பிரீமியம் ஸ்டோரி

வருமான வரிக் கணக்கீடு என்பது எல்லோருக்கும் பொதுவானதல்ல. குடியிருப்பு நிலையைப் (Residential Status) பொறுத்து அது வேறுபடுகிறது. அந்த வகையில், வெளிநாட்டு வாழ் இந்தியர் (Non-Resident of India) என்கிற என்.ஆர்.ஜ-களுக்கு சில சிறப்புச் சலுகைகளையும் இந்திய வருமானவரித் துறை வழங்குகிறது. அவை குறித்துப் பார்க்கலாம்.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

என்.ஆர்.ஐ என்பவர் யார்..?

ஒருவர் இந்தியாவில் வசிப்பவரா (Resident), வசிக்காதவரா (Non-Resident) என்பது வசிப்பிடம் குறித்து, வருமானவரித் துறை அவ்வப்போது நிர்ணயிக்கும் தகுதியைப் பொறுத்து ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்குக் கீழ்க்கண்ட நிபந்தனைகளில் ஒன்று அல்லது இரண்டுக்குத் தகுதி பெறுவர், இந்தியாவில் வசிப்பவர் (Resident) என்கிற நிலையை அடைவார்.

1. ஓர் ஆண்டில் 182 நாள்களுக்குக் குறையாமல் இந்தியாவில் வசிப்பவர்.

2. ஓர் ஆண்டில் 120 நாள்களுக்குக் குறையாமல் இந்தியால் வசித்திருக்க வேண்டும் அல்லது முந்தைய நான்கு ஆண்டுக் காலத்தில் 365 நாள்களுக்கு மேல் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.

மேற்சொன்ன இந்த இரண்டு நிபந்தனைக்கும் உட்படாதவர் இந்தியாவில் வசிக்காதவர் (Non Resident) ஆவார். அதாவது, இது என்.ஆர்.ஐ தனிநபருக்கான நிபந்தனை. இந்துக் கூட்டு குடும்பத்தினருக்கு (HUF) நிபந்தனை வேறுபடும்.

எதற்கெல்லாம் வரிச் சலுகை உண்டு?

பொதுவாக, என்.ஆர்.ஐ-களின் கீழ்க்காணும் வருமானம் வரிக்கு உட்படாது.

 மத்திய அரசால் 01.06.2002-க்கு முன் வெளியிடப்பட்ட பாண்டுகள் மற்றும் காப்புறுதிகள் (Securities) மீதான வட்டி (மீட்சி செய்யப்பட்ட (Redemption) பாண்டுகளுக்கான பிரீமியம் உட்பட) வரிக்கு உட்படாது

 வெளிநாடு மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் மத்திய அரசு மற்றும் இந்திய நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி பணி செய்வோருக்கு சம்பளம் தவிர்த்த இனங்களுக்கு அரசு செலுத்திய வரி.

 தொழில்நுட்ப சேவைக்காக முகவர்களால் பணி அமர்த்தப்பட்ட என்.ஆர்.ஐ-களுக்கு வெளிநாட்டு வருமானம் (Income) மற்றும் சன்மானம் (Remuneration).

 அந்நியச் செலாவணியைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட பாண்டுகள் மீதான வட்டி (நிபந்தனை உண்டு).

 ரிசர்வ் வங்கி அனுமதியுடன் வெளிநாட்டு கரன்சி மூலம் வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்டுக்கான வட்டி.

 ஆஃப்ஷோர் பேங்கிங் (Offshore) யூனிட்டுகளில் 01.04.2005 அன்றோ, அதன் பிறகோ டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கான வட்டி.

 நிபந்தனைக்கு உட்பட்டு இந்திய கம்பெனிப் பங்குகள் வாங்கி, அதன்மூலம் கிடைக்கும் வருமானம். (நிபந்தனை உண்டு).

 நிதிச் சட்டம் VIII-வது (2016- ம் ஆண்டு) அத்தியாயத்தின் படி, சமமாக்கும் வரி வசூல் மூலமான (Equalization levy) எல்லா வருமானமும்.

என்.ஆர்.ஐ-களுக்கு என்னென்ன வரிச் சலுகைகள்?

இதர சலுகைகள்...

 தலைமை அலுவலகச் செலவுகளைக் கழித்துக் கொள்ளுதல் (Deduction for Head office Expenditure) 44c.

 நிரந்தர அமைப்புகளுடன் 31.03.2003-க்குப் பிறகு, செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கிடைக்கும் ராயல்டி (Royalty) மற்றும் தொழில்நுட்பக் கட்டணங்களிலிருந்து செலவு களைக் கழித்துக்கொள்ளும் வசதி (44DA) நிபந்தனை உண்டு.

 பாண்டுகள் மற்றும் ருபி டினாமினேட்டட் பாண்டுகளை (Rupee Denominated bonds or Masala bonds) அங்கீகரிக்கப்பட்ட ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளில் வெளிநாட்டுக் கரன்சியாக மாற்றும் வசதி (47Viiab).

 பாண்டுகளாக உள்ள முதலீட்டுச் சொத்தை இந்தியா வுக்கு வெளியே ஒரு என்.ஆர்.ஐ மற்றொரு என்.ஆர்.ஐ-க்கு மாற்றிக்கொள்ளலாம் (47 Via).

சிறப்பு வரிச் சலுகைகள்...

 ஒரிஜினல் ஃபண்டாக உள்ள முதலீட்டுத் சொத்தை ரிசல்ட்டன்ட் ஃபண்டாக (Resultant Fund) மாற்றிக்கொள்ள லாம். இது முதலீட்டு லாபம் என்ற வகையில் வரி விதிப்புக்கு உட்படாது.

 காலமுறைப்படி வட்டி தரும் அரசுக் காப்புறுதியை (Govt Security) இந்தியாவுக்கு வெளியே ஒரு என்.ஆர்.ஐ மற்றொரு என்.ஆர்.ஐ-க்கு மாற்றிக்கொள்ளலாம். இது மாற்றம் என எடுத்துக் கொள்ளப்படாது (47viib).

 பங்குகள், யூனிட்டுகள், பாண்டுகள், ஜி.டி.ஆர் (GDR) முதலானவற்றுக்கும் பிரிவு 47(Viiad), 47(Viia) ஆகியவற்றின்படி சலுகைகள் உண்டு.

 வேலைவாய்ப்பு மூலம் கிடைக்கக்கூடிய வரிக்குரிய வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால், டி.டி.எஸ் (TDS) பிடித்தம் கிடையாது.

 இந்தியாவில் வணிகம் செய்யும் என்.ஆர்.ஐ-கள் வணிக வருமானத்துக்கு வரியை நிர்ணயிக்கும்படி வரி விதிப்பு அதிகாரிக்கு விண்ணப்பித்து சலுகை பெறலாம்.

 அந்நியச் செலாவணி மூலமான சொத்துகள் தரும் வருமானம், அந்நிய செலாவணி மாற்றி கிடைக்கும் நீண்ட கால முதலீட்டு லாபம் மட்டுமே வருமானமாக உள்ள என்.ஆர்.ஐ-க்கு வருமான வரி தாக்கல் செய்வதில் விலக்கு உண்டு.

ஸ்பெஷல் வருமான வரி விகிதம்

 நீண்ட கால முதலீட்டு ஆதாயத்துக்கு 20% வரி (112(l)(c).

 மாற்றம் செய்யப்பட்ட பட்டியலிடப்படாத (Transferred Unlisted Securities) காப்புறுதி வடிவிலான நீண்ட கால முதலீட்டுக்குச் சொத்துக்கு இண்டக் சேஷன் பெனிஃபிட் இல்லாமல் கிடைக்கும் நீண்ட கால முதலீட்டு லாபத்துக்கு 10% வரி.

 மாற்றம் செய்யப்பட்ட (Transferred) பட்டிய லிடப்பட்ட காப்புறுதிகள் அல்லது யூனிட்டுகள் அல்லது ஜீரோ கூப்பன் பாண்டுகள் முதலானவற்றுக்கு இண்டக்சேஷன் பெனிஃபிட் இல்லாமல் கிடைக்கும் நீண்ட கால முதலீட்டு லாபத்துக்கான சலுகை வரி 10% வரி (112(L)(c).

 அந்நிய கரன்சி மூலம் வாங்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 20% வரி (115(l)(a) (iii).

 தேதி 31.03.1976-க்குப் பிறகு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ராயல்டி மற்றும் தொழில்நுட்ப சேவை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 25% வரி (விதிவிலக்கு உண்டு)(115(l)(b).

 பிறநாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாற்றம் செய்யப்பட்டு வெளிநாட்டு கரன்சி மூலம் வாங்கப் பட்ட யூனிட்டுகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 10% வரி (115AB).

 பிரிவு 111A-ல் குறிப்பிட்டுள்ள வெளிநாட்டு நிறுவன முதலீட்டின் (FII) மூலம் கிடைக்கும் குறுகிய கால முதலீட்டு லாபத்துக்கு 30% வரி.

 மேற்கண்டவற்றில் மூலமான நீண்ட கால முதலீட்டு லாபத்துக்கு 10% வரி (115AF(b).

 அந்நியச் செலாவணி சொத்து மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 20% வரி (115E).

 டிவிடெண்டுக்கு 20% வரி (வரி 115 A(l)(a) (I).

 அரசு அல்லது இந்திய நிறுவனம் வெளிநாட்டு கரன்சி மூலம் பெற்ற கடனுக்கான வட்டிக்கு 20% வரி (115(l)(a)(ii).

இந்த வரி விகிதங்களை என்.ஆர்.கள் அனைவரும் அறிந்துகொள்வது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு