மாதச் சம்பளக்காரர்களுக்கு 2019-20-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய 2021 ஜனவரி கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேதி வரை தமிழகத்தில் 34 லட்சம் பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது, கடந்த ஆண்டில் 42 லட்சம் பேராக இருந்தது. முந்தைய ஆண்டைவிட 8 லட்சம் பேர் வரிக் கணக்கு தாக்கல் குறைவாக செய்ய என்ன காரணம் என சென்னையின் முன்னணி ஆடிட்டர் களில் ஒருவரான கே.ஆர்.சத்யநாராயணனிடம் கேட்டோம்.

“வருமான வரித்துறை வரிக் கணக்கை தாக்கல் செய்யும்படி வாரம் ஒருமுறை இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் அனுப்பியது வருமான வரித்துறை. இருந்தாலும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இப்போது பலரும் வீட்டிலிருந்தே வேலை செய்வதால், வரிக் கணக்குத் தாக்கல் செய்வதில் அவர்களுக்கு உதவ யாரும் இல்லை.

பொதுவாக, கடன் வாங்கும்போதுதான் வரிக் கணக்கு தாக்கல் செய்த படிவங்கள் பயன்படு கின்றன. ஆனால், பல வங்கிகள், பார்ம் 16, மூன்று மாத வங்கிக் கணக்கு அறிக்கை, அலுவலகத்தில் கொடுக்கும் சம்பளச் சான்றிதழ் அடிப்படையில் கடன் தந்துவிடுவதால், வரிக் கணக்குத் தாக்கல் பற்றி அதிகம் கவலைப்படாமல் இருக்கிறார்கள்’’ என்றார். இதுவரை தாக்கல் செய்யாதவர்கள் அபராதத்துடன் இனி தாக்கல் செய்வது அவசியம்!