நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வட்டி, டிவிடெண்ட் விவரங்களைச் சேகரிக்கும் வருமான வரித்துறை! வரிதாரர்கள் செய்ய வேண்டியது என்ன?

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வருமான வரி

T A X

நிறைவடைந்த 2020-21-ம் நிதியாண்டுக்கு 31.07.2021-க்கு முன்னதாக டாக்ஸ் ஃபைலிங் செய்ய வேண்டும் என்பதை யாரும் மறக்க வேண்டாம். தற்போதைய நடைமுறைப்படி, வரிதாரர் ஒவ்வொருவருக்குமான வரித் தாக்கல் படிவத்தை முன்னதாகவே பூர்த்தி (Pre filled) செய்து வைத்துவிடுகிறது வருமான வரித்துறை. 

அதாவது, வரிதாரர் (Assessee) பெற்ற வருமானம், பிடித்தம் செய்யப் பட்ட வரி விவரங்கள் வரிதாரருக்கு உரிய 26AS படிவத்தில் வருமான வரித் துறையால் நிரப்பப்பட்டு விடுகின்றன. இதற்கான தகவல் களைப் பல்வேறு முனையங்கள் மூலம் பெற்றுக்கொள்கிறது வரித்துறை. அந்த வகையில் 2020-21-ம் நிதி ஆண்டில் வரிதாரருக்கு வழங்கப்பட்ட வட்டி விவரங்களைத் தருமாறு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அஞ்சலக பொதுத்தலைவர் ஆகியோருக்கு வேண்டுகோள் அனுப்பப் பட்டுள்ளது. இதேபோல, பங்குதாரர்களுக்கு கம்பெனிகள் டிவிடெண்ட் வழங்கிய விவரங்களை கம்பெனிகளின் இயக்குநர்கள் சமர்ப்பிக்க உள்ளனர். மே 31-க்குள் விவரங்கள் போய்ச் சேர்ந்துவிடும். 

வருமான வரி
வருமான வரி

வட்டி வருமானம்...

சேமிப்புக் கணக்கு, டைம் டெபாசிட்,  ரெக்கரிங் டெபாசிட் மற்றும் இதர டெபாசிட் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வட்டி விவர அட்டவணை.

பிரிவு 80TTA மற்றும் 80 TTB-யின்படியான வரி விலக்குத் தொகையைக் கழிக்கா மல், வழங்கப்பட்ட மொத்த வட்டித் தொகை. 

இணைக் கணக்குகளில் (Joint account) முதன்மைக் கணக்கு (First/primary account holder) உள்ளவர் பெயரில் வட்டி சேர்க்கப்படும்.ஒட்டுமொத்த வட்டி 5,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் மட்டுமே அறிக்கையில் அவரது பெயர் இடம்பெறும். 

டிவிடெண்டுகள்...  

டிவிடெண்ட்டைப் பொறுத்தவரை, எவ்வளவு சிறிய தொகையாக இருந் தாலும், வழங்கப்பட்ட டிவிடெண்ட் பற்றிய விவரம் வருமான வரித்துறைக்கு போய்ச் சேர்ந்துவிடும். 

வட்டி மற்றும் டிவிடெண்ட் வழங்கப் பெற்றவர்களின் பட்டியலில் வரிதாரரின் பெயர், முகவரி, ஆதார், பான், மொபைல் இ-மெயில் விவரங்கள் முழுமையாக அனுப்பப் பட்டுவிடும். 

வருமான வரித்துறை நாடெங் கிலும் நடைபெறும் பணப் பரிவர்த்தனை விவரங்களைப் பல்வேறு தரவுகள் மூலம் பெற முடியும். எனவே, கிடைத்த வட்டியையும், டிவிடெண்ட் தொகையையும் மறைக்காமல், மறக்காமல் வருமான வரித் துறையிடம் காட்டி வரி கட்டிவிடுவது நல்லது!