Published:Updated:

சொத்து வரி உயர்வால் அதிகரிக்கும் வீடு, கட்டட வாடகை..!

சொத்து வரி
பிரீமியம் ஸ்டோரி
சொத்து வரி

சொத்து வரி

சொத்து வரி உயர்வால் அதிகரிக்கும் வீடு, கட்டட வாடகை..!

சொத்து வரி

Published:Updated:
சொத்து வரி
பிரீமியம் ஸ்டோரி
சொத்து வரி

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள் ளது பற்றி இப்போது விவாதித்து வரு கிறார்கள். நலத்திட்ட உதவிகளை சுலப மாக நிறைவேற்ற தமிழகத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை (Property Tax) அதிகரித்துள்ளதாகத் தமிழக அரசு சொல்லியிருக்கிறது.

ஆர்.ஜெகதீஷ் 
ஆடிட்டர், தேனி
ஆர்.ஜெகதீஷ் ஆடிட்டர், தேனி

சொத்து வரி எவ்வளவு அதிகரிப்பு?

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 600 சதுர அடிக்கும் குறைவான குடியிருப்புகளுக்கு 25%, 601 முதல் 1,200 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 50%, 1,201 முதல் 1,800 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 75%, 1,800 சதுர அடிக்கு மேலான குடியிருப்பு களுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. வணிகக் கட்டடங்களுக்கு 100%, தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு 75% உயர்த்தப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளுக்கும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. சென்னையின் பிரதான நகரப் பகுதியில் 600 சதுர அடிக்குக் குறைவான குடியிருப்புகளுக்கு 50%, சென்னையுடன் 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் 25% உயர்த்தப் படுகிறது. 600 - 1,200 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 50%, 1,201 - 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 75%, 1,801 சதுர அடிக்கு மேலான குடியிருப்புக் கட்டடங் களுக்கு 100% உயர்த்தப்படுகிறது.

சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் உள்ள 600 - 1200 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 75%, 1,201 - 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 100%, 1,801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு களுக்கான சொத்து வரி 150% உயர்த்தப்படுகிறது. சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் வணிகப் பயன்பாட்டு கட்டடங்களுக்கு 150%, தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங் களுக்கு 100% உயர்த்தப்படுகிறது.

சொத்து வரி உயர்வால் 
அதிகரிக்கும் வீடு, கட்டட வாடகை..!

எவ்வளவு பேருக்கு கூடுதல் சுமை?

தமிழ்நாட்டில் மொத்தம் 77.87 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இதில் 7% வீடுகளுக்கு 100 முதல் 150% வரை சொத்து வரி உயர்த்தப் பட்டுள்ளது. பெரும்பான்மையானவர்களுக்கு அதாவது, 83 சதவிகிதத்தினருக்கு 25% - 50% வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப் பட்ட வரி விகிதங்கள் மாறுபட்டாலும் 77.87 லட்சம் வீடுகளுக்கும் சொத்து வரி உயர்த்தப் பட்டுள்ளது. சென்னையில் 600 சதுர அடி குடியிருப்புக்கான அதிகபட்ச சொத்து வரி ரூ.3,240-லிருந்து ரூ.4,860-ஆக உயரக்கூடும். கோயமுத்தூரில் 600 சதுர அடி குடியிருப்புக்கான சொத்து வரி ரூ. 972-லிருந்து ரூ.1,215 ஆக உயர்கிறது. பெங்களூருவில் இதே பரப்பு வீட்டுக்கான சொத்து வரி ரூ.8,860 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.15,984 ஆகவும், புனேவில் ரூ.ரூ.17,112 ஆகவும், மும்பையில் ரூ.84,583 ஆகவும் இருக்கிறது.

தமிழகம் முழுக்க சொத்து வரி உயர்வால் வீட்டு உரிமையாளர்கள், வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருப்பவர்கள், கட்டடங்களை கட்டி வாடகைக்கு விட்டிருப்பவர்கள், சொந்தக் கட்டடங்களில் அலுவலகங் களைக் கொண்டிருப்பவர்கள், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், வாடகைக் கட்டடங்களில் அலுவல கங்களைக் கொண்டிருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் கூடுதல் வரி கட்ட வேண்டியிருக்கும். நீண்ட காலமாக அதிகரிக்காமல், ஒரே நேரத்தில் அதிகரிப்பதால் சுமையாகத் தெரிகிறது. இந்தச் சொத்து வரி உயர்வால் கண்டிப்பாக, இதன் விகிதாசாரத்துக்கேற்ப வீட்டு வாடகை மற்றும் கட்டட வாடகை அதிகரிக்கும் என்பதே முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

ஒரு நிதி ஆண்டில் குறிப்பிட்ட சொத்தின் மூலம் கிடைக்கும் வாடகை வருமானம் சொத்தின் ஆண்டு மதிப்பு (Annual value of property) எனப்படுகிறது. இந்தத் தொகையிலிருந்து உள்ளாட்சி அமைப்புக்கு அந்த ஆண்டில் கட்டிய சொத்து வரியைக் கழித்துக்கொண்டு வருமான வரி கட்ட வேண்டும். உள்ளாட்சி மதிப்பு, வாடகை ரசீது எது குறைவோ, அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதற்கு வருமான வரி கட்ட வேண்டும். ஆனால், சொந்த வீட்டில் குடியிருப்பவர்கள், சொந்தக் கட்டடங்களில் அலுவலகம் வைத்திருப்பவர்களுக்கு வாடகை வருமானம் வராது என்பதால் அவர்கள் அதிகரிக்கப்பட்ட முழு சொத்து வரியையும் கட்டிதான் ஆக வேண்டும். அது அவர்களுக்குக் கூடுதல் சுமையாக அமையும். வாடகைக்கு விட்டிருப்பவர்கள், அதிகமாக சொத்து வரி கட்ட வேண்டியிருக்கும். இந்த நிலையில் அவர்கள், அதை ஈடுகட்ட வாடகையை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகும்.

வீட்டை வாடகைக்கு விடாமலும் சொந்தப் பயன் பாட்டுக்கு வைக்காமலும் இருப்பவர்கள் சொத்து மற்றும் வாடகைக்கு விடப்பட்டதாகக் கருதிக்கொண்டு (Notional income) அதற்கான வருமான வரியையும் கட்ட வேண்டியிருக்கும். இதனால், கூடுதல் வரி கட்ட வேண்டியிருக்கும் என்பது நிச்சயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism