Published:Updated:

அட்வான்ஸ் டாக்ஸ்... யார், எப்போது, எவ்வளவு செலுத்த வேண்டும்? வழிகாட்டும் விளக்கம்...

TAX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

ஜூன் மாதம் பிறந்ததுமே நம்மில் பலருக்கு நமது கைப்பேசிக்கு வருமான வரித் துறையிலிருந்து ஒரு எஸ்.எம்.எஸ் வரும். முதல் தவணை அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்த வேண்டிய கடைசித் தேதி 15.06.2021 என்பதுதான் அந்த எஸ்.எம்.எஸ். இந்த எஸ்.எம்.எஸ் எதற்கு? நமக்கு வந்த வருமானத்துக்கு வரி கட்ட வேண்டியதை நினைவூட்டத்தான்.

ப.முகைதீன் ஷேக் தாவூது
ப.முகைதீன் ஷேக் தாவூது

வரிவகை இரண்டு...

வருமானவரி பல வகை உண்டு. அவற்றில் முதன்மையானவை இரண்டு.

1. டிடிஎஸ் எனப்படும் (Tax Collection at Source) பணத்தைக் கொடுக்கும்போதே அதற்கான வரியைப் பிடித்துக்கொள்வது முதல் வகை. இது சம்பளதாரர்களுக்குப் பின்பற்றப்படும் வருமான வரி வசூல் முறை. அதாவது, சம்பளம் கொடுப்பவர் சம்பளத் தைப் பெறுகிறவரிட மிருந்து வரியைப் பிடித்துக் கொண்டு நிகர சம்பளத் தொகையை மட்டுமே கொடுப்பார். 

2. அட்வான்ஸ் டாக்ஸ் (Advance Tax) எனப்படும் வரி வசூல் முறை இரண் டாவது வகை. சம்பள தாரர் அல்லாத தனிநபர் (Individuals) புரஃபஷனல் (Professional) எனப்படும் மருத்துவர், பொறியாளர், கணக்காயர், கட்டடக் கலை வல்லுநர், உள் அலங் காரம் (Interior Decoration) செய்வோர், ஓவியர், எழுத்தாளர் முதலானோர் தமது சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர். இவர்களுக்கு உரியதுதான் ‘அட்வான்ஸ் டாக்ஸ்’ மூலம் வருமான வரி செலுத்தும் முறை.

வரி கணக்கிடும் முறை...

தனிநபர் வருமானம் அல்லது சுயதொழில் வருமானத்துடன் வட்டி வருமானம் போன்ற இதர வருமானங்களையும் விடுபாடு இல்லாமல் வருமானக் கணக்கில் கொண்டு வர வேண்டும். இதற்கு பெயர் ஒட்டு மொத்த வருமானம் (Gross total income) ஆகும்.

இந்த ஒட்டுமொத்த வருமானத்திலிருந்து வருமான வரிப்பிரிவு 80-C யின்கீழ் வரும் கல்விச் செலவு, பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் சந்தா, சுகன்யா சம்ருதி சந்தா, ஆயுள் காப்பீட்டுச் சந்தா, என்.எஸ்.சி, ஐந்தாண்டு அஞ்சலக டைம் டெபாசிட் போன்றவற்றையும், பிரிவு 80D-யின் கீழ் அனுமதிக்கப்படும் மருத்துவக் காப்பீட்டு சந்தா முதலானவற்றையும், பிற அனுமதிக்கத் தக்க வரிச் சலுகையையும் கழித்துவிட்டால் கிடைப்பது வரிக்குரிய (Taxable income) வருமானம். இதற்கான வரி கணக்கீடு பின் கண்டபடி இருக்கும்.

வருமானம் ரூ.2,50,000 வரை - வரி இல்லை

ரூ.2.5 லட்சம் - ரூ.5 லட்சம் வரை - 5% வரி

ரூ.5 - ரூ.10 லட்சம் 20% வரி

ரூ.10 லட்சத்துக்கு மேல் 30% வரி.

இந்தக் கணக்கீட்டின்படி, யாருக்கெல்லாம் ஒரு நிதியாண்டில் செலுத்த வேண்டிய வருமான வரி 10,000 ரூபாய்க்கு மேல் உள்ளதோ, அத்தகைய தனிநபர் மற்றும் சுயதொழில் செய்வோர் அனைவரும் அட்வான்ஸ் டாக்ஸ் கட்ட வேண்டும் என்பது கட்டாயம்.

அட்வான்ஸ் டாக்ஸ்... யார், எப்போது, எவ்வளவு செலுத்த வேண்டும்? வழிகாட்டும் விளக்கம்...

வரித் தள்ளுபடி...

தற்போதைய வரிச் சலுகையின்படி 12,500 ரூபாய் வரையான வருமான வரி தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்தத் தள்ளுபடிச் சலுகையின்படி பார்த்தால், வரிக்குரிய வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு உட்பட்டு இருப்பவர்கள், அட்வான்ஸ் டாக்ஸ் கட்ட தேவையில்லை. ஆனால், வரிக்குரிய வருமானம் 5,00,100 என்று வந்துவிட்டாலே அத்தகைய வருமான தாரர் 12,520 ரூபாய் வரி கட்ட வேண்டி யிருக்கும். இதை அட்வான்ஸ் டாக்ஸ் முறையில் செலுத்த வேண்டும்.

நான்கு காலாண்டுகளில்...

இந்த வருமான வரியை நான்கு தவணைகளில் செலுத்தலாம். அதாவது, 15.6.21-க்குள் 15%, 15.9.21-க்குள் 45%, 15.12.21-க்குள் 75%, 15.3.22-க்குள் 100% செலுத்த வேண்டும்.

உதாரணமாக, ஒருவர் செலுத்த வேண்டிய வருமான வரி ரூ.1,00,000 என வைத்துக்கொண்டால், 15.6.21-க்குள் 15,000 ரூபாயையும், (அதாவது 15%) 15.9.21-க்குள் 30,000 ரூபாயையும் (அதாவது 15+30=45%), 15.12.21-க்குள் மேலும் 30,000 ரூபாயையும் (15+30+30=75%) அட்வான்ஸ் டாக்ஸாகச் செலுத்த வேண்டும். மீதமுள்ள 25,000 ரூபாயை 15.3.22-க்குள் செலுத்த வேண்டும்.

கூடுதல், குறைதல் இருந்தால்...

இவ்வாறு முதல் மற்றும் இரண்டாவது தவணை வரியைச் செலுத்திய பிறகு, செலுத்த வேண்டிய வரியில் கூடுதல் குறைதல் இருந்தால் அதற்குத்தகுந்தாற் போல் மூன்றாவது, நான்காவது தவணைத் தொகையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

அட்வான்ஸ் டாக்ஸ்... யார், எப்போது, எவ்வளவு செலுத்த வேண்டும்? வழிகாட்டும் விளக்கம்...

முந்தைய வரிதாரர்கள் செய்ய வேண்டியது...

சென்ற வருடம் அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்தியவர், அதே வரித் தொகையை நடப்பு ஆண்டிலும் கட்ட வேண்டும் என்பது கிடையாது. நடப்பு ஆண்டு வருமானம் அதிகமாக இருந்தால், அதற்கேற்ப வருமான வரியையும் அதிகமாக்கிச் செலுத்துவது அவசியம். அப்படிச் செய்யத் தவறும்பட்சத்தில் வருமான வரித் துறையிடம் இருந்து கட்ட வேண்டிய சரியான தொகை குறித்து அறிவுறுத்தல் வரும். வந்தபின் கட்டுவதைவிட, சரியான தொகையை நாமே கட்டிவிடுவது நல்லது.

புதிய வரிதாரர்கள் செய்ய வேண்டியது...

முதன்முதலாக அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்தப் போகிறவர்கள், ‘நாம் சொன்னதுதான் வருமானம்… நாம் கட்டியது தான் வரி’ என்ற மனோபாவம் தவிர்க்கவும். ஏனெனில், பல்வேறு முனைகளின் மூலம், ஒவ்வொரு வரிதாரரைப் பற்றியும், முழுமை யான மதிப்பீடுகளை வருமான வரித்துறை சேகரித்து வைத்துள்ளது. எஸ்.எம்.எஸ் வராவிட்டாலும் வரித்தகுதி உள்ளவர்கள் அட்வான்ஸ் டாக்ஸ் கட்டுவது அவசியம்.

சம்பளதாரர்கள் செய்ய வேண்டியது...

அட்வான்ஸ் டாக்ஸ் குறித்த எஸ்.எம்.எஸ் ஒருசில சம்பளதாரர் களுக்கும் வருமானவரித் துறை யிட மிருந்து வரக்கூடும். இவர்கள் டி.டி.எஸ் வருமான வரிக்கு உட்பட்டவர்கள் என்பதால், இந்தத் தகவலைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால், தன் பங்குக்கு வரி ஏதும் செலுத்த வேண்டியிருந்தால் அவசியம் செலுத்திவிட வேண்டும்!

50% கழிவு யாருக்கு?

வருமான வரிப்பிரிவு 44AD-யின்படி மற்றும் 44ADA-யின்படி யூக வருமான அடிப்படையில் அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்துபவர்கள் நான்கு தவணை அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்த வேண்டியதில்லை. ஒரே தவணையில் 15.3.22-க்குள் செலுத்தினால் போதுமானது. பிரிவு 44ADA-யின்டி, அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்தும் மருத்துவர் போன்றவர்களுக்கு மொத்த வருமானத்தில் 50% வருமானக் கழிவும் உண்டு. அதற்கு நிபந்தனையும் உண்டு. மூத்த குடிமக்களுக்கு விதி விலக்கு உண்டு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு