Published:Updated:

நிதி ஆண்டு 2021-22 டாக்ஸ் ஃபைலிங்... யாருக்கு எந்தப் படிவம்?

டாக்ஸ் ஃபைலிங்
பிரீமியம் ஸ்டோரி
டாக்ஸ் ஃபைலிங்

டாக்ஸ் ஃபைலிங்

நிதி ஆண்டு 2021-22 டாக்ஸ் ஃபைலிங்... யாருக்கு எந்தப் படிவம்?

டாக்ஸ் ஃபைலிங்

Published:Updated:
டாக்ஸ் ஃபைலிங்
பிரீமியம் ஸ்டோரி
டாக்ஸ் ஃபைலிங்

நிதி ஆண்டு (Financial Year - FY) 2021-22 முடிந்து, வரிக் கணக்குத் தாக்கலுக்கான மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year) 2022-23 ஆரம்பித்துவிட்டது. மத்திய நேரடி வரிகள் வாரியமும் (Central Board of Direct Taxes -CBDT) வரிக் கணக்குத் தாக்கலுக்கான படிவங்களை (Income Tax Return Form) அறிவித்துவிட்டது.

டாக்டர் அபிஷேக் முரளி, ஆடிட்டர் & பிரசிடென்ட், 
அகில இந்திய 
வரி செலுத்துவோர் சங்கம்
டாக்டர் அபிஷேக் முரளி, ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்

யார் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்?

ஒரு தனிநபரின் மொத்த வருமானம் (Gross Total Income), நிதியாண்டில் ரூ. 2.5 லட்சத்தைத் தாண்டும்போது அவர் கட்டாயம் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இங்கே மொத்த வருமானம் என்பது சம்பளம், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி, டிவிடெண்ட் வருமானம், மூலதன ஆதாயம் எல்லாம் சேர்ந்ததாகும்.

இவை தவிர, ஒரு நிதி ஆண்டில் மின்சாரக் கட்டணம் ரூ.1 லட்சத்துக்குமேல் கட்டி இருந்தால், வெளிநாடு சுற்றுலாவுக்கு ரூ.2 லட்சம் செலவு செய்திருந்தால், ரூ.25,000-க்கு மேல் டி.டி.எஸ் பிடிக்கப்பட்டிருந்தால், வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சத்துக்கு மேல் பணப் பரிமாற்றம் இருந்தால், ரூ.60 லட்சத்துக்குமேல் வணிகம் தொடர்பான விற்பனை இருந்தாலும் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

ஒரு தனிநபர் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியிருந்தால், அவர் சரியான ஐ.டி.ஆர் படிவம் பயன்படுத்தபடுவதை உறுதி செய்வது முக்கியமாகும்.

யாருக்கு எந்தப் படிவம்..?

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கு ITR 1 தொடங்கி ITR 7 வரை மொத்தம் ஏழு படிவங்கள் உள்ளன. இந்தப் படிவங்களில் யார், எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என சி.பி.டி.டி அறிவித்துள்ளது. கூடவே யார் எந்தப் படிவத்தைப் பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவித்திருக்கிறது.

சரியான ஐ.டி.ஆர் படிவத்தைப் பயன் படுத்தாவிட்டால், வரிக் கணக்கு குறைபாடுள்ள வரிக் கணக்குத் தாக்கலாகக் (Defective return) கருதப்படும்.

ஐ.டி.ஆர் – 1 சஹஜ் (ITR-1 SAHAJ)

யார் பயன்படுத்தலாம்?

* சம்பளம் / பென்ஷன் வருமானம் கொண்ட இந்தியர்கள்.

* ஒரே ஒரு வீடு மூலம் வாடகை வருமானம் மற்றும் வட்டி வருமானம் போன்ற இதர வருமானம் கொண்டவர்கள்.

* விவசாய வருமானம் ரூ.5,000 வரை.

* அனைத்து வருமானங்களும் சேர்ந்து, நிதி ஆண்டில் ரூ. 50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

* மேலும், வரிதாரரின் துணைவர் (கணவர் / மனைவி), பிள்ளைகளின் வருமானத்தை இணைத்தல் (Clubbing of Income) இருந்தால்.

யார் பயன்படுத்த முடியாது?

* வெளிநாட்டு வாழ் இந்தியர் (NRI).

* இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் (HUF).

* நிதி ஆண்டில் ரூ. 50 லட்சத்துக்குமேல் உள்ள இந்தியர்கள்.

* நிறுவனம் ஒன்றின் இயக்குநர் (Director).

* பட்டிலிடப்படாத நிறுவனங் களின் பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்கள்.

* வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்திவரும் நிலையில் முந்தைய ஆண்டு வட்டிக்கான வரிக் கழிவில் ரூ. 2 லட்சத்துக்கு மேற்படும் தொகையை அடுத்து வரும் ஆண்டுகளுக்குக் கொண்டு செல்பவர்கள்.

* ஒன்றுக்கு மேற்பட்ட வீடு களிலுருந்து வாடகை வருமானம், மூலதன ஆதாயம் உள்ள இந்தியக் குடிமக்கள்.

* லாட்டரி/ குதிரைப் பந்தயம் மூலம் கிடைத்த இதர வருமானம்.

* இந்தியாவுக்கு வெளியே சொத்து இருந்தால்.

ஐ.டி.ஆர் 2

யார் பயன்படுத்தலாம்?

* தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர்.

* சம்பளம் / பென்ஷன் வருமானம்.

* ஒன்றுக்கு மேற்பட்ட வீடு களிலிருந்து வாடகை வருமானம்.

* இதர வருமானங்கள் (லாட்டரி/ குதிரைப் பந்தயம் மூலம் கிடைத்த இதர வருமானம் போன்றவை).

* சொத்து (வீடு, மனை), நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம் மூலமான குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயங்கள்.

* வெளிநாடுகளில் சொத்து மற்றும் வெளிநாட்டு நிறுவனப் பங்கு முதலீடு மூலமான வருமானம்.

* விவசாய வருமானம் ரூ.5,000-க்குமேல் பெறுகிறவர்கள்.

* நிதி ஆண்டில் ரூ. 50 லட்சத்துக்கு மேல் மொத்த வருமானம் கொண்டவர்கள்.

* நிறுவனத்தில் இயக்குநர்.

* பட்டியலிடப்படாத நிறுவனப் பங்குகளில் முதலீடு.

யார் பயன்படுத்த முடியாது?

வணிகம் மற்றும் நிபுணத்துவ (Profession) வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர்.

ஐ.டி.ஆர் 3

யார் பயன்படுத்தலாம்?

வணிக வருமானம் மற்றும் நிபுணத்துவம் மூலமான வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர்.

யார் பயன்படுத்த முடியாது?

வணிக வருமானம் மற்றும் நிபுணத்துவம் மூலமான வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் அல்லாதவர்கள்.

ஐ.டி.ஆர் 4 (Sugam)

வணிக வருமானம் / நிபுணத்துவம் மூலமான வருமானத் துக்கு அனுமான அடிப்படையில் (Presumptive Basis) கணக்கிட்டு வரி கட்டுபவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்.

ஐ.டி.ஆர் 5

இந்தப் படிவத்தைக் கூட்டு நிறுவனங்கள் (Firms) பயன்படுத்த வேண்டும்.

ஐ.டி.ஆர் 6

கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தப் படிவத்தைப் பயன் படுத்த வேண்டும்.

ஐ.டி.ஆர் 7

வரி விலக்கு பெறும் என்.ஜி.ஓ-கள், அறக்கட்டளைகள் (Trusts) இந்தப் படிவத்தை உபயோகப்படுத்த வேண்டும்.

இப்போது உங்களுக்கு யார் எந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது தெளிவாகப் புரிந்ததா?

நிதி  ஆண்டு  2021-22  டாக்ஸ் ஃபைலிங்... யாருக்கு  எந்தப் படிவம்?
நிதி  ஆண்டு  2021-22  டாக்ஸ் ஃபைலிங்... யாருக்கு  எந்தப் படிவம்?

கெடுதேதி தாண்டினால்..!

வருமான வரிக் கணக்கை கெடு தேதிக்குள் (Due Date) தாக்கல் செய்யப்படாவிட்டால், ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும், மேலும், இந்தத் தேதி முடிந்து ஐ.டி.ஆர் படிவத்தைத் தாக்கல் செய்வதாக இருந்தால், அதற்கு முன்பு அபராதம் செலுத்த வேண்டும். வருமான வரி பாக்கி எதுவும் இல்லை என்றாலும், இந்த அபராதத்தைக் கட்ட வேண்டும். மேலும், கெடுதேதி தாண்டி வரிக் கணக்கை தாக்கல் செய்யும்போது, மூலதன இழப்பை அடுத்துவரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் சென்று லாபதத்தில் ஈடுகட்ட முடியாது.

பழைய வரி முறை அல்லது புதிய வரி முறை எதுவாக இருந்தாலும், 2022 ஜுலை 31-ம் தேதிக்குள் தனிநபர்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்தத் தேதிக்குள் வரித் தாக்கல் செய்யாமல் இருந்தால், புதுப்பிக்கப்பட்ட வரிக் கணக்கை (Updated ITR) இரண்டு ஆண்டுகள் வரை செய்யலாம். ஆனால், அபராதம் கட்டுவதுடன் கூடுதல் வரியும் (25% முதல் 50% வரை), வட்டியும் கட்ட வேண்டி வரும். புதுப்பிக்கப்பட்ட வரிக் கணக்குத் தாக்கல் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள: https://bit.ly/3GOFuN2

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism