Published:Updated:

வருமான வரித் திட்டமிடல்... தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்..!

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
வருமான வரி

வருமான வரி

வருமான வரித் திட்டமிடல்... தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்..!

வருமான வரி

Published:Updated:
வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
வருமான வரி

ராமகிருஷ்ணன் வி நாயக், நிதி ஆலோசகர், https://www.dakshincapital.com/

நிதி ஆண்டு 2022 - 23 (2022 ஏப்ரல் 1 - 2023 மார்ச் 31 வரை) தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. வருமான வரித் திட்டமிடலின்போது தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள் பற்றி இனி பார்ப்போம்.

ராமகிருஷ்ணன் வி நாயக்
நிதி ஆலோசகர், 
https://www.dakshincapital.com/
ராமகிருஷ்ணன் வி நாயக் நிதி ஆலோசகர், https://www.dakshincapital.com/

1. வருமான வரிச் சேமிப்பைப் பற்றிய அறியாமை...

பலரும் வருமான வரியை மிச்சப்படுத்துவது பற்றி அறியாமல் இருக்கிறார்கள். அலுவலகத் தின் காசாளர், வருமான வரி பிடிக்கப் போவதாகச் சொல்கிறவரை அது பற்றி யோசிக்காமல் இருக்கிறார்கள். கடைசி நேரத்தில் வரியைச் சேமிக்க ஏதோ ஒரு திட்டத்தில் பணத்தைப் போடுகிறார்கள்.

ஒருவர் எவ்வளவுக்கு வரியைக் கட்ட வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பது பெரிய விஷயமல்ல. வரியை மிச்சப்படுத்த எந்தத் திட்டங்களைத் தேர்வு செய்யலாம் என்பது தான் முக்கியமான விஷயம். வரிச் சலுகை கிடைக்கிறது என்பதற்காகத் தவறான திட்டங் களைத் தேர்வு செய்வது கூடாது.

சிலருக்கு ஒரு நிதி ஆண்டில் எவ்வளவுக்கு மேல் சம்பாதித்தால் / சம்பளம் வாங்கினால் வரி கட்ட வேண்டும், வரியை மிச்சப்படுத்த எவ்வளவு சேமிக்க / முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறது. நம் நாட்டில் 60 வயதுக்கு உட்பட்டவர்களின் வருமானம் நிதி ஆண்டில் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும் பட்சத்தில், அவர் வருமான வரி வரம்புக்குள் வருகிறார். இந்த ரூ.2.5 லட்சத்தில் எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டி, டிவிடெண்ட் வருமானம் போன்றவையும் சேரும். 60 - 80 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சம் வரைக்கும் வரி இல்லை. இதேபோல், 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்தக் குடிமக் களுக்கு ரூ.5 லட்சம் வரைக்கும் வரி இல்லை.

இவர்கள் வரிச்சலுகை அளிக்கும் முதலீடுகள் மற்றும் செலவுகளை மேற்கொள்வது மூலம் தங்களின் வரிக்கு உட்பட்ட வருமானத்தை குறிப்பிட்ட வரம்புக்குள் கொண்டுவரும் பட்சத்தில் வரி கட்ட வேண்டிய அவசியம் இருக்காது. தவிர, ரூ.5 லட்சத்துக்கு உட்பட்டவர் களுக்கு ரூ.12,500 வரித் தள்ளுபடி உண்டு.

அந்த வகையில், வரிச் சலுகை முதலீடுகள் எல்லாம் செய்தது போக, வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குள்கீழ் இருந்தால், அவர் எந்த வரியையும் கட்ட வேண்டியிருக்காது. உதாரணமாக, ஒருவரின் நிதி ஆண்டு சம்பளம் ரூ.6.5 லட்சம். இவர் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம், 80டி பிரிவின் கீழ் ரூ.10,000 லட்சம் வரியைச் சேமிக்கிறார் எனில், இவரின் வரிக்கு உட்படும் வருமானம் ரூ.4.9 லட்சமாகக் குறைந்துவிடும் நிலையில், அவர் வரி எதுவும் கட்ட வேண்டியிருக்காது.

2. ஆயுள் காப்பீட்டு பாலிசி மட்டுமே வரியை மிச்சப்படுத்தும்...

வருமான வரியை மிச்சப்படுத்தத் திட்டமிடும் பெரும்பாலா னோர் செய்யும் முக்கியமான தவறு இதுவாகும். பணப்பலன் அளிக்கும் ஆயுள் காப்பீட்டு பாலிசியை (Endowment Life Insurance Policy) எடுத்துவிட்டு, அதற்கு அதிகப்படியான பிரீமியத்தைக் கட்டி 80சி பிரிவின் அதிகபட்ச வரிச் சேமிப்பான ரூ.1.5 லட்சத்தை நிறைவு செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த பாலிசிகளில் கட்டும் ஆண்டு பிரீமியத்தைப்போல் 7 முதல் 10 மடங்கு தொகைக்குத்தான் கவரேஜ் இருக்கிறது. மேலும், இந்த பாலிசிகள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு சுமார் 5 சதவிகிதத்துக்குள்தான் இருக்கிறது.

ஆயுள் காப்பீட்டின் நோக்கம், வருமானம் ஈட்டும் நபர் உயிருடன் இல்லாதபோது அதிக தொகை இழப்பீடாகக் கிடைப்பதன்மூலம் குடும்ப உறுப்பினர்கள் நிதி ரீதியாகப் பாதுகாப்பாக இருப்பதுதான். இதற்கு, குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான்கள்தான் சரியான தேர்வாக இருக்கும். 30 வயதானவருக்கு 30 ஆண்டுகளுக்கான பாலிசியில் ரூ.1 கோடி கவரேஜுக்கு சுமார் ரூ.15,000தான் பிரீமியமாகும்.

காப்பீட்டையும் சேமிப்பையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும். காப்பீட்டுக்கு டேர்ம் பிளானையும் முதலீட்டுக்கு பி.பி.எஃப், என்.பி.எஸ், தேசிய சேமிப்புப் பத்திரம் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.

வருமான  வரித்  திட்டமிடல்... தவிர்க்க  வேண்டிய 7  முக்கியமான  தவறுகள்..!

3. எவற்றுக்கெல்லாம் வரிச் சலுகை கிடைக்கும் எனத் தெரியாமல் இருப்பது...

பெரும்பாலானோருக்கு வரிச் சேமிப்பு எனில், 80C பிரிவின்கீழ் வரும் முதலீடுகள் மற்றும் 80D பிரிவின்கீழ் மருத்துவக் காப்பீட்டு பாலிசிக்குக் கட்டும் பிரீமியம்தான் நினைவுக்கு வருகிறது. இவை தவிர, கல்விக் கடனுக்கான வட்டி (80E), வீட்டுக் கடன் வட்டி (24), விடுமுறை பயணப்படி (LTA) உள்ளிட்ட செலவு களுக்கும் வரிச்சலுகை இருக்கிறது. இது தெரியாமல் இருப்பதால், பல நேரங்களில் மேற்கண்ட செலவுகளைச் செய்திருந்தாலும் வரிச் சலுகை பெறாமல் இருக்கிறார்கள். இன்னும் பலர் பெற்றோருக்கு எடுக்கும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிக்கு மகன்/மகள் கட்டும் பிரீமியத்துக்கும் பிள்ளைகள் வரிச்சலுகை பெறமுடியும் என்பது தெரியாமல் இருக்கிறார்கள்.

4. முதலீடு செய்யும்போது வரிச் சேமிப்பை மட்டுமே கவனிப்பது...

வரிச் சேமிப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு முதலீடு செய்யும் தவற்றைப் பலரும் செய்கிறார்கள். அந்த முதலீட்டில் என்ன ரிஸ்க், எத்தனை ஆண்டுகளுக்கு முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியாது, எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது போன்ற விஷயங் களைப் பலரும் கவனிப்ப தில்லை. இதனால், அவர் களின் அவசரத் தேவைகளை இந்த முதலீடுகள் நிறைவேற்றாமல் போய்விடுகின்றன. எனவே, ஒரு முதலீட்டை மேற்கொள்ளும்போது அதன் முதலீட்டுக் காலம் எவ்வளவு, எவ்வளவு நாளைக்குப் பணம் எடுக்க முடியாது, அதிலிருந்து கடன் வாங்கும் வசதி இருக் கிறதா என்பதைக் கவனிப்பது மிக முக்கியமாகும்.

வரிச் சேமிப்புக்காகச் செய்யப்படும் தொகை அடுத்துவரும் 3 - 5 ஆண்டு களில் தேவை எனில், அதை பி.பி.எஃப்பில் போடக் கூடாது. அதற்குப் பதிலாக, மூன்றாண்டுகள் மட்டுமே ‘லாக்இன்’ கொண்ட இ.எல்.எஸ்.எஸ் (ELSS) ஃபண்ட் அல்லது ஐந்தாண்டு ‘லாக்இன்’ கொண்ட தேசிய சேமிப்புப் பத்திரம் (NSE) போன்றவற்றில் முதலீடு செய்து வரலாம்.

5. வரிச் சேமிப்பை ஜனவரி, பிப்ரவரியில்தான் ஆரம்பிப்பது...

பலரும் வருமான வரிச் சேமிப்பைப் புத்தாண்டு பிறந் ததும் ஜனவரி, பிப்ரவரியில் திட்டமிடுகிறார்கள். இந்த மாதங்களின் பெயரில் ‘வரி’ இருக்கிறது என்பதால், அப்போதுதான் நினைவுக்கு வருகிறதோ என்னவோ?

ஜனவரி பிறக்கும்போது நிதி ஆண்டில் ஒன்பது மாதங் கள் நிறைவு பெற்றிருக்கும். கடைசி நேரத்தில் வரிச் சேமிப்புக்குத் திட்டமிடும் போது கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படு கிறார்கள் அல்லது வரிச் சேமிப்புக்கு முதலீடு செய்ய முடியாமல் போகும் நிலை உருவாகிறது.

மேலும், பங்குச் சந்தை யுடன் தொடர்புடைய யூலிப் இன்ஷூரன்ஸ் மற்றும் வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டான இ.எல்.எஸ்.எஸ் ஆகியவற்றில் நிதி ஆண்டின் ஆரம்பம் முதல் முதலீடு செய்து வந்தால் மட்டுமே ‘ருபி காஸ்ட் ஆவரேஜ்’ முறையில் சராசரியாக அதிக யூனிட்டுகள் கிடைக்கும்.

வருமான  வரித்  திட்டமிடல்... தவிர்க்க  வேண்டிய 7  முக்கியமான  தவறுகள்..!

6. வரிச் சேமிப்பு முதலீடு மூலமான வருமானத்தின் வரி நிலை பற்றி அறியாதது...

வருமான வரியை மிச்சப் படுத்த முதலீடு செய்யும் போது, அதன் மூலமாகக் கிடைக்கும் வருமானத்துக்கு வரியைக் கட்ட வேண்டுமா என்பதைக் கவனிக்காமல் இருக்கிறார்கள். உதாரண மாக, ஐந்தாண்டு வங்கி எஃப்.டி-யின் வரிச் சேமிப்புக் காக முதலீடு செய்யும்போது அதன் வட்டி வருமானம் வரிக்கு உட்பட்டது. எஃப்.டி-க்கான வட்டி மிகவும் குறைவு. மேலும், வட்டி வருமானத்துக்கு வரி கட்டிய பிறகு மிகவும் குறைவான தொகையாக இருக்கும்.

தற்போதைய நிலையில், வரிச் சேமிப்புக்கான எஃப்.டி-யின் வட்டி சுமார் 5.5 சதவிகிதமாக உள்ளது. இதற்கு 20% - 30% வரியைக் கட்டிய பிறகு உண்மை யான வருமானம் முறையே 4.4%, 3.85 சதவிகிதமாக இருக்கும். இது பணவீக்க விகிதத்தைவிடக் குறைவாக இருக்கிறது. எனவே, வரிச் சேமிப்பு முதலீடு என்றாலும் அதன் மூலமாக வருமானம் பணவீக்க விகிதத்தைவிட ஓரிரு சதவிகிதம் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

7. வரிச் சேமிப்பை நிதி இலக்குகளுடன் இணைக்காதது...

வரிச் சேமிப்பை நிதி இலக்குகளுடன் (Financial Goals) இணைக்காத தவற்றையும் பலர் செய்கின்றனர். வரிச் சேமிப்பையும் நிதி இலக்கையும் இணைக்கும் போது எந்த முதலீடும் செலவும் சரியானதாக இருக்கும். உதாரணமாக, ஒருவர் ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும் எனில், அவர் குறைவான பிரீமியத்தில் ஆயுள் காப்பீடு மட்டுமே அளிக்கும் டேர்ம் பிளான் எடுப்பார். ஆண்டுதோறும் வரியைச் சேமிக்க எண்டோவ்மென்ட் பாலிசி எடுக்க மாட்டார்.

மேலும் ஓய்வுக் காலத்துக்குத் திட்ட மிடுகிறார் எனில், 15 ஆண்டுக்கால பி.பி.எஃப் மற்றும் பணிக்காலம் வரைக்குமான நேஷனல் பென்ஷன் திட்டத்தில் (NPS) முதலீடு செய்வதே சரி. மேலும், பெண் பிள்ளை இருக்கும் பட்சத்தில் அவரின் உயர்கல்வி, திருமணத் துக்குத் திட்டமிட்டால், செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக் கும். இந்த முதலீட்டில் அதிக வட்டி கிடைப்ப துடன், முதலீடு, முதலீட்டுப் பெருக்கம், முதிர்வுத் தொகைக்கு வரி எதுவும் கிடையாது.