Published:Updated:

தனிநபருக்கான வருமான வரிச் சலுகைகள்..! நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாமே..!

வரிச் சலுகை
பிரீமியம் ஸ்டோரி
வரிச் சலுகை

TAX

தனிநபருக்கான வருமான வரிச் சலுகைகள்..! நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாமே..!

TAX

Published:Updated:
வரிச் சலுகை
பிரீமியம் ஸ்டோரி
வரிச் சலுகை

கொரோனாவுக்குப் பயந்து வீட்டில் முடங்கியதில் முழுசாக மூன்று காலாண்டுகள் ஓடிவிட்டன. நடப்பு (2020 -21) நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைச் சரிசெய்ய இந்தக் கடைசி காலாண்டுதான் பாக்கி.

சம்பளதாரர், இந்து கூட்டுக் குடும்பத்தினர், தனிநபர் மற்றும் தொழில் செய்வோர், வணிகர்கள் என ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனியே வரிச் சலுகையை வகுத்து வைத்துள்ளது வருமான வரிச் சட்டம். அதன்படி தனிநபர் மற்றும் தொழில் செய்வோருக்கான வருமான வரிச் சலுகை எவையென்று பார்க்கலாம்.

ப.முகைதீன் 
சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

வருமான வரி வரம்பு...

ரூ.2.5 லட்சம் வரையான குறைந்த பட்ச வருமானத்துக்கு வரி கிடையாது. இந்தியக் குடிமக்களில் 60 வயதடைந்த மூத்த குடியினருக்கு ரூ.3 லட்சம் வரையிலான வருமானத் துக்கும், 80 வயதான மிக மூத்த குடியினருக்கும் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கும் வருமான வரி இல்லை.

வரிக்கு உட்படாத வருமானம் எவை?

பங்கு நிறுவனம் ஒன்றிடமிருந்து பங்குதாரராக உள்ள தனிநபர் பெறும் பங்கு அல்லது லாபம் முழுவதும்; வெளிநாடு ஒன்றுடன் மத்திய அரசு செய்துள்ள ஒப்பந்தப்படி கூட்டுறவு தொழில்நுட்ப உதவிக்காக வெளிநாட்டு அரசிடம் இருந்து பெறப்படும் ஊதியம் முழுவதும்; 1.6.2.2002-க்கு முன் வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்ட சேமிப்புப் பத்திரங்களின் மூலம் பெறப்படும் வட்டி முழுவதும்; இந்தியாவுக்கு வெளியே தனிநபர் பெறும் வருமானத்துக்கு வெளிநாட்டு அரசு வரி விதிக்குமானால், அந்த வருமானத்துக்கு இந்தியாவில் வரி கிடையாது; பேரிடர் இழப்பீடு முழுவதும் (நிபந்தனை உண்டு); போனஸ் உள்ளிட்ட ஆயுள் காப்பீட்டு பாலிசி மூலம் பெறப்படும் தொகை முழுவதும்; பொதுமக்கள் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF) தொகை முழுவதும்.

சுகன்யா சம்ரிதித் திட்ட முதிர்வுத் தொகை முழுவதும், அதை டெபாசிட் செய்தவருக்கு வரி விலக்கு கிடைக்கும்; தேசிய பென்ஷன் திட்டம் (NPS) முதிர்வுத் தொகையில் 60%; 01.06.2002-க்கு முந்தைய கேப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட் பாண்ட் வட்டித் தொகை முழுவதும்; நிவாரண பாண்ட் வட்டி முழுவதும்; ஸ்காலர்ஷிப் தொகை முழுவதும்; இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் மூலம் பெறப்படும் வருமானம் முழுவதும் (நிபந்தனைக்கு உட்பட்டு); பிசினஸ் டிரஸ்ட் மூலம் பெறப்படும் வருமானம் முழுவதும்; குறிப்பிடப் பட்ட இடத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குறிப்பிடப்பட்ட வருமானம் முழுவதும்; இறந்துபோன ராணுவத்தினரின் மனைவி பெறும் குடும்ப பென்ஷன்; ரிவர்ஸ் மார்ட்கேஜ் திட்டம் மூலம் பெறப் படும் கடன் முழுவதும்; மேற்கண்ட தொகை எதுவும் வருமானக் கணக்கில் சேர்க்கப்படாது. வரி விலக்கு பெற்ற வருமானமாகவே இருக்கும்.

வரிச் சலுகை
வரிச் சலுகை

வரிக்குரிய வருமானத்தில் கழிவு செய்யப்படுபவை எவை?

பணியில் இருக்கும்போது இறந்து போனவரின் மனைவி அல்லது வாரிசுதாரருக்குக் கிடைக்கும் இழப்பீடு முழுவதும்; வேலையில் உள்ளபோது ஏற்படும் காயம் அல்லது இறப்பு காரணமாகத் தரப்படும் கருணைத் தொகை; நிதியாண்டு ஒன்றுக்கு ரூ.50 லட்சம் வரையான ஊக வருமானம் கொண்ட தொழிலில் உள்ளவர்களின் ஊக வருமானத்தில் 50% கழிவு பெறும்.

இரண்டு வீடுகளில் முதலீடு செய்யலாம்...

வீட்டை அல்லது நிலத்தை விற்றதால் கிடைத்த தொகையை நீண்டகாலம் முதலீடு செய்து கிடைக்கும் மூலதன ஆதாயம் அல்லது புதிய வீட்டுக்கான முதலீடு இரண்டில் எது குறைவோ, அந்தத் தொகை வரிக்கழிவு பெறும் (நிபந்தனைக்கு உட்பட்டு). 2019-20-ம் நிதியாண்டு முதல் வரிதாரர் மேற்கண்ட தொகையை இரண்டு வீடுகளில் முதலீடு செய்யலாம். இந்தச் சலுகை வரிதாரரின் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். நீண்டகால முதலீடு லாபம் ரூ.2 கோடிக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். வருமான வரிப்பிரிவு 54B, 54F, 54GB ஆகியவற்றின்கீழ் நீண்டகால முதலீட்டு ஆதாயத்துக்குப் பிற சலுகைகளும் உண்டு. மேற்கண்ட இனங்கள் வருமானக் கணக்கில் கொண்டு வரப்பட்டு கழிக்கப்பட்டுவிடும்.

பொதுவான கழிவுகள்: பிரிவு 80C - இதன் கீழ் 25 வகையான செலவு மற்றும் சேமிப்பு இனங்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமானக் கழிவு பெறலாம்.

செலவு இனங்கள்: பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் படிப்புக்காக பிள்ளைகளுக்கு செய்யப்படும் (நன்கொடை தவிர்த்த) கல்விச் செலவுகள் (ஒருவர் இரு குழந்தைகளுக்கு).

வரிச் சலுகை பெறும் சேமிப்பு இனங்கள்...

தனக்கும் தன் மனைவி, குழந்தை களின் பெயரில் ஆயுள் காப்பீடு, தனக்கும் தன் மனைவி, குழந்தைகளின் அன்யூட்டி திட்ட சந்தா, ஒத்தி வைக்கப்பட்ட அன்யூட்டிக்காக (Deferred annuity) (அதிகபட்சம் 20%) சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் சந்தா, பி.பி.எஃப் சந்தா, அங்கீகரிக்கப்பட்ட வயது முதிர்வு (Superannuation Fund) நிதியத்துக்கான சந்தாவுக்கு வரிச் சலுகை உண்டு.

செல்வமகள் திட்டத்துக்கு வரிச் சலுகை...

செல்வமகள் திட்டம் என்று அழைக்கப்படும் சுகன்யா சம்ருதித் திட்ட சந்தா, தேசிய சேமிப்புப் பத்திரம் (VIII வது வெளியீடு) வாங்குதல், தனக்கு, மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் எடுக்கப்படும் யூலிப் பாலிசிகள், தேசிய வீட்டு வசதி வங்கி டெபாசிட், நீண்ட காலக் கடன் வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் குறிப்பிட்ட திட்டங் களுக்குச் செலுத்தப்படும் சந்தா, காப்பீட்டு நிறுவனத்தின் அன்யூட்டி திட்ட சந்தா, இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பென்ஷன் நிதியத்தில் செய்யப்படும் முதலீடு, வங்கி 5 ஆண்டு கால டேர்ம் டெபாசிட், வேளாண் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD) பாண்டுகளுக்கான சந்தா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கு வரிச் சலுகை உண்டு.

வரிச் சலுகை பெறும் அஞ்சலக 5 ஆண்டு டைம் டெபாசிட்...

அஞ்சலக 5 ஆண்டு டைம் டெபாசிட் முதலானவற்றில் ஏதோ ஒன்றிலோ, பலவற்றிலோ ரூ.1.5 லட்சம் வரை சேமிப்பு / முதலீடு. 80CCC பிரிவு : எல்.ஐ.சி அல்லது அதுபோன்ற காப்பீட்டு நிறுவன பென்ஷன் நிதியத்துக்கான சந்தா. 80CCD பிரிவு: தேசிய பென்ஷன் திட்டம் (NPS) சந்தா ஆகிய 80C, 80CCC மற்றும் 80CCD ஆகிய பிரிவுகளின் ஒட்டுமொத்த கூட்டுத்தொகையான ரூ.1.5 லட்சம் சேமிப்பு வரிச் சலுகை பெறும்.

மருத்துவக் காப்பீட்டுக்கும் வரிச் சலுகை...

80D - இப்பிரிவின் கீழ் தனக்கும் தன் மனைவி மக்களுக்கும் 25,000 ரூபாய் வரை மருத்துவ காப்பீடு செய்யலாம். தனிநபர் 60 வயதினராக இருந்தால் ரூ.50,000 வரை காப்பீட்டுச் சந்தா தொகை வரிச் சலுகை பெறும். இது தவிர தனிநபர் தனது தாய் தந்தை யருக்கும் 25,000 ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு செய்யலாம்.

பெற்றோரில் ஒருவர் 60 வயதினராக இருந்தால். சந்தா வரம்பு பெற்றோருக்கு மட்டும் 50,000 ரூபாயாக இருக்கலாம். மேற்கண்ட பண வரம்பில் 5,000 ரூபாய்க்குள் மருத்துவப் பரிசோதனை செய்துகொள் லாம். இதற்கான தொகையை ரொக்கமாகச் செலுத்தலாம். மேற்கண்ட பண வரம்புக்கு உட்பட்டு 50,000 ரூபாய் வரை மூத்த குடியினருக்கு மருத்துவச் செலவு செய்யவும் சலுகை அனுமதிக்கிறது.

80DD - மாற்றுத் திறனாளி ஒருவர் தனி நபரைச் சார்ந்திருந் தால், அந்த மாற்றுத் திறனாளிக் கான பயிற்சி, பராமரிப்பு, மருத்துவச் செலவுக்காக அதிகபட்சம் ரூ.1.25 செலவு செய்தாலும் அந்தத் தொகைக்கு வரிச் சலுகை உண்டு. (நிபந்தனை களுக்கு உட்பட்டது)

புற்றுநோய் சிகிச்சைக்கு வரிச் சலுகை...

80DDB-சில தீவிரமான நோய்கள் எனப்படும் சிறுநீரகக் கோளாறு புற்றுநோய் முதலான வற்றுக்கு ரூ.40,000 வரை செய்யப்படும் செலவுக்கு வரிச் சலுகை உண்டு. நோய்வாய்ப் பட்டவர் மூத்த குடி எனில், ரூ.1 லட்சம் வரையான செலவுத் தொகையும் வரிச் சலுகை பெறும்.

80E - கல்விக் கடன் வட்டி செலுத்தப்படுமானால், பண வரம்பே இல்லாமல் எட்டு ஆண்டு வட்டித் தொகை வரிச் சலுகை பெறும் (நிபந்தனைக்கு உட்பட்டது).

வீட்டுக் கடனுக்கு வரிச் சலுகை...

80 EE - 2016-2017-ம் நிதி யாண்டில் 35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்டு வாங்கிய வீட்டுக் கடன் வட்டியில் 50,000 ரூபாய் வரிச் சலுகை பெறும்.

80EEA - 01.04.2019 முதல் 31.03.2022 வரை 45 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக் கடன் பெற்றவர் செலுத்தும் வட்டியில் 1.5 லட்சம் ரூபாய் வரிச் சலுகை பெறும். இவர் 80EE பிரிவு சலுகை பெற்றவராக இருக்கக் கூடாது.

80EEB - 01.04.2019 முதல் 31.03.2023 வரை மின் வாகனக் கடன் பெறுவோரின் ரூ.1.5 லட்சம் வரையான வட்டிக்கு வரிச் சலுகை கிடைக்கும்.

சேமிப்புக் கணக்கு மூலம் பெறப்படும் வட்டிக்கு வரிச் சலுகை...

80TTA - 60 வயதுக்கு உட்பட்ட தனி நபருக்கு சேமிப்புக் கணக்கு மூலம் பெறப்படும் வட்டியில் 10,000 ரூபாய் சலுகை பெறும்.

வங்கி, அஞ்சலகம் மற்றும் கூட்டுறவு வங்கிச் சேமிப்புக் கணக்காக இருக்க வேண்டும்.

80TTB - மூத்த குடியினருக்கு, சேமிப்புக் கணக்குடன் இதர டெபாசிட் வட்டிக்கும் சேர்த்து ரூ.50.000 வரிச் சலுகை உண்டு.

80U - தனிநபர் மாற்றுத்திறனாளி எனில் அதற்காக ரூ. 1.25 லட்சம் வரை வரிக் கழிவு பெறலாம்.

வருமான வரித்துறை, வரி கட்டு பவர்களின் எண்ணிக்கையை அதிரிக்கும் முயற்சியில் முனைப்பாக உள்ளது. எனவே, தனிநபர்கள் மேற்கண்ட வரிச் சலுகைகளைப் பயன்படுத்தி முறையாக வரி செலுத்தலாம். வரிச் சலுகை பெறலாம்.

வருமான வரி எவ்வளவு?

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு உட்பட்டிருந்தால், அதற்கான வருமான வரி ரூ.12,500 தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.

பிரிவு 115 BAC-யின்படி, 2020-21 நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள சலுகை வரி பின்கண்டவாறு இருக்கும். இதில் வரிச் சலுகைகள் கிடைக்காது.

ரூ. 2.5 லட்சம் வரை - வரி இல்லை

ரூ. 2.50.001 - ரூ.5 லட்சம் வரை - 5%

ரூ. 5,00,001 - ரூ.7.5 லட்சம் வரை - 10%

ரூ. 7,50,001 - ரூ.10 லட்சம் வரை - 15%

ரூ. 10,00,001 - ரூ.12.5 லட்சம் வரை - 20%

ரூ. 12,50,001 - ரூ.15 லட்சம் வரை - 25%

ரூ. 15 லட்சத்துக்கு மேல் - 30%

பிட்ஸ்

பான் எண்ணை ஆதார் கார்டு எண்ணுடன் இணைப்பதற் கான கடைசி தேதி வருகிற மார்ச் 31 என மத்திய அரசாங்கம் அறிவித்து உள்ளது. ஏற்கெனவே இரு முறை ஒத்திவைக்கப் பட்ட இந்த கெடு தேதி இனியும் ஒத்தி வைக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது!