பிரீமியம் ஸ்டோரி

முடிந்த 2020-21-ம் நிதி ஆண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2021-22) வரிக் கணக்கு தாக்கல் கெடுதேதி கோவிட் 19 பாதிப்பு காரணமாக 2021 ஜூலை 31 என்பது 2021 செப்டம்பர் 30-க்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நிதி ஆண்டு 2020-21-க்காக ஐ.டி.ஆர் 1, 2 மற்றும் 4 புதிய படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்டுள்ளது.

வரிக் கணக்கு தாக்கல் செய்யும் தனிநபர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய எட்டு அம்சங்களை இனி பார்ப்போம்.

ஆர்.ஜெகதீஷ் 
ஆடிட்டர், தேனி
ஆர்.ஜெகதீஷ் ஆடிட்டர், தேனி

1. பழைய வரி முறை, புதிய வரி முறை: எது லாபம்?

2019-20–ம் நிதி ஆண்டில் புதிய வரி முறை (New Tax Regime) கொண்டு வரப்பட்டது. இதை ஒருவர் விருப்பத்தின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ளலாம். புதிய முறையில் வரிச் சலுகைக்காக முதலீடு மற்றும் செலவுகள் எதையும் வரிச் சலுகை மற்றும் வரிக் கணக்கு தாக்கலுக்காகக் காட்ட வேண்டாம். இந்த முறையில், பழைய முறையுடன் ஒப்பிடும் போது குறைவான சதவிகிதம் வரி விதிக்கப் படுகிறது. அட்டவணை 1 மற்றும் அட்டவணை 2-ஐ பார்த்தால் இது எளிதில் விளங்கும்.

வீட்டுக் கடன் திரும்பச் செலுத்தும் அசல் மற்றும் வட்டி, பிள்ளைகள் கல்விச் செலவு, மருத்துவக் காப்பீட்டு பிரீமியம், புதிய பென்ஷன் திட்ட (என்.பி.எஸ்) முதலீடு போன்றவை ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில், பழைய வரிமுறையில் குறைவான வரி கட்ட வேண்டிவரும். அப்படி இல்லாதபட்சத்தில், புதிய வரி முறை லாபகரமாக இருக்கும். மேலும், அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு புதிய வரிமுறை லாபகரமாக இருக்கும் எனலாம். இதை நீங்கள் கீழ்க்கண்ட வரிக் கணக்கு கால்குலேட்டர் மூலம் தெரிந்துகொள்ளலாம். https://www.vikatan.com/income-tax-calculator?b4

சம்பளதாரர்கள் நிதி ஆண்டின் ஆரம்பத்தில் தங்களின் அலுவலகத்தில் எந்த முறையைப் பின்பற்றுகிறீர்கள் என்று சொல்லியிருந்தாலும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது, எது லாபகரமாக இருக்கிறதோ, அந்த முறையைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.

2. முன்கூட்டியே நிரப்பப்பட்ட ஐ.டி.ஆர் படிவங்கள்...

இந்த ஆண்டு முதல், வரிதாரரின் தனிப்பட்ட விவரங்கள், சம்பள வருமானம், டிவிடெண்ட் வருமானம், வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயம் ஆகியவை ஐ.டி.ஆர் படிவத்தில் ஆன்லைனில் முன் கூட்டியே (Pre-fill) நிரப்பப் பட்டிருக்கும். இந்த விவரங்கள் ஏற்கெனவே டி.டி.எஸ் பிடிக்கப் பட்ட விவரங்கள் அடங்கிய 26 ஏஎஸ் படிவத்தில் ஆன்லைனில் முன்கூட்டியே நிரப்பப்பட்டிருப் பதாகும். அந்த வகையில், வரிதாரரின் அடிப்படை விவரங்கள் ஏற்கெனவே வரித்துறைக்குச் சென்றிருப்பதால், வருமான வரியைத் தவிர்ப்பது முடியாத விஷயமாக இருக்கும்.

வரிதாரர்கள் முன்கூட்டியே நிரப்பப்பட்ட விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், ஏதாவது தகவல்கள் விடுபட்டிருந்தாலும் அவற்றையும் நிரப்பி வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியமாகும்.

ஏற்கெனவே, பிடிக்கப்பட்ட டி.டி.எஸ் விவரங்கள், 26 ஏஎஸ் படிவத்தில் வரவு வைக்கப்பட்டிருக் கிறதா என்பதைச் சரிபாருங்கள். சம்பளதாராக இருந்து, இதில் ஏதாவது விடுபட்டிருந்தால் உங்கள் நிறுவனத்துக்கு உடனடியாகத் தெரிவித்து சரி செய்யுங்கள். இல்லை எனில், கூடுதல் வரி கட்ட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

2020-21 வரிக் கணக்கு தாக்கல்: 
கவனிக்க வேண்டிய 8 முக்கிய அம்சங்கள்..!

3. வரி பாக்கியைச் செலுத்துங்கள்...

வரிச் சலுகைகளுக்கான தொகையை, உங்களின் மொத்த வருமானத்திலிருந்து கழித்தால் மொத்த வரிக்கு உட்பட்ட வருமானம் (Total Taxable Income) கிடைக்கும். இந்த நிலையில், நீங்கள் வருமான வரி கட்ட வேண்டும் எனில், அதைக் கட்டிவிடுங்கள். இதேபோல், புதிய வரிமுறையைப் பயன்படுத்தினாலும் வரி பாக்கி இருக்கிறதா என்பதைக் கணக்கிட்டு வரியைக் கட்டிவிடுங்கள். அப்போதுதான் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். வரியைத் தாமதமாகக் கட்டும்பட்சத்தில் அதற்கான வட்டியையும் சேர்த்துக் கட்ட வேண்டும். இந்த வட்டி மாதத்துக்கு 1% என்பதாக இருக்கிறது.

