்டு ஆகும். நீண்ட காலத் திட்டங்களில் மிகவும் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது பி.பி.எஃப் ஆகும். இப்போது வரி சேமிப்புக்குத் தேவையான தொகையை முதலீடு செய்தால், அடுத்த ஆண்டு அதைவிட குறைவாகவோ, அதிகமாகவோ முதலீடு செய்துகொள்ளலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.500. வரி சேமிப்பு தவிர ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பணி ஓய்வுக் காலத்துக்குக்கூட இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து வரலாம். சம்பளத்தில் பிடிக்கப் படும் பி.எஃப் தவிர, கூடுதலாக பி.பி.எஃப்பில் முதலீடு செய்து வரலாம்.

அடுத்து, பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் அதிக வருமானம் எதிர்பார்க்கும் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் உள்ளவர்கள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒரு வகையான பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டத்தில் (ELSS - Equity Linked Savings Scheme) முதலீடு செய்வது மூலம் 80சி பிரிவில் வரிச் சலுகை பெற முடியும். இதிலும், அடுத்த ஆண்டு வரிச் சலுகை எவ்வளவுக்கு தேவையோ அதற்கு ஏற்ப கூட்டிக் கழித்துக் கொள்ளலாம்.

இவை போக ஆயுள் காப்பீடு பாலிசிகள் (டேர்ம் பிளான், எண்டோவ்மென்ட் பிளான், யூலிப் போன்றவை), தேசிய சேமிப்புத் திட்டம், 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்வது மூலமும் வரிச் சலுகை பெற முடியும்.

கடைசி நேர வரி சேமிப்பு... கைகொடுக்கும் டிப்ஸ்..!

நேஷனல் பென்ஷன் திட்டம்

80சிக்கு வெளியே நேஷனல் பென்ஷன் திட்டம் (என்.பி.எஸ்) மூலம் கூடுதலாக ரூ.50,000 வரைக்கும் முதலீடு செய்து 80CCD(1B)-யின் கீழ் வரிச் சலுகை பெற முடியும். இதிலும் அடுத்த ஆண்டில் தேவைக்கு ஏற்ப குறைத்தோ, அதிகரித்தோ கட்டிக் கொள்ள முடியும். இது பென்ஷன் இல்லாத மாதச் சம்பளக்காரர்களுக்கு மிகவும் ஏற்ற திட்டமாகும்.

மருத்துவக் காப்பீடு

கோவிட்-19 பரவல் ஏற்படுத்திய மருத்துவச் செலவுகளை யாரும் அவ்வளவு சுலபமாக மறக்க முடியாது. அந்த வகையில், வரிதாரர் தனக்கு, தன் குடும்பத்துக்கு இதுவரை மருத்துவக் காப்பீடு எடுக்கவில்லை என்றால், இப்போது எடுத்துக் கொள்ளலாம். 60 வயதுக்கு உட்பட்ட வரிதாரர், அவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் கட்டும் பிரீமியத் துக்கு ரூ.25,000 வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீட்டுக்கு கட்டும் பிரீமியம் மற்றும் மருத்துவச் செலவு களுக்கு ரூ.50,000 வரைக்கும் வரி விலக்கு இருக்கிறது. இந்த பிரீமியத்தை இவர்களின் பிள்ளைகள் கட்டினால் அவர்கள் வரிச் சலுகை பெற முடியும்.

வரிதாரர் மற்றும் அவரின் பெற்றோர் மூத்த குடிமக்களாக இருக்கும்பட்சத்தில் இருவருக்கும் தனித் தனியே மருத்துவச் செலவு மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியத்துக்கு ரூ.50,000 வரை... ஆகமொத்தம் ரூ.1 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும்.

மாதச் சம்பளதாரர்கள் மார்ச் 31 வரைக்கும் செய்யும் முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கு மட்டுமே 2021-22 நிதி ஆண்டுக்கான வரிச் சலுகையாகப் பெற முடியும். இதை நிறுவனத்தில் தெரிவித்து வருமான வரியை சம்பளத்தில் குறைவாகப் பிடிக்க வைக்கலாம். அப்படி முடியவில்லை என்றால் வரி கணக்குத் தாக்கல் (Tax Return Filings) செய்யும்போது க்ளெய்ம் செய்து கொள்ளலாம். சம்பளத்தில் அதிகமாக வரி பிடிக்கப் பட்டிருந்தால் ரீஃபண்டாகக் கூடுதலாகப் பிடிக்கப்பட்ட வரி கிடைத்துவிடும்.