Published:Updated:

சிறு வணிகர்கள் ஆடிட் செய்யாமலே வரி கட்டலாம்! இந்தச் சலுகையைத் தெரியுமா?

வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வரி

T R A D E R T A X

வணிகர்கள் பொதுவாக, கொள்முதல், விற்றுமுதல், வாடகை, கூலி, சுங்கவரி போன்ற பல்வேறு இனங்களுக்கு கணக்குப் புத்தகங்களைப் பராமரிப்பது அவசியமாக இருக்கும். கணக்கு பராமரிப்பது மட்டுமன்றி, அந்தக் கணக்குகளை ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்வதும் அவசியமாக இருக்கும். 

இந்தக் கணக்கு பராமரிப்பு மற்றும் ஆடிட்டர் தணிக்கை ஆகிய இரண்டு சுமைகளும் இல்லாமல், யூக அடிப்படையில் (Presumptive basis) வருமானத்தைக் கணக்கிட்டு அதற்கான வருமான வரியைச் செலுத்துவதற்கு வருமான வரித்துறை வகுத்துள்ள எளிமையான வருமான வரிச் சட்டம்தான் பிரிவு 44AD.

சிறு வணிகர்கள் ஆடிட் செய்யாமலே வரி கட்டலாம்! இந்தச் சலுகையைத் தெரியுமா?

வருடாந்தர விற்றுமுதல் (turn over) ரூ.2 கோடிக்குள் உள்ள சிறு வணிகர்கள் பிரிவு 44AD-யின்படி வருமானம் கணக்கிட்டு வரி செலுத்தலாம். 

யூக வருமான அடிப்படையில் வரிக் கணக்கீடு என்பது, ஓராண்டு முழுவதும் கிடைக்கப் பெற்ற வணிக வரவு தொகையில் 8 சதவிகிதத்துக்கு மட்டுமே வருமான வரி செலுத்தினால் போதும்.

மேலும், வணிக வரவுக்கான பணப் பரிவர்த்தனைகள் கோடிட்ட காசோலை,  வங்கி வரைவு,  மின்னணுப் பரிவர்த்தனைகள் மூலம் வரப்பெற்று இருந்தால், மொத்த வணிக வரவும் தொகையில் 6%  மட்டுமே வரி செலுத்தினால் போதும்.