4. நிதி ஆண்டில் வேலை மாற்றம்

நிதி ஆண்டில் (ஏப்ரல் முதல் மார்ச்) வேலை மாறியிருக்கும் பட்சத்தில் அந்த விவரத்தை அதாவது முந்தைய நிறுவனத்தில் பெற்ற சம்பள விவரங்களைத் தற்போதைய நிறுவனத்தில் சொல்லி, ஒருங்கிணைந்த படிவம் 16 மற்றும் 12பி.ஏ (12BA) படிவங்களைத் தற்போதைய நிறுவனத்திடமிருந்து பெற வேண்டும். இதன் அடிப்படை யில்தான் நிதி ஆண்டுக்கான வரிக் கணக்கு தாக்கலை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நேரங்களில் டி.டி.எஸ் முழுமையாகப் பிடிக்கப்பட வில்லையெனில், கட்ட வேண்டிய வரியைக் கட்டி விட்டுதான் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

5. சரியான வரிக் கணக்கு படிவத்தைத் தேர்வு செய்தல்

ஒருவரின் குடியிருப்பு நிலை (இந்தியர், வெளிநாட்டு வாழ் இந்தியர்) மற்றும் வருமானம் வந்த விதத்தைப் பொறுத்து சரியான வரிக் கணக்கு தாக்கல் (ITR - Income Tax Return) படிவத்தைத் தேர்வு செய்வது அவசியம்.

உதாரணமாக, ஐ.டி.ஆர் 1 (ITR-1) படிவத்தை நிதி ஆண்டில் சம்பளம் மூலம் ரூ.50 லட்சம் வரையிலான மொத்த வருமானம், ஒரு வீடு மற்றும் இதர வருமானம் கொண்ட இந்தியக் குடிமகன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்தப் படிவத்தை என்.ஆர்.ஐ-களோ, மூலதன ஆதாயம் உள்ள இந்தியக் குடிமக்களோ பயன்படுத்தக் கூடாது. அவர்கள் ITR-2 படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்.

2020-21 வரிக் கணக்கு தாக்கல்: 
கவனிக்க வேண்டிய 8 முக்கிய அம்சங்கள்..!

6. சொத்து, முதலீட்டு விவரங்கள்

ஐ.டி.ஆர் படிவத்தில் கீழ்க் கண்ட சொத்து விவரங்கள் மற்றும் நிதி சார்ந்த முதலீட்டு விவரங்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

* அனைத்து வங்கிக் கணக்குகளின் விவரம்.

* பட்டியலிடப்படாத நிறுவனப் பங்குகளின் விவரங்கள்.

* இந்திய அல்லது வெளிநாட்டு நிறுவனங்களில் இயக்குநராக இருந்தால், அது தொடர்பான விவரம்.

* சொத்துகள், பொறுப்புகள் பட்டியல்: மொத்த வருமானம் ரூ. 50 லட்சத்தைத் தாண்டும் போது, சொத்துகள் (மனை, கட்டடம், அசையும் சொத்துகள் போன்றவை), நிதி சார்ந்த சொத்துகள் (வங்கி டெபாசிட்டுகள், நிறுவனப் பங்குகள் / பத்திரங்கள், கையில் இருக்கும் ரொக்கப் பணம், மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கடன்கள்

* வெளிநாட்டுச் சொத்துகள் தொடர்பான விவரம்

இந்தியாவில் வசிக்கும் வரிதாரர், இந்தியாவுக்கு வெளியே வைத்திருக்கும் சொத்து விவரங் களைக் (உரிமையாளர் மற்றும் பயனாளி) கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

2020-21 வரிக் கணக்கு தாக்கல்: 
கவனிக்க வேண்டிய 8 முக்கிய அம்சங்கள்..!
2020-21 வரிக் கணக்கு தாக்கல்: 
கவனிக்க வேண்டிய 8 முக்கிய அம்சங்கள்..!

7. வரி விலக்குள்ள வருமானங்கள்

வரி செலுத்துவோர் வரி விலக்குப் பெறும் வருமானமான விவசாய வருமானம், மைனர் குழந்தைகளின் (Minor Child) வருமானம், இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, வரி பிடிக்கப்படாத வருமானம் போன்றவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

8. கட்டாய வரிக் கணக்கு தாக்கல்...

ஒருவரின் வரிக்கு உட்பட்ட ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத் துக்குக் கீழே இருந்தாலும், கீழ்க்கண்ட மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்று நடந்திருந்தாலும் வரிக் கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம். அவை, 1. நிதி ஆண்டில் மின் கட்டணமாக ரூ.1 லட்சத்துக்கு மேல் செலுத்தி இருந்தால். 2. வெளிநாட்டு சுற்றுலாவுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் செலவு செய்திருந்தால். 3. ஒன்றுக்கு மேற்பட்ட நடப்பு வங்கிக் கணக்குகளில் நிதி ஆண்டில் ரூ.1 கோடிக்குமேல் பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால்.

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு முன் இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு செயல்பட்டால், வரித் தாக்கலை விரைவாக சிக்கல் இல்லாமல் செய்ய முடியும் என்பதில் சந்தேகம் இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு