நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டில், வரும் 2020-21-ம் நிதியாண்டிலிருந்து டிவிடெண்ட் விநியோக வரி நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் என்னென்ன நன்மைகள், பாதிப்புகள் ஏற்படும் என்று பார்ப்போம்.

டிவிடெண்ட் வரி என்றால்...
ஒரு நிறுவனம், ஒரு நிதியாண்டில் அதன் நிகர லாபத்தில் விருப்ப ஈவுத் தொகை (Preferred Dividends) தந்ததுபோக, மீதமுள்ள நிகர லாபத்தை அந்த நிறுவனத்தின் பங்குகளின் எண்ணிக்கையுடன் வகுத்தால் கிடைப்பது அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் பங்கு வருமானம் (Earning Per Share). அந்தப் பங்கு வருமானத்திலிருந்து அந்த நிறுவனம் எவ்வளவு டிவிடெண்ட் தரப்போகிறது என்பதைப் பொறுத்து, அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் டிவிடெண்ட் தொகை அமையும். ஒரு நிறுவனம் தரும் டிவிடெண்ட் சதவிகிதம் ஒரு பங்கின் முகமதிப்பின் அடிப்படையில்தான் சொல்லப்படும். உதாரணமாக, ஒரு நிதியாண்டில் ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கின் இ.பி.எஸ் ரூ.100. இதற்கு அந்த நிறுவனம் 50% டிவிடெண்ட் தருகிறது என்றால், இப்போது அந்த நிறுவனம் தரும் ஒரு பங்குக்கான டிவிடெண்ட் ரூ.50. (ஒரு பங்கின் நிகர லாபமான ரூ.100-ல் 50% டிவிடெண்ட் என்பது ரூ.50). இதை, `ஈவுத் தொகை செலுத்தும் விகிதம்’ (Dividend Payout Ratio) என்று சொல்கிறார்கள்.
வரி செலுத்தத் தேவையில்லை!
இப்போது நீங்கள் அந்த நிறுவனத்தின் 100 பங்குகளை வைத்திருந்தால், உங்களுக்கு ரூ.5,000 டிவிடெண்டாகக் கிடைக்கும் (100 x ரூ.50 = 5,000). இந்தத் தொகைக்கு நீங்கள் வருமான வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பதுதான் நிதியாண்டு 2019-20 முடியும் வரை இருந்த நிலைமை. உங்களுக்கு பதிலாக, டிவிடெண்ட் பெறும் அனைத்துப் பங்குதாரர்களுக்கும் சேர்த்து அந்த நிறுவனமே டிவிடெண்ட் விநியோக வரியைச் செலுத்திவிடும். இது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 115-O-வின் கீழ்வரும். இது இப்போது 20.56 சதவிகிதமாக உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுவே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பங்கு சார்ந்த திட்டங்களுக்கு 11.56 சதவிகிதமாகவும், கடன் சார்ந்த ஃபண்ட் நிதித் திட்டங்களுக்கு 29.12 சதவிகிமாகவும் இருக்கிறது. இது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 115-R-ன்கீழ்வரும். இந்த டிவிடெண்ட் விநியோக வரியைச் செலுத்திவிட்டு, பங்குதாரர்களுக்கான டிவிடெண்டை நிறுவனம் வழங்கு வதால், பங்குதாரர்கள் அந்த டிவிடெண்டைப் பெறும்போது வரிச் செலுத்தத் தேவையில்லை என்பது 31 மார்ச், 2020 வரை இருக்கும் நிலைமை.
நிறுவனங்களுக்கு வரி இல்லை!
தற்போது டிவிடெண்ட் விநியோக வரியிலிருந்து நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இனி நிறுவனங்கள் தங்கள் பங்குதாரர்களுக்கு வழங்கும் டிவிடெண்டுக்கான டிவிடெண்ட் விநியோக வரியைச் செலுத்தத் தேவையில்லை. அதற்கு பதிலாக டிவிடெண்ட் பெறும் பங்குதாரர்கள், தங்கள் மொத்த வருமானத்தில் இந்த டிவிடெண்ட் வருமானத்தையும் சேர்த்துக்கொண்டு வரி செலுத்த வேண்டும் என்று மாற்றப்பட்டிருக்கிறது.
ஒரே வருமானத்துக்கு மூன்று முறை வரி விதிக்கப்பட்டது. அந்தக் குளறுபடி இப்போது நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபாதிப்பு எதுவும் இல்லை!
இது 20% வரி வரம்பில் உள்ளவர்களுக்கு பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது. ஏனெனில், டிவிடெண்ட் விநியோக வரியை (20.56%) நிறுவனங்களே செலுத்திவிடுகின்றன. ஏறக்குறைய அதே சதவிகிதத்தை இப்போது பங்குதாரர்கள் வரியாகச் செலுத்த வேண்டும். இதுவே கடன் சார்ந்த ஃபண்ட் திட்டங்கள் எனில், 29.12% டிவிடெண்ட் விநியோக வரி செலுத்தப்படுவதால், இந்த மாற்றம் 20% வரி வரம்பில் உள்ளவர்களை பாதிக்காது.

வரி செலுத்த வேண்டும்!
ஆனால், ரூ.20 லட்சத்துக்குமேல் வருமானம் உள்ளவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.காரணம், இந்த டிவிடெண்ட் வருமானத்தை அவர்களின் மொத்த வருமானத்துடன் சேர்த்துக் கணக்கிடும்போது, அவர்கள் அதிகபட்ச வரிவிதிப்பு வரம்பிலிருந்தால், அந்த வரி விகிதத்துக்கேற்ப வரி கட்ட வேண்டும். இதில் ரூ.1 கோடிக்கும் அதிக வருமானமுள்ள தனிநபர்களின் உண்மையான வரி விகிதம் (Effective Tax Rate ) 35.88 சதவிகிதமாக உள்ளது. (இது 42.74% என 2019 தேர்தலுக்குப் பிந்தைய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு, பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டது). இப்போது இவர்கள் கூடுதலக வரி செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில், நிறுவனமே டிவிடெண்ட் விநியோக வரி செலுத்தியிருந்தால், அது 20.56% என்ற அளவில் இருந்திருக்கும். ஆனால், இப்போது 35.88% என்ற அளவுக்கு வரி செலுத்த வேண்டியிருப்பதால், கூடுதல் வரியைக் கட்டியாக வேண்டும்.
டிவிடெண்ட் விநியோக வரியிலிருந்து நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பங்குதாரர்களுக்கு வழங்கும் டிவிடெண்டுக்கான விநியோக வரியைச் செலுத்தத் தேவையில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சரிசெய்யப்பட்ட குளறுபடி!
இந்த மாற்றத்தால் மேலும் ஒரு குளறுபடி சரிசெய்யப்பட்டுள்ளது. அதாவது, நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் டிவிடெண்ட் என்பது அந்த நிறுவனத்தின் லாபத்திலிருந்து வழங்கப்படுவது. எனவே, நிறுவனங்களுக்கு இந்த லாபத்தின்மீது ஒரு வரியும், முதலீட்டாளர்களுக்கு இந்த லாபத்திலிருந்து டிவிடெண்ட் தரும்போது ஒரு வரியும் மற்றும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான டிவிடெண்ட் பெறும் தனிநபர்களுக்கு மேலும் ஒரு வரியும் விதிக்கப்பட்டுவந்தது. அதாவது, ஒரே வருமானத்துக்கு மூன்று முறை வரி விதிக்கப்பட்டது. அந்தக் குளறுபடி இப்போது நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான டிவிடெண்ட் பெறும் நபர்களுக்கு 10% வரிக் கழிப்பு (TDS) அந்த டிவிடெண்ட் தொகையிலிருந்து கழிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது பங்கு மற்றும் கடன் ஃபண்ட் திட்டங்களிலிருந்து வரும் டிவிடெண்ட் தொகைக்குப் பொருந்தும். இந்த டிவிடெண்டைப் பெறுவதற்கு ஏதேனும் செலவு செய்திருந்தால் உதாரணமாக, கடன் வாங்கி முதலீடு செய்து அதற்கு வட்டி செலுத்தியிருந்தால், அந்தச் செலவினத்தை டிவிடெண்ட் வருமானத்தில் 20% வரை கழித்துக்கொள்ளலாம்.
ஓர் உதாரணத்துடன் இதைப் பார்ப்போம். உங்கள் டிவிடெண்ட் வருமானம் ரூ.50,000 எனில், அந்தக் கடனுக்கான வட்டியாக நீங்கள் எவ்வளவு செலுத்தியிருந்தாலும், டிவிடெண்ட் வருமானத்தில் 20% அதாவது, ரூ.10,000 வரை செலவினமாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு, மீதமுள்ள டிவிடெண்ட் தொகை ரூ.40 ஆயிரத்துக்கு உங்களுக்கிருக்கும் வரி விதிப்பு வரம்புக்கு ஏற்ப வரி செலுத்தினால் போதும். வரி செலுத்துபவர்கள் இந்த டிவிடெண்ட் வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருந்துவிடலாம் என்ற சிந்தனை உங்களுக்கு வரவே வேண்டாம். அதற்குத்தான் 10% வரிக் கழிப்பு செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்பட்ட வரிக்கழிப்பு உங்களின் 26AS பாரத்தில் இடம்பெறும்.
அதிலும்கூட தற்போது ஒரு மாற்றம் வந்திருக்கிறது. வரும் நிதியாண்டில் ஜூன் 1, 2020-க்குப் பிறகு பாரம் 26AS-ல் வரிகளைப் பற்றிய விவரங்கள் மட்டுமல்லாமல், தங்களின் பங்கு முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் நிதித் திட்டங்களில் முதலீடு, சொத்து வாங்கல் விற்றல் தகவல்கள் மற்றும் தங்களின் வங்கிக் கணக்குத் தகவல்கள் போன்றவையும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனிநபர் / நிறுவனத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கையாக இடம்பெறும் என்றும் தெரிகிறது!