பிரீமியம் ஸ்டோரி

மிகவும் நெருங்கி வந்துவிட்டது வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 30.9.2021. ஒட்டுமொத்தமாக அனைவரும் கடைசி நேரத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்து இணையதளத்தைத் திணற விடாமல் இப்போதே தாக்கல் செய்யத் தொடங்கிவிடுவது நல்லது. அதற்கான கடைசி நேர சில ‘டிப்ஸ்’ இனி...

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

யாரெல்லாம் வரித் தாக்கல் செய்ய வேண்டும்?

சம்பளதாரர்கள், பென்ஷன்தாரர்கள், சுயதொழில் செய்வோர், சிறு வணிகர்கள் அனைவருக்கும் வரிப்பிரிவு 80சி முதல் 80யு வரை அவரவருக்குரிய வரிச் சலுகைகளை வருமான வரித்துறை வழங்குகிறது. இந்தச் சலுகைகளைக் கழிப்பதற்கு முந்தைய வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக உள்ள 60 வயதுக்கு உட்பட்ட அனைவரும் வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்டவர் எனில், மேற்கண்ட வரிச் சலுகையைக் கழிப்பதற்கு முந்தைய வருமானம் ரூ.3 லட்சம் இருந்தாலும் 80 வயதினரின் சலுகையைக் கழிப்பதற்கு முந்தைய வருமானம் ரூ.5 லட்சம் இருந்தாலும் கட்டாயமாக வரித் தாக்கல் செய்தாக வேண்டும்.

2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தாலும்...

மேற்கண்ட சலுகைகளைக் கழிப்பதற்கு முந்தைய வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக இருப்பவர்களும் வரித்தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். பல்வேறு நடப்புக் கணக்குகளில் டெபாசிட் செய்த மொத்தத் தொகை ரூ.1 கோடிக்குமேல் இருந்தாலோ, தனக்காகவோ, பிறருக்காகவோ வெளிநாட்டுப் பயணத்துக்கு செய்த செலவுத் தொகை ரூ.2 லட்சத்துக்கும் மேல் இருந்தாலோ, மின் பயன்பாட்டுக்கு ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாகக் கட்டணம் செலுத்தியிருந்தாலோ வரித் தாக்கல் செய்வது அவசியம். பழைய வரித்திட்டத்தின்படி, ரூ.2.5 லட்சம் என்பது 60 வயதினருக்கு ரூ.3 லட்சமாகவும், 80 வயதினருக்கு ரூ.5 லட்சமாகவும் இருக்கும். புதிய வரித் திட்டத்தின்படி, மேற்கண்ட பணப் பரிவர்த்தனை செய்திருந்தால் எல்லா வயதினரும் அவர்களது வருமானம் 2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தாலும் வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

வரிக் கணக்கு தாக்கல்... கடைசி நேர டென்ஷன் வேண்டாமே..!

மூத்த குடிமக்களுக்கு சலுகை கிடையாது...

புதிய வரித் திட்டத்தில் வரிக்கு உட்படாத வருமானம் ரூ.3 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் என்ற சலுகை மூத்த குடிமக்களுக்குக் கிடையாது. எந்த வயதினராக இருந்தாலும் ரூ.2.5 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு வரி கணக்கிடப்படும். ஆனால், ரூ.5 லட்சத்துக்கு உட்பட்ட வருமானத்துக்கு 87-ன்படி அதிகபட்ச வரித் தள்ளுபடி ரூ.12,500 கிடைக்கும்.

படிவம் 26AS-ல் வரி விடுபாடு...

படிவம் 26AS-ல் வரி விடுபாடு இருக்கலாம். அதாவது, வருமான வரியானது சம்பளம் தரும் அதிகாரியால் பிடித்தம் செய்யப்பட்ட வரியும் விடுபட்டிருக்கலாம். வரிதாரர் நேரடியாக வங்கியில் செலுத்திய வரித்தொகை விடுபட்டிருக்கலாம். வரிதாரர் செலுத்திய வரி விடுபாட்டுக்கு முக்கிய காரணம், வங்கி செலான் மதிப்பீட்டு ஆண்டைத் தவறாகக் குறிப்பிடுவதுதான். அதாவது, கடந்த 2020-21-ம் நிதியாண்டுக்கு வரி செலுத்துபவர் AY என்ற இடத்தில் 2021-22 என்று குறிப்பிட வேண்டும். 2020-21 என மதிப்பீட்டு ஆண்டுக்கு பதில் நிதியாண்டைத் தவறாகக் குறிப்பிட்டிருந்தால், நடப்பு ஆண்டுக்கான படிவம் 26AS-ல் வரிதாரர் செலுத்திய வரி, கணக்கில் சேர்ந்திருக்காது. வங்கியை அணுகி இதைத் திருத்திக்கொள்ளலாம்.

சம்பளம் தரும் அதிகாரி மூலம் செலுத்தப் பட்ட வரி, வரிதாரரின் 26AS-ல் இடம்பெற வில்லை எனில், வரிப் பிடித்தம் செய்த அதிகாரியை அணுகி திருத்தம் செய்து கொள்ளலாம். வங்கியில் திருத்தம் செய் வதற்கான காலக்கெடு முடிந்து போயிருந்தால், மதிப்பீட்டு அதிகாரியை அணுகியும் திருத்திக் கொள்ளலாம். மதிப்பீட்டு ஆண்டு, பான் எண், தொகை, முதலானவற்றைத் திருத்தம் செய்து கொள்ளலாம். ஆனால், பெயர் திருத்தம் செய்ய முடியாது.

அரசுக் கருவூலம் மூலம் சம்பளம் பெறு பவருக்கு 2020-21-ம் ஆண்டுக்கான வருமான வரியை அவர் மார்ச் 2021-க்குப் பிறகு, வாங்கிய சம்பளத்தில் பிடித்தம் செய்திருந்தாலும் அந்த வருமான வரி இப்போதைய படிவம் 26 AS-ல் இடம்பெற்றிருக்காது. 2021-22-ம் நிதியாண்டு கணக்கில் சேர்ந்திருக்கும். இதை மாற்றுவது எளிதல்ல. எனவே, சுயமதிப்பீட்டு வரியைச் செலுத்திவிட்டு மார்ச் 2021-க்குப் பிறகு, வாங்கிய சம்பளத்தில் பிடித்தம் செய்த வருமான வரியை 2021-22-க்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வரித்திட்ட மாற்றத்துக்குக் கடைசி தேதி

புதிய வரித் திட்டத்தில் இருந்து பழைய வரித் திட்டத்துக்கும், பழைய வரித் திட்டத்தில் இருந்து புதிய வரித் திட்டத்துக்கும் மாறிக் கொள்வதற்கான கடைசி தேதி 30.09.2021 என்பதை மறக்க வேண்டாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